Prayer For Success in Love & To Get Married
காதல் வெல்ல ஒரு பதிகம்: ஞானசம்பந்தப் பெருமான் திருச்செங்காட்டங்குடியில் சிறுத்தொண்டரைச் சந்தித்துவிட்டு வரும் வழியில் திருமருகல் என்ற தலத்தில் நிகழ்த்திய அற்புதமிது. அதிகாலைப் போதில் திருமருகல் மாணிக்கவண்ணர் கழல் தொழ தொண்டர் கூட்டத்துடன் ஆலயம் நோக்கி வந்து கொண்டிருக்கிறார் ஆளுடைப் பிள்ளையார். ஆலயத்தை அடுத்திருந்த தங்குமடமொன்றில் இளம்பெண்ணொருத்தி ஓலமிட்டழுவதையும், அவளருகே வாலிபன் ஒருவன் உயிரற்று விழுந்து கிடப்பதையும் கண்டிரங்கி நிற்கிறார். அஞ்சேல் என்று அபயக்கரமுயர்த்த அழுகையினூடே அப்பெண் தம் கதையைச் சொல்கிறார்: “ஐயன்மீர், நாங்கள் வைப்பூர் என்னும் […]