Sivarchana Chandrika – Uruthirakka Tharana Vithi in Tamil
சிவார்ச்சனா சந்திரிகை – உருத்திராக்கதாரண விதி: ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை: உருத்திராக்கதாரண விதி உருத்திராக்கதாரணமும் விபூதிதாரணம் போலச் சிவ பூசையில் எப்பொழுதுந் தரிக்கவேண்டும். பிராமணர் முதலிய ஜாதியார் முறையே வெண்மை, செம்மை, பொன்மை, கருமை என்னும் வர்ணங்களையுடைய உருத்திராக்கங்களைத் தரிக்கவேண்டும். சொல்லப்பெற்ற வர்ணங்களையுடைய உருத்திராக்கங்கள் கிடையாவிடில் பிராமணர் நான்கு வர்ணங்களுள் ஒரு வர்ணமுடைய உருத்திராக்கந் தரிக்கலாம். க்ஷத்திரியர் செம்மை முதலிய மூன்று வர்ணங்களுள் ஒரு வர்ணமுடைய உருத்திராக்கந் தரிக்கலாம். வைசியர் பொன்மை முதலிய […]