Sri Venkateswara Suprabhatam Lyrics in Tamil:
|| ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம் ||
கௌஸல்யா ஸுப்ரஜா ராம பூர்வாஸம்த்யா ப்ரவர்ததே |
உத்திஷ்ட னரஶார்தூல கர்தவ்யம் தைவமாஹ்னிகம் || 1 ||
உத்திஷ்டோத்திஷ்ட கோவிம்த உத்திஷ்ட கருடத்வஜ |
உத்திஷ்ட கமலாகாம்த த்ரைலோக்யம் மம்களம் குரு || 2 ||
மாதஸ்ஸமஸ்த ஜகதாம் மதுகைடபாரேஃ
வக்ஷோவிஹாரிணி மனோஹர திவ்யமூர்தே |
ஶ்ரீஸ்வாமினி ஶ்ரிதஜனப்ரிய தானஶீலே
ஶ்ரீ வேம்கடேஶ தயிதே தவ ஸுப்ரபாதம் || 3 ||
தவ ஸுப்ரபாதமரவிம்த லோசனே
பவது ப்ரஸன்னமுக சம்த்ரமம்டலே |
விதி ஶம்கரேம்த்ர வனிதாபிரர்சிதே
வ்றுஶ ஶைலனாத தயிதே தயானிதே || 4 ||
அத்ர்யாதி ஸப்த றுஷயஸ்ஸமுபாஸ்ய ஸம்த்யாம்
ஆகாஶ ஸிம்து கமலானி மனோஹராணி |
ஆதாய பாதயுக மர்சயிதும் ப்ரபன்னாஃ
ஶேஷாத்ரி ஶேகர விபோ தவ ஸுப்ரபாதம் || 5 ||
பம்சானனாப்ஜ பவ ஷண்முக வாஸவாத்யாஃ
த்ரைவிக்ரமாதி சரிதம் விபுதாஃ ஸ்துவம்தி |
பாஷாபதிஃ படதி வாஸர ஶுத்தி மாராத்
ஶேஷாத்ரி ஶேகர விபோ தவ ஸுப்ரபாதம் || 6 ||
ஈஶத்-ப்ரபுல்ல ஸரஸீருஹ னாரிகேள
பூகத்ருமாதி ஸுமனோஹர பாலிகானாம் |
ஆவாதி மம்தமனிலஃ ஸஹதிவ்ய கம்தைஃ
ஶேஷாத்ரி ஶேகர விபோ தவ ஸுப்ரபாதம் || 7 ||
உன்மீல்யனேத்ர யுகமுத்தம பம்ஜரஸ்தாஃ
பாத்ராவஸிஷ்ட கதலீ பல பாயஸானி |
புக்த்வாஃ ஸலீல மதகேளி ஶுகாஃ படம்தி
ஶேஷாத்ரி ஶேகர விபோ தவ ஸுப்ரபாதம் || 8 ||
தம்த்ரீ ப்ரகர்ஷ மதுர ஸ்வனயா விபம்ச்யா
காயத்யனம்த சரிதம் தவ னாரதோஉபி |
பாஷா ஸமக்ர மஸத்-க்றுதசாரு ரம்யம்
ஶேஷாத்ரி ஶேகர விபோ தவ ஸுப்ரபாதம் || 9 ||
ப்றும்காவளீ ச மகரம்த ரஸானு வித்த
ஜும்காரகீத னினதைஃ ஸஹஸேவனாய |
னிர்யாத்யுபாம்த ஸரஸீ கமலோதரேப்யஃ
ஶேஷாத்ரி ஶேகர விபோ தவ ஸுப்ரபாதம் || 10 ||
யோஷாகணேன வரதத்னி விமத்யமானே
கோஷாலயேஷு ததிமம்தன தீவ்ரகோஷாஃ |
ரோஷாத்கலிம் விதததே ககுபஶ்ச கும்பாஃ
ஶேஷாத்ரி ஶேகர விபோ தவ ஸுப்ரபாதம் || 11 ||
பத்மேஶமித்ர ஶதபத்ர கதாளிவர்காஃ
ஹர்தும் ஶ்ரியம் குவலயஸ்ய னிஜாம்கலக்ஷ்ம்யாஃ |
பேரீ னினாதமிவ பிப்ரதி தீவ்ரனாதம்
ஶேஷாத்ரி ஶேகர விபோ தவ ஸுப்ரபாதம் || 12 ||
ஶ்ரீமன்னபீஷ்ட வரதாகில லோக பம்தோ
ஶ்ரீ ஶ்ரீனிவாஸ ஜகதேக தயைக ஸிம்தோ |
ஶ்ரீ தேவதா க்றுஹ புஜாம்தர திவ்யமூர்தே
ஶ்ரீ வேம்கடாசலபதே தவ ஸுப்ரபாதம் || 13 ||
ஶ்ரீ ஸ்வாமி புஷ்கரிணிகாப்லவ னிர்மலாம்காஃ
ஶ்ரேயார்தினோ ஹரவிரிம்சி ஸனம்தனாத்யாஃ |
த்வாரே வஸம்தி வரனேத்ர ஹதோத்த மாம்காஃ
ஶ்ரீ வேம்கடாசலபதே தவ ஸுப்ரபாதம் || 14 ||
ஶ்ரீ ஶேஷஶைல கருடாசல வேம்கடாத்ரி
னாராயணாத்ரி வ்றுஷபாத்ரி வ்றுஷாத்ரி முக்யாம் |
ஆக்யாம் த்வதீய வஸதே ரனிஶம் வதம்தி
ஶ்ரீ வேம்கடாசலபதே தவ ஸுப்ரபாதம் || 15 ||
ஸேவாபராஃ ஶிவ ஸுரேஶ க்றுஶானுதர்ம
ரக்ஷோம்புனாத பவமான தனாதி னாதாஃ |
பத்தாம்ஜலி ப்ரவிலஸன்னிஜ ஶீர்ஷதேஶாஃ
ஶ்ரீ வேம்கடாசலபதே தவ ஸுப்ரபாதம் || 16 ||
தாடீஷு தே விஹகராஜ ம்றுகாதிராஜ
னாகாதிராஜ கஜராஜ ஹயாதிராஜாஃ |
ஸ்வஸ்வாதிகார மஹிமாதிக மர்தயம்தே
ஶ்ரீ வேம்கடாசலபதே தவ ஸுப்ரபாதம் || 17 ||
ஸூர்யேம்து பௌம புதவாக்பதி காவ்யஶௌரி
ஸ்வர்பானுகேது திவிஶத்-பரிஶத்-ப்ரதானாஃ |
த்வத்தாஸதாஸ சரமாவதி தாஸதாஸாஃ
ஶ்ரீ வேம்கடாசலபதே தவ ஸுப்ரபாதம் || 18 ||
தத்-பாததூளி பரித ஸ்புரிதோத்தமாம்காஃ
ஸ்வர்காபவர்க னிரபேக்ஷ னிஜாம்தரம்காஃ |
கல்பாகமா கலனயாஉஉகுலதாம் லபம்தே
ஶ்ரீ வேம்கடாசலபதே தவ ஸுப்ரபாதம் || 19 ||
த்வத்கோபுராக்ர ஶிகராணி னிரீக்ஷமாணாஃ
ஸ்வர்காபவர்க பதவீம் பரமாம் ஶ்ரயம்தஃ |
மர்த்யா மனுஷ்ய புவனே மதிமாஶ்ரயம்தே
ஶ்ரீ வேம்கடாசலபதே தவ ஸுப்ரபாதம் || 20 ||
ஶ்ரீ பூமினாயக தயாதி குணாம்றுதாப்தே
தேவாதிதேவ ஜகதேக ஶரண்யமூர்தே |
ஶ்ரீமன்னனம்த கருடாதிபி ரர்சிதாம்க்ரே
ஶ்ரீ வேம்கடாசலபதே தவ ஸுப்ரபாதம் || 21 ||
ஶ்ரீ பத்மனாப புருஷோத்தம வாஸுதேவ
வைகும்ட மாதவ ஜனார்தன சக்ரபாணே |
ஶ்ரீ வத்ஸ சிஹ்ன ஶரணாகத பாரிஜாத
ஶ்ரீ வேம்கடாசலபதே தவ ஸுப்ரபாதம் || 22 ||
கம்தர்ப தர்ப ஹர ஸும்தர திவ்ய மூர்தே
காம்தா குசாம்புருஹ குட்மல லோலத்றுஷ்டே |
கல்யாண னிர்மல குணாகர திவ்யகீர்தே
ஶ்ரீ வேம்கடாசலபதே தவ ஸுப்ரபாதம் || 23 ||
மீனாக்றுதே கமடகோல ன்றுஸிம்ஹ வர்ணின்
ஸ்வாமின் பரஶ்வத தபோதன ராமசம்த்ர |
ஶேஷாம்ஶராம யதுனம்தன கல்கிரூப
ஶ்ரீ வேம்கடாசலபதே தவ ஸுப்ரபாதம் || 24 ||
ஏலாலவம்க கனஸார ஸுகம்தி தீர்தம்
திவ்யம் வியத்ஸரிது ஹேமகடேஷு பூர்ணம் |
த்றுத்வாத்ய வைதிக ஶிகாமணயஃ ப்ரஹ்றுஷ்டாஃ
திஷ்டம்தி வேம்கடபதே தவ ஸுப்ரபாதம் || 25 ||
பாஸ்வானுதேதி விகசானி ஸரோருஹாணி
ஸம்பூரயம்தி னினதைஃ ககுபோ விஹம்காஃ |
ஶ்ரீவைஷ்ணவாஃ ஸதத மர்தித மம்களாஸ்தே
தாமாஶ்ரயம்தி தவ வேம்கட ஸுப்ரபாதம் || 26 ||
ப்ரஹ்மாதயா ஸ்ஸுரவரா ஸ்ஸமஹர்ஷயஸ்தே
ஸம்தஸ்ஸனம்தன முகாஸ்த்வத யோகிவர்யாஃ |
தாமாம்திகே தவ ஹி மம்கள வஸ்து ஹஸ்தாஃ
ஶ்ரீ வேம்கடாசலபதே தவ ஸுப்ரபாதம் || 27 ||
லக்ஶ்மீனிவாஸ னிரவத்ய குணைக ஸிம்தோ
ஸம்ஸாரஸாகர ஸமுத்தரணைக ஸேதோ |
வேதாம்த வேத்ய னிஜவைபவ பக்த போக்ய
ஶ்ரீ வேம்கடாசலபதே தவ ஸுப்ரபாதம் || 28 ||
இத்தம் வ்றுஷாசலபதேரிஹ ஸுப்ரபாதம்
யே மானவாஃ ப்ரதிதினம் படிதும் ப்ரவ்றுத்தாஃ |
தேஷாம் ப்ரபாத ஸமயே ஸ்ம்றுதிரம்கபாஜாம்
ப்ரஜ்ஞாம் பரார்த ஸுலபாம் பரமாம் ப்ரஸூதே || 29 ||
வெங்கடேஸ்வரா சுப்ரபாதம் விளக்கம்:
வந்துதித்தாய் ராமநீ கோசலைதன் திருமகனாய்
சிந்துமொழிச் சிறுகாலை திசைஎங்கும் புலர்கிறது
மந்திரங்கள் வாய்மொழிந்து வந்தனைகள் புரிந்தருளச்
செந்திருக்கண் அருள்பொழிய வேங்கடவா எழுந்தருள்வாய் || 1 ||
எழுந்தருள்வாய் வெங்கருடக் கொடியுடையாய் எழுந்தருள்வாய்
எழுந்தருள்வாய் திருக்கமலை விளைமார்பா எழுந்தருள்வாய்
எழுந்தருள்வாய் மூவுலகும் காத்தருள எழுந்தருள்வாய்
எழுந்தருள்வாய் கோவிந்தா வேங்கடவா எழுந்தருள்வாய || 2 ||
போர்புரிந்து மதுகைடத் தமயளித்தான் உளத்தொளியே
பாரனைத்தும் காத்தளிக்கும் பேரளகின் அருளுருவே
பாரகத்தார் விளைந்தேத்தும் சீர்சீலப் பெருந்தாயே
கார்வண்ண வேங்கடத்தான் திருத்தேவி எழுந்தருள்வாய் || 3 ||
திங்கள் மொழித் திருமுகத்தில் பொங்கும் அருள்பொளிபவளே
இங்கு கலைவாணியுடன் இந்திராணி அம்பிகையாம்
மங்கையர்கள் தொழுதேத்தும் மாண்புடைய தனித்தலைவி
செங்கமல வேங்கடத்தான் திருத்தேவி எழுந்தருள்வாய் || 4 ||
தொலைவிடத்தும் பலவிடத்தும் சுழன்றுதிரி ஏழ்முனிவர்
சலித்தறியாத் தவமியற்றி சந்தியாவந்தனம் முடித்து
நிலைபெறுமின் புகழ்சொல்லி நின்பாதம் சேபிக்க
மலையடைந்து காத்துள்ளர்காண் வேங்கடவா எழுந்தருள்வாய் || 5 ||
ஆங்கந்தப் பிரம்மாவும் அறுமுகனும் தேவர்களும்
ஓங்கி உலகன்றளந்த உயர்கதைகள் பாடுகின்றார்
இங்கிந்த வியாழமுனி பஞ்சாங்கம் ஒதுகின்றார்
தீங்கவிகள் செவிமடுக்க வேங்கடவா எழுந்தருள்வாய் || 6 ||
நல்கமுகு தென்னைகளில் பாளைமணம் நெகிழ்ந்தனவால்
பல்வண்ண மொட்டுக்கள்தாம் பனித்தேனோடு அலர்ந்தனவால்
புல்லரிக்கும் மெல்லீரப் பூந்தென்றல் தவள்கிறதால்
எல்லாமும் அணிந்தருள வேங்கடவா எழுந்தருள்வாய் || 7 ||
நின்திருப்பேர் பலகேட்டு நின்னடியரர் மெய்மறக்க
நின்கோயிற் பைங்கிளிகள் தீங்கனியாம் அமுதருந்தி
நின்திருப்பேர் ஆயிரத்தால் நெடுங்ம்புகளை நிழற்றிடுமால்
நின்செவியால் துய்த்தருள வேங்கடவா எழுந்தருள்வாய் || 8 ||
எவ்விடத்தும் நிலையாக நின்றறியா நாரதரும்
இவ்விடத்துன் பெருமைகள்தாம் ஈர்ப்பதனால் நிலைகொண்டார்
செவ்வியதன் வீணையில் உன்திருச்சரிதை மீட்டுகின்றார்
அவ்விசசையைக் கேட்டருள வேங்கடவா எழுந்தருள்வாய் || 9 ||
வெண்கமல ஒண்மலர்கள் விளைத்தமது மிகவருந்தி
கண்மயங்கி மலர்முகட்டுள் காலைவரை சிறைகிடந்த
வண்டினங்கள் ரீங்கரித்தே வந்தனவாம் நினைத்தொழவே
தன்னருளால் சேவைதர வேங்கடவா எழுந்தருள்வாய் || 10 ||
கனதனங்கள் நிமிர்ந்தசெயற்க் கைவளைகள் ஒலியெழுப்ப
மனமகிழ்ந்து தயிர்கடையும் மத்தொலியும் திசையொலியும்
சிறந்தனபோல் எதிரொலிக்கும் நெடுந்துதிகள் முழங்கிடுமால்
நினைக்கவைதாம் கேட்டிலையோ வேங்கடவா எழுந்தருள்வாய் || 11 ||
பெருமாள்நின் திருநிறத்தைப் பெற்றுளதாய் குவளைசொல்லும்
கருங்குவளைக் காட்டிடையே களிதுலவும் வண்டுகள்தாம்
பெருமாள்நின் திருநிறத்தைப் பெற்றுளம்யாம் பெரிதெனுமேன
வருபெரும்பேர் பகைதவிர்க்க வேங்கடவா எழுந்தருள்வாய் || 12 ||
வேண்டுபவர் வேண்டுவன விளைந்தருளும் பெருவரதா
மாண்புடையாள் மலரமர்ந்தாள் மகிழ்ந்துறையும் திருமார்பா
ஈண்டுலகம் அனைத்தினொடும் இயைந்தமைந்த உறவுடையோய்
காண்பரிய கருனணயனே வேங்கடவா எழுந்தருள்வாய் || 13 ||
மின்தவழும் சடையானும் பிரம்மாவும் சனந்தனரும்
இன்றுனது கோயிலேறித் திருத்தீர்த்தம் தனில்மூழ்கி
நின்னருளைப் பெறவிளைந்தே நெடுவாயில் நினைநின்றார்
இன்றவர்க்கும் அருள்பொழிய வேங்கடவா எழுந்தருள்வாய் || 14 ||
திருமலையாய் சேடத்தாய் கருடத்தாய் வேங்கடத்தாய்
திருநாராயணமலையாய் விருடபத்தாய் விருடத்தாய்
பெருமானே எனப்புகழ்ந்து தேவரெலாம் திரண்டனர்காண்
திருண்டுளரைப் புறந்தருள வேங்கடவா எழுந்தருள்வாய் || 15 ||
அருளிடுநின் செயல்முடிப்பன் அட்டத்திக்கு பாலர்களாம்
பெருநெறிய அரண்இந்திரன் அக்னியான் பேரியமன்
வருணனொடு நைருதியான் வாயுவொடு குபேரனும்நின்
திருவடிக்கீழ் காத்துளரால் வேங்கடவா எழுந்தருள்வாய் || 16 ||
திருமலைவாள் பெருமானே திருவுலாவுக்கு எழுகையில்நின்
கருடநடை சிம்மநடை நாகநடை முதலாய
திருநடைகள் சிறப்புணர்ந்து திருதமுறக் கற்பதற்கு
கருடசிம்ம நாகருளார் வேங்கடவா எழுந்தருள்வாய் || 17 ||
சூரியனார் சந்திரனார் செவ்வாயார் புதன் வியாழர்
சீர்மிகுந்த சுக்கிரனார் சனி ராகு கேதிவர்கள்
ஆர்வமுடன் நின்தொண்டர்க்கு அடித்தொண்டு புரிந்துனது
பேரருளைப் பெறநின்றார் வேங்கடவா எழுந்தருள்வாய் || 18 ||
நின்முக்தி விளையாமல் நின்னையொன்றே மிகவிளைந்து
நின்பாதத் தூளிகளைத் தம்தலையில் தாம்தரித்தோர்
சென்றிடுவாய் கலிமுடிந்தால் இங்கிருந்துன் பரமபதம்
என்பதற்கே அஞ்சினர்காண் வேங்கடவா எழுந்தருள்வாய் || 19 ||
எண்ணரிய தவமியற்றி இன்சுவர்க்கம் முக்திபெறும்
புண்ணியர்கள் செல்வழிநின் புகழ்க்கோவில்க் கலசங்கள்
கண்டனரே நின்கோவில் காட்சிக்கே பிறப்பெடுப்பார்
புண்ணியனே அவர்க்கருள வேங்கடவா எழுந்தருள்வாய் || 20 ||
மண்மகளின் திருக்கேள்வா மாக்கருணைக் குணக்கடலே
திண்புயத்துக் கருடனுடன் நாகனுமே சரண்புகுந்தார்
எண்ணரிய தேவர்களில் ஈடுஇணையில்லாப் பெருந்தேவா
மண்ணுலகோர் தனிப்புகளே வேங்கடவா எழுந்தருள்வாய் || 21 ||
பத்மநாபா புருடோத்தமா வாசுதேவா வைகுண்டா
சத்தியனே மாதவனே ஜனார்த்தனனே சக்ரபாணி
வத்சலனே பாரிஜாதப் பெருமலர்போல் அருள்பவனே
உத்தமனே நித்தியனே வேங்கடவா எழுந்தருள்வாய் || 22 ||
திருமகள்தன் திருவணைப்பில் திருத்துயில்கொள் திருஅழகா
திருவிழியால் பெருவுலகில் அருள்பொழியும் பெருவரதா
திருவுடையாய் திருக்குணத்தாய் திருத்தூயாய் திருப்புகழாய்
பெருவைரத் திருமுடியாய் வேங்கடவா எழுந்தருள்வாய் || 23 ||
மச்சநாதா கூர்மநாதா வாராகநாதா நரசிங்கா
நற்சிவந்த வாமனனே பரசுராமா ரகுராமா
மெச்சுபுகழ் பலராமார் திருக்கண்ணார் கல்க்கியனே
இச்சகத்து வைகுண்டா வேங்கடவா எழுந்தருள்வாய் || 24 ||
ஏலமொடு நடுலவங்க கணசார மணங்கமழும்
சீலமிகு தெய்வீகத் திருத்தீர்த்தம் தலைசுமந்து
ஞாலமுய்ய வேதமொழி நவிற்றுமிந்த வேதியர்கள்
கோலமிகு கோயிலுற்றார் வேங்கடவா எழுந்தருள்வாய் || 25 ||
அருணனுந்தான் வந்துதித்தான் அலர்ந்தனவாம் தாமரைகள்
பெருவியப்பாற் புல்லினங்கள் பெயர்ந்தெழுந்து சிலம்பினகாண்
திருமார்பா வைணவர்கள் மங்களங்கள் மிகமொழிந்தார்
அரிதுயில்ஏன் அருள்விருந்தே வேங்கடவா எழுந்தருள்வாய் || 26 ||
நாமகள்தன் நாயகனும் தேவர்களும் மங்கலமாய்
காமர்எழிற் கண்ணாடித் தாமரைகள் சாமரங்கள்
பூமருவு பொன்விளக்கு புகழ்க்கொடிகள் ஏந்தினரால்
தேமருது மலர்மார்பா வேங்கடவா எழுந்தருள்வாய் || 27 ||
திருமார்பா பெருங்குணங்கள் சிறந்தோங்கப் பொலிபவனே
பெரும்பிறவிக் கருங்கடலின் கரைபுணர்த்தும் சேதுஅணையே
ஒருவேதத்து உட்பொருளே மயர்புஅறியா மதிநலத்தார்
திருத்திப்பிற்கு உரியவனே வேங்கடவா எழுந்தருள்வாய் || 28 ||
விழித்துஎழு நற்காலையில் இத்திருப்பள்ளி எழுச்சிதனை
விளைந்துணர்ந்து படிப்பவரைக் கேட்பவரை நினைப்பவரை
வழுத்துகின்றார் எவர்அவற்கு வரங்களோடு முக்திதர
எழுந்தருள்வாய் எழுந்தருள்வாய் வேங்கடவா எழுந்தருள்வாய் || 29 ||
Click Here for Suprabhatam Meaning:
Also Read :
Tirupati Balaji Suprabhatam | Sri Venkateswara Suprabhatam Lyrics in Hindi | English | Bengali | Gujarati | Kannada | Malayalam | Oriya | Telugu | Tamil
Great that meaning is given in english. Can the meaning be translated in tamil as well?
We will try to translate in tamil soon.
Om Namah Shivaya