Thiruvundiya Uyyavandadeva Nayanar Lyrics in Tamil | Saiva Siddhanta
சைவ சித்தாந்த நூல்கள் – VI திருவுந்தியார் (ஆசிரியர் உய்யவந்ததேவ நாயனார்) 1) அகளமா யாரு மறிவரி தப்பொருள் சகளமாய் வந்ததென் றுந்தீபற தானாகத் தந்ததென் றுந்தீபற. 2) பழக்கந் தவிரப் பழகுவ தன்றி உழப்புவ தென்பெணே யுந்தீபற ஒருபொரு ளாலேயென் றுந்தீபற 3) கண்டத்தைக் கொண்டு கரும முடித்தவர் (1)பிண்டத்தில் வாராரென் றுந்தீபற பிறப்பிறப் பில்லையென் றுந்தீபற. (1). பிண்டத்து 4) (2)இங்ங னிருந்ததென் றெவ்வண்ணஞ் சொல்லுகேன் அங்ங னிருந்ததென் றுந்தீபற அறிவு மறிவதென் றுந்தீபற. […]