Templesinindiainfo

Best Spiritual Website

சிவார்ச்சனா சந்த்ரிகா

Sivarchana Chandrikai – Pujaiyai Poorthi Seiyum Murai in Tamil

சிவார்ச்சனா சந்திரிகை – பூசையைப் பூர்த்திசெய்யும் முறை: ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை பூசையைப் பூர்த்திசெய்யும் முறை பின்னா¢, சத்தியோஜாதம் முதலாக முறையே ஐந்து சிரசுகளிலும் சிவனையருச்சித்து, அஸ்திரம் முதல் இருதயம் ஈறாகவுள்ள அங்கங்களையும் எதிர் முறையாகப் பூசித்து, விருப்பப்படி முன்போல் ஊர்த்துவமுகமாக இருப்பீராகவென்று பிரார்த்தித்து ஹாம், ஹெளம், சிவாய ஸாங்காய பராங் முகார்க்கியம் ஸ்வாஹா என்று பராங்முகார்க்கியங் கொடுத்து, கொ¢ப்பக்கிருகத்திலிருக்கும் ஆவரணரூபமான சத்தியோஜாதம் முதலிய பஞ்சப்பிரம மந்திரங்களையும், அஸ்திரம் முதலிய அங்கமந்திரங்களையும், ஈசுவரனுடைய […]

Sivarchana Chandrikai – Praarthanai in Tamil

சிவார்ச்சனா சந்திரிகை – பிரார்த்தனை: ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை பிரார்த்தனை பின்னர், சிவபெருமானிடத்திற்குவந்து அட்ட புஷ்பங்களால் சிவனைப் பூசித்து, விசேடார்க்கியங்கொடுத்து, நமஸ்கரித்து விருப்பமான பிரார்த்தனையைச் செய்து, ஓ பிரபோ! யான் அறியாமையால் குறைவாகவோ அதிகமாகவோ கிரியைகளைச் செய்திருப்பினும், அவற்றைத் தேவரீர் ஏற்றுக் கிரியை பூர்த்தியானதாகவே அருள்புரிய வேண்டும். ஓ பக்தர்களிடத்து அன்புள்ளவதே! என்னால் இரவும் பகலும் அநேக அபராதங்கள் செய்யப்படுகின்றன. எனை அடிமையாகப் பாவித்து அவற்றைப் பொறுத்தருளல் வேண்டும். ஓ சுவாமின்! சிறியனாகவும், […]

Sivarchana Chandrikai – Guru Pujai in Tamil

சிவார்ச்சனா சந்திரிகை – குருபூசை: ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை குருபூசை பின்னர், தமது பீடத்திலிருக்கும் குருவையடைந்து அவருடைய பாதங்களைச் சுத்திசெய்து பரமசிவன் என்னும் புத்தியுடன் சந்தனம் முதலியவற்றால் பூசித்து, மூன்று புஷ்பாஞ்சலிகள் செய்து, சாஷ்டாங்கமாக மூன்றுமுறை நமஸ்கரித்து எழுந்து, பூமியில் முழங்கால்களை வைக்கொண்டும் இருகைகளைக் குவித்துக்கொண்டும் குற்றங்களைப் பொறுத்தருளர் வேண்டுமெனப்பிரார்த்திக்க வேண்டும். “தேனில் விருப்பமுள்ள வண்டானது சோலையில் ஒரு புஷ்பத்தினின்றும் நீங்கிப் பிறிதொரு புஷ்பத்திற்குச் செல்லுமாறுபோல, ஞானத்தில் விருப்பமுள்ள சீடன் ஒரு குருவினிடத்தினின்றும் […]

Sivarchana Chandrikai – Sivaagama Pujai Seiyum Murai in Tamil

சிவார்ச்சனா சந்திரிகை – சிவாகம பூசை செய்யும் முறை: ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை சிவாகம பூசை செய்யும் முறை காமிகம் முதலிய இருபத்தெட்டு ஆகமங்களே சிவஞானங்களெனப்படும். அவற்றுள், காமிகம், மூன்று பேதத்துடன் பரார்த்தங்கிரந்தங்களையுடையது, யோகஜம், ஐந்து பேதத்துடன் லக்ஷங்கிரந்தங்களையுடையது, சிந்தியம், ஆறு பேதத்தடன் லக்ஷங்கிரந்தங்களையுடையது, காரணம், ஏழு பேதத்துடன் கோடி கிரந்தங்களையுடையது, அஜிதம், நான்கு பேதத்துடன் லக்ஷஙகிரந்தங்களையுடையது, தீப்தம், ஒன்பது பேதத்துடன் லக்ஷங்கிரந்தங்களையுடையது, சூக்குமம், ஒரு பேதத்துடன் பத்மமென்னுங் கிரந்தங்களையுடையது, சகஸ்கரம், பத்துப் […]

Sivarchana Chandrikai – Agni Kariyam Seiyum Murai in Tamil

சிவார்ச்சனா சந்திரிகை – அக்கினிகாரியஞ் செய்யுமுறை: ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை அக்கினிகாரியஞ் செய்யுமுறை இவ்வாறு பரமேசுவரனைத் தோத்திரம், பிரதக்ஷிணம், நமஸ்காரமுதலியவற்றால் திப்தியடையும்படி செய்து, ஓ சுவாமின்! யான் அக்கினி காரியஞ் செய்கின்றேன் என்று தெரிவித்துப் பரமசிவனிடமிருந்து ஆணையைப்பெற்றுச், சாமான்யார்க்கிய பாத்திரத்தைக் கையில் வைத்துக்கொண்டு அக்கினியிருக்கும் ஓமகுண்டத்திற்குச் சென்று, நிரீக்ஷணம் முதலிய நான்கு சுத்திகளால் சுத்தமாயும், ஒருமுழ அளவுள்ளதாயும், மண், மணலென்னுமிவற்றுள் யாதானுமொன்றால் செய்யப்பட்டதாயுமிருக்கும் இடத்தில் அரணிக்கட்டை, சூரியகாந்தமென்னுமிவற்றால் செய்யப்பட்டதாகவாவது, அக்கினிகாரியஞ் செய்பவர் வீட்டிலிருந்து […]

Sivarchana Chandrikai – Namaskaram Seiyum Murai in Tamil

சிவார்ச்சனா சந்திரிகை – நமஸ்காரஞ் செய்யுமுறை: ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை நமஸ்காரஞ் செய்யுமுறை நமஸ்காரமாவது அட்டாங்கம், பஞ்சாங்கம், திரியங்கம், ஏகாங்கமென நான்கு வகைப்படும். அவற்றுள், அட்டாங்கமானது தண்டமென்றும், தனியென்றும் இருவகைப்படும். அவற்றுள், தண்டமென்னும் அட்டாங்க நமஸ்காரமாவது – கால்களிரண்டும், கைகளிரண்டு, மார்பு, சிரசு ஒன்று, வாக்கொன்று மனமொன்று ஆகிய எட்டுறுப்புக்களாலுஞ் செய்யப்படுவது. இது ஒருபக்கம். கால்கள், கைகள், மார்புகள், சிரசு, வாக்கு, மனம், புத்தி, பார்வை, யென்னும் இவற்றால் செய்யப்படுவதென்பது மற்றொரு பக்கம். […]

Sivarchana Chandrikai – Pradakshinam Seiyum Murai in Tamil

சிவார்ச்சனா சந்திரிகை – பிரதக்ஷிணஞ் செய்யும் முறை: ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை பிரதக்ஷிணஞ் செய்யும் முறை இவ்வாறு தோத்திரஞ் செய்து, புஷ்பாஞ்சலி சமர்ப்பித்து, சாஷ்டாங்க நமஸ்காரஞ் செய்து, மூன்று முறை பிரதக்ஷிணஞ் செய்து ஐந்து முறை நமஸ்கரித்து, மீண்டும் பிரதக்ஷிணஞ் செய்யவேண்டும். பூசைக்குப் பலன் சித்திப்பதன் பொருட்டுப் பிரதக்ஷிணம் இன்றியமையாதது. பிரதக்ஷிணம் நான்கு அங்கங்களுடனிருக்கும். அவை வருமாறு:- (அ) அடிமேல் அடி வைத்துச் செல்லுதல். (ஆ) இருகைகளையுங் கோர்த்துக் கொள்ளுதல். (இ) வாயால் […]

Sivarchana Chandrikai – Panchaakkara Jeba Murai in Tamil

சிவார்ச்சனா சந்திரிகை – பஞ்சாக்கர செபமுறை: ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை பஞ்சாக்கர செபமுறை பஞ்சாக்கரத்தைக் குருவின் உபதேசத்தை யநுசரித்து மிகவும் சாவதானத்துடன் போற்றிக் கொள்ளல் வேண்டும். சிவாசன பத்மத்திற்குத் தெற்குத் தளத்தில் அகோரமூர்த்திக்குத் தெற்குப் பக்கத்தில் உரக்கினதங்கத்தின் காந்திபோல் காந்தியையுடையவளாயும், பருத்தும் நிமிர்ந்து மிருக்கின்ற தனங்களையுடையவளாயும், நான்கு கைகளையும் மூன்று கண்களையும் சிரசில் இளம் பிறையையும் உடையவளாயும், தாமரை புஷ்பத்தையும் நீலோற்பல புஷ்பத்தையும் தரிப்பவளாயும், பிரசன்னதை யுடையவளாயும், வரம் அபயங்ளோடு கூடிய கைகளையுடையவளாயும், […]

Sivarchana Chandrikai – Karppooradheebam Samarppikkum Murai in Tamil

சிவார்ச்சனா சந்திரிகை – கருப்பூரதீபஞ் சமர்ப்பிக்கும் மறை: ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை கருப்பூரதீபஞ் சமர்ப்பிக்கும் மறை சுவா¢ண முதலியவற்றால் செய்யப்பட்டவையாயும், வட்டமான வடிவம் அல்லது நான்கு முக்குச் சதுரமான வடிவத்தையுடையவையாயும், மொட்டை நுனியிலுடைய தண்டுடன் கூடினவையாயும், இயல்பாகவேனும் மாவினாலேனும் செய்யப்பட்ட தீபாசனங்களுடன் கூடினவையாயும், தீபாசனங்களில் வைக்கப்பட்ட கற்பூரத்திலாவது திரிகளிலாவது ஏற்றப்பட்ட தீபத்தையுடையவையாயும் உள்ள கருப்பூர நீராசன பாத்திரங்களுடன் நீராசனத்தையும் நிரீக்ஷண முதலியவற்றால் சுத்திசெய்து, ஆராத்திரிகம் போலவே இவற்றையும் சுற்றிச் சமர்ப்பித்துப் பூமியில் வைத்து […]

Sivarchana Chandrikai – Aarathi Samarpikkum Murai in Tamil

சிவார்ச்சனா சந்திரிகை – ஆரத்தி சமர்ப்பிக்கும் முறை: ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை ஆரத்தி சமார்ப்பிக்கும் முறை சுவர்ணம் வெள்ளி செம்பு வெண்கலமென்னுமிவற்றுள் யாதானும் ஒன்றால் செய்யப்பட்டதாயும், இருபத்துநான்கு அங்குல அளவுள்ளதாயும், அல்லது அதற்குப் பாதியளவுள்ள தாயும், குறித்த அளவில் மூனறிலொரு பங்கு அளவுள்ளதும், ஐந்திலொரு பங்கு உயரமுடையதும், இரண்டு வால் நெல்லளவு உயரமுடைய பட்டிகையையுடையதுமான கர்ணிகையினால் சோபிக்கப்பட்டதாயும், அந்தக் கர்ணிகைக்கு வெளியில் எட்டுத் தளங்களுடன் கூடினதாயும், நான்கு பக்கங்களிலும் கர்ணிகை அளவான ஓஷ்டத்துடன் […]

Scroll to top