Sivarchana Chandrikai – Sithantha Saathira Padanam in Tamil
சிவார்ச்சனா சந்திரிகை – சித்தாந்த சாத்திரபடனம் ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை சித்தாந்த சாத்திரபடனம் இவ்வாறு சிவதரிசனம் செய்த பின்னர் இல்லத்தை அடைந்து காலத்துக்குத் தக்கவாறு சிறிது நேரமேனும் சித்தாந்தசாத்திரத்தைத் தீக்ஷை பெற்றவருடன், தீக்ஷையில்லாதார் பார்வையின்றி கேட்டல், படித்தல்களைச் செய்தல் வேண்டும். “ஓ சிரேட்டமான முகத்தையுடையவளே! திருடருக்குத் தெரிவிக்காமல் பொருளை எவ்வாறு காக்கின்றோமோ, அவ்வாறே அபத்தர்களுக்குத் தெரிவிக்காமல் அந்த ஞானத்தைக் காத்தல் வேண்டும்” என்னும் வசனத்தால் தீக்ஷை பெறாதவருடைய சம்பந்தத்தை நீக்குதல் வேண்டும் என்பதை […]