Templesinindiainfo

Best Spiritual Website

Sri Kalikambal 108 Potri lyrics in Tamil | Sri Kalikambal Mantra

ஸ்ரீ காளிகாம்பாள் 108 போற்றிகள் !!!

ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி
ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி
ஓம் அருமறையின் வரம்பே போற்றி
ஓம் அறம் வளர்க்கும் அம்மையே போற்றி
ஓம் அரசிளங் குமரியே போற்றி
ஓம் அப்பர் பிணிமருந்தே போற்றி
ஓம் அமுத நாயகியே போற்றி
ஓம் அருந்தவ நாயகியே போற்றி
ஓம் அருள் நிறை அம்மையே போற்றி
ஓம் ஆலவாய்க்கரசியே போற்றி || 10 ||

ஓம் ஆறுமுகத்தின் அன்னையே போற்றி
ஓம் ஆதியின் பாதியே போற்றி
ஓம் ஆலால சுந்தரியே போற்றி
ஓம் ஆனந்த வல்லியே போற்றி
ஓம் இளவஞ்சிக்கொடியே போற்றி
ஓம் இமயத்தரசியே போற்றி
ஓம் இடபத்தோன் துணையே போற்றி
ஓம் ஈஸ்வரியே போற்றி
ஓம் உயிர் ஓவியமே போற்றி
ஓம் உலகம்மையே போற்றி || 20 ||

ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி
ஓம் எண் திசையும் வென்றாய் போற்றி
ஓம் ஏகன் துணையே போற்றி
ஓம் ஐங்கரன் அன்னையே போற்றி
ஓம் ஐயம் தீர்ப்பாய் போற்றி
ஓம் ஒப்பிலா அமுதே போற்றி
ஓம் ஓங்கார சுந்தரியே போற்றி
ஓம் கற்றோர்க்கு இனியோய் போற்றி
ஓம் கல்லார்க்கும் எளியோய் போற்றி
ஓம் கடம்பவன சுந்தரியே போற்றி || 30 ||

ஓம் கல்யாண சுந்தரியே போற்றி
ஓம் கனகமணிக்குன்றே போற்றி
ஓம் கற்பின் சுந்தரியே போற்றி
ஓம் கருணை ஊற்றே போற்றி
ஓம் கல்விக்கு வித்தே போற்றி
ஓம் கனகாம்பிகையே போற்றி
ஓம் கதிரொளிச்சுடரே போற்றி
ஓம் கற்பனை கடந்த கற்பகமே போற்றி
ஓம் காட்சிக்கினியாய் போற்றி
ஓம் காலம் வென்ற கற்பகமே போற்றி || 40 ||

ஓம் காமாட்சி அம்பிகையே போற்றி
ஓம் காளிகாம்பாள் அம்பிகையே போற்றி
ஓம் கிளியேந்திய கரத்தோய் போற்றி
ஓம் குலச்சிறை காத்தோய் போற்றி
ஓம் குற்றம் பொறுக்கும் குணமே போற்றி
ஓம் கூடர்கலாப மயிலே போற்றி
ஓம் கோலப் பசுங்கிளியே போற்றி
ஓம் சம்பந்தன் ஞான தாயே போற்றி
ஓம் ஷக்தி வடிவே போற்றி
ஓம் சங்கம் வளர்தோய் போற்றி || 50 ||

ஓம் சிவாகம சுந்தரியே போற்றி
ஓம் சித்தம் தெளிவிப்பாய் போற்றி
ஓம் சிவயோக நாயகியே போற்றி
ஓம் சிவானந்த வல்லியே போற்றி
ஓம் சிங்கார வல்லியே போற்றி
ஓம் செந்தமிழ் தாயே போற்றி
ஓம் செல்வத்துக்குக் கரசியே போற்றி
ஓம் சேனைத் தலைவியே போற்றி
ஓம் சொக்கர் நாயகியே போற்றி
ஓம் சைவநெறி நிலைக்கச்செய்தாய் போற்றி || 60 ||

ஓம் ஞானாம்பிகையே போற்றி
ஓம் ஞான பூங்கோதையே போற்றி
ஓம் தமிழர் குலைச்சுடரே போற்றி
ஓம் திருவுடையம்மையே போற்றி
ஓம் திசையெல்லாம் புரந்தாய் போற்றி
ஓம் திரிபுர சுந்தரியே போற்றி
ஓம் திருநிலை நாயகியே போற்றி
ஓம் தீந்தமிழ் சுவையே போற்றி
ஓம் தெவிட்டாத தெள்ளமுதே போற்றி
ஓம் தென்னவன் செல்வியே போற்றி || 70 ||

ஓம் தேன்மொழி அம்மையே போற்றி
ஓம் தையல் நாயகியே போற்றி
ஓம் நற்கனியின் சுவையே போற்றி
ஓம் நற்றவத்தின் கொழுந்தே போற்றி
ஓம் நல்ல நாயகியே போற்றி
ஓம் நீலாம்பிகையே போற்றி
ஓம் நீதிக்கரசியே போற்றி
ஓம் பக்தர் தம் திலகமே போற்றி
ஓம் பழமறையின் குருந்தே போற்றி
ஓம் பரமானந்த பெருக்கே போற்றி || 80 ||

ஓம் பண்ணமைந்த சொல்லே போற்றி
ஓம் பவளவாய் கிளியே போற்றி
ஓம் பசுபதி நாயகியே போற்றி
ஓம் பாகம்பிரியா அம்மையே போற்றி
ஓம் பாண்டிமா தேவியின் தேவி போற்றி
ஓம் பார்வதி அம்மையே போற்றி
ஓம் பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி
ஓம் பெரிய நாயகியே போற்றி
ஓம் பொன்மயிலம்மையே போற்றி
ஓம் பொற்க்கொடி அம்மையே போற்றி || 90 ||

ஓம் மங்கல நாயகியே போற்றி
ஓம் மழலைக் கிளியே போற்றி
ஓம் மனோன்மணித்தாயே போற்றி
ஓம் மண் சுமத்தோன் மாணிக்கமே போற்றி
ஓம் மாயோன் தங்கையே போற்றி
ஓம் மாணிக்க வல்லியே போற்றி
ஓம் மீனவர்கோன் மகளே போற்றி
ஓம் மீனாட்சியம்மையே போற்றி
ஓம் முழு ஞானப்பெருக்கே போற்றி
ஓம் முக்கண் சுடர் விருந்தே போற்றி || 100 ||

ஓம் யாழ்மொழி அம்மையே போற்றி
ஓம் வடிவழகம்மையே போற்றி
ஓம் வேலனுக்கு வேல் தந்தோய் போற்றி
ஓம் வேத நாயகியே போற்றி
ஓம் சௌந்தராம்பிகையே போற்றி
ஓம் வையகம் வாழ்விப்பாய் போற்றி
ஓம் அம்மையே அம்பிகையே போற்றி
ஸ்ரீ காமாட்சி அம்மையே போற்றி
ஸ்ரீ காளிகாம்பாள் அம்மையே போற்றி
ஸ்ரீ காளிகாம்பாள் அம்மையே போற்றி போற்றி || 110 ||

Sri Kalikambal 108 Potri lyrics in Tamil | Sri Kalikambal Mantra

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to top