For Prosperity and Good Life in Tamil
திருமணம் முதலிய சுபநிகழ்ச்சிகள் யாவிலும் ஓதவேண்டிய மங்கலப்பதிகம் மதுரையில் நுழையும்போதே, மீண்டும் எங்கும் திருநீற்றுக் கோலத்தைக் காணும்போதே சிவபாதவிருதயருக்கு நிம்மதி திரும்பி விட்டது. நாவுக்கரசர் தடுத்தும் கேளாமல் பாண்டிமாதேவியாரின் அழைப்பை ஏற்றுக் கிளம்பிய குழந்தை ஞானசம்பந்தன் மதுரைச் சமணரிடம் என்ன பாடுபடுமோ என்று அவ்வப்போது அச்சமாயிருந்தாலும் தோணியப்பன் காத்திருப்பான் என்று திடப்படுத்திக் கொண்டிருந்தார். இதோ உரத்து முழங்கும் அரன் நாமம் அதை உறுதி படுத்துகிறதே! ‘பானறுங் குதலைச் செய்ய பவளவாய்ப் பிள்ளையார்தாம் மான சீர்த் தென்னன் நாடு […]