Murugan Songs: கந்தன் திருநீறு அணிந்தால் Lyrics in Tamil:
கந்தன் திருநீறு அணிந்தால் கண்டபிணி ஓடிவிடும்
குந்தகங்கள் மாறி இன்பம் குடும்பத்தை நாடிவரும். (கந்தன்).
சுந்தரவேல் அபிஷேக சுத்தத் திருநீறு அணிந்தால்
வந்தமர்ந்த மூத்தவளும் வழிபார்த்து போய்விடுவாள்
அந்தநேரம் பார்த்திருந்த அன்னை செல்வம் ஓடிவந்து
சிந்தையை குளிரவைக்க சொந்தம் கொண்டாடிடுவாள். (கந்தன்).
மனம் மிகுந்த சாம்பலிலே மகிமை இருக்குதடா
மனமுடன் அணிவோர்க்கு மகிழ்ச்சியை பெருக்குதடா
தினம் தினம் நெற்றியிலே திருநீறு அணிந்திடுடா
தீர்ந்திடும் அச்சமெல்லாம் தெய்வம் துணை காட்டுமாடா. (கந்தன்).
Add Comment