Palani Malai Meethile Thunaivan in Tamil:
॥ பழனி மலை மீதிலே ॥
பழனி மலை மீதிலே
குழந்தை வடிவாகவே
படைவீடு கொண்ட முருகா
பால் பழம் தேனோடு,
பஞ்சாமிர்தம் தந்து,
பக்தரைக் காக்கும் முருகா!
ஜெயமுண்டு பயமில்லை வேல் வேல்! –
சக்தி வடிவுண்டு, மயிலுண்டு,
கொடியுண்டு! வேல் வேல்!
ஜெயமுண்டு பயமில்லை வேல் வேல்!
வடம் இட்ட பசும் தங்கத் தேரு
எங்கும் ஒளி சிந்த இழுக்கின்ற, கரம் பல நூறு
இடைத் தொட்ட கைக்கொண்ட பிள்ளை – எங்கள்
இயல் இசை நாடகத் தமிழுக்கு எல்லை! முருகா
இயல் இசை நாடகத் தமிழுக்கு எல்லை!
வேல் வேல்!
சக்தி வேல் வேல்!
வெற்றி வேல் வேல்!
ஞான வேல் வேல்!
Palani Malai Meethile Thunaivan Lyrics in Tamil | Murugan Song