Thiruchendoorin Kadalorathil Senthil Nadhan in Tamil:
॥ திருச்செந்தூரின் கடலோரத்தில் ॥
திருச்செந்தூரின் கடலோரத்தில்
செந்தில்நாதன் அரசாங்கம்
தேடித்தேடி வருவோர்க்கெல்லாம்
தினமும் கூடும் தெய்வாம்சம் (திருச்செந்தூரின்)
அசுரரை வென்ற இடம் – அது
தேவரைக் காத்த இடம்
ஆவணி மாசியிலும் – வரும்
ஐப்பசித் திங்களிலும்
அன்பர் திருநாள் காணுமிடம் (திருச்செந்தூரின்)
கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள்
தலையா கடல் அலையா
குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும்
குமரனவன் கலையா
மங்கையரின் குங்குமத்தைக் காக்கும் முகம் ஒன்று
வாடுகின்ற ஏழைகளைக் காணும்முகம் ஒன்று
சஞ்சலத்தில் வந்தவரை தாங்கும்முகம் ஒன்று
சாதிமத பேதமின்றிப் பார்க்கும்முகம் ஒன்று
நோய்நொடிகள் தீர்த்துவைக்கும் வண்ணமுகம் ஒன்று
நூறுமுகம் காட்டுதம்மா ஆறுமுகம் இங்கு (திருச்செந்தூரின்)
பொன்னழகு மின்னிவரும் வண்ணமயில் கந்தா
கண்மலரில் தன்னருளைக் காட்டிவரும் கந்தா
நம்பியவர் வந்தால் நெஞ்சுருகி நின்றால்
கந்தா முருகா வருவாய் அருள்வாய் -முருகா
Also Read:
Thiruchendoorin Kadalorathil Sendhil Nadhan in Tamil | English