Araro Ariraro Kannana Kanmaniye Lyrics in Tamil
சக்தி தாலாட்டு Lyrics: ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ கண்ணான கண்மணியோ கரும்பான செங்கரும்போ முத்தோ ரத்தினமோ மோகனப் புன்னகையோ முத்துச்சரத் தொட்டிலிலே முக்கண்ணியே நீ உறங்காய் || 1 || சிங்கார நெத்தியிலே சிவப்புச்சுட்டி அணிந்த்தாயோ தங்கமான காலினிலே தண்டை கொலுசு அணிந்தாயோ முத்தான மார்பினிலே முத்துச்சரம் அணிந்தாயோ கெம்பு பதித்த தொட்டிலிலே கெளரியே நீ உறங்காய் || 2 || வைரம் போன்ற கைகளிலே வைரவளை அணிந்த்தாயோ மடல் போன்ற காதினிலே பிச்சோலை அணிந்தாயோ […]