Ganesh Bhajans: ஆனை முகத்தான் Lyrics in Tamil:
ஆனை முகத்தான்
அரன் ஐந்து முகத்தான் மகன்
ஆறுமுகத்தானுடன் அவதரித்தான்
அவன்
ஆனை முகத்தான்
அரன் ஐந்து முகத்தான் மகன்
ஆறுமுகத்தானுடன் அவதரித்தான்
ஞானம் அளிப்பான் என்றும் நலம் அளிப்பான்
ஞானம் அளிப்பான் என்றும் நலம் அளிப்பான்
தன்னை நம்பியவர்க்கு எல்லாம் கை கொடுப்பான்
தன்னை நம்பியவர்க்கு எல்லாம் கை கொடுப்பான்
உடன்
ஆனை முகத்தான் அரன் ஐந்து முகத்தான்
மகன் ஆறு முகத்தான் உடன் அவதரித்தான்
ஓம் என்னும் பிரணவ நாதமே அவன் தொடக்கம்
உலகம் எல்லாம் அவன் வயிற்றினிலே அடக்கம்
ஓம் என்னும் பிரனவ நாதமே அவன் தொடக்கம்
உலகம் எல்லாம் அவன் வயிற்றினிலே அடக்கம்
கானல் நீர் வாழ்க்கை கடல் அதனை கடக்கும்
கானல் நீர் வாழ்க்கை கடல் அதனை கடக்கும்
தோணியாக வந்து துதிக்கையால் அணைக்கும்
தோணியாக வந்து துதிக்கையால் அணைக்கும்
ஆனை முகத்தான் அரன் ஐந்து முகத்தான்
மகன் ஆறு முகத்தான் உடன் அவதரித்தான்
வெள்ளை உள்ளம் என்னும் வீட்டினில் குடி இருப்பான்
வீதி தோறும் என்றே வேண்டும் வரம் அளிப்பான்
வெள்ளை உள்ளம் என்னும் வீட்டினில் குடி இருப்பான்
வீதி தோறும் என்றே வேண்டும் வரம் அளிப்பான்
அள்ளி எடுத்த பிடி மண்ணிலும் அவன் இருப்பான்
அள்ளி எடுத்த பிடி மண்ணிலும் அவன் இருப்பான்
ஐங்கரத்தான் அவன் தான் அனைத்திற்கும் முன்னிற்பான்
ஐங்கரத்தான் அவன் தான் அனைத்திற்கும் முன்னிற்பான்
ஆனை முகத்தான் அரன் ஐந்து முகத்தான்
மகன் ஆறு முகத்தான் உடன் அவதரித்தான்
ஆனை முகத்தான் அரன் ஐந்து முகத்தான்
மகன் ஆறு முகத்தான் உடன் அவதரித்தான்