Ayyappan Songs: ஐயப்பா ஐயப்பா என்றுன்னைப் in Tamil:
ஐயப்பா ஐயப்பா என்றுன்னைப் பாடி
அனுதினம் தொழுவோம் அனைவரும் கூடி
மெய்யப்பா மெய்யப்பா என்றுன்னை நாடி
மெய்ப்பொருள் கண்டோம் ஆயிரம் கோடி!
அம்மையே இல்லாமல் தோன்றிடும் விந்தை
அவனியில் யாரும் கண்டதே இல்லை
இம்மையும் மறுமையும் வியந்திடும் வண்ணம்
இறைவா நீதான் பிறந்தாயே!
மாயவன் ஈசன் அன்பின் உறவால்
மலையில் மலர்ந்த அதிசயமலர் நீ
காலையில் தோன்றும் இளங்கதிர் நீயே
கற்பகத்தருவே கரங்குவித்தோம்!
நினைத்தால் நெஞ்சம் இனித்திடும் தேவா
நீதியைக் காக்கும் நிர்மல சீலா
நான் நீ என்ற அகந்தையை மாய்த்து
நீ நான் ஒன்றே என்றாய் இறைவா!
ஆதியந்தமும் இல்லாத ஈசா
அனைவரைக் காக்கும் இறைவன் நீயே
வாழ்க்கை நெறியை வகுத்தவன் நீயே
வாய்மையின் பிறப்பிடம் வாழியே நீயே!
தலைவன் நீயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா
இறைவன் நீயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா
வரணும் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா ஸ்வாமியே சரணம் ஐயப்பா!