Kandhan Ezhil Kaana in Tamil:
॥ கந்தன் எழில் காண இந்த ॥
கந்தன் எழில் காண இந்த இரு விழிகள்
எந்தவகை போதும்.
(கந்தன் எழில் காண)
சிந்தையிலே முருகன் பந்தம் எனும் அலைகள்
வந்து வந்து மோதும்
(சிந்தையிலே முருகன்)
(கந்தன் எழில் காண)
செந்தில் பரங்குன்றம் திருத்தணிகைக் கண்டும்
என்றும் அவன் நினைவே (2)
திருவாவினன்குடியில் … குமரன் திருவடியில் …
தெண்டணிட்டும் நான் தணியேன்
(கந்தன் எழில் காண)
(சிந்தையிலே முருகன்)
தந்தைக்குத் தனிப்பொருளை … தந்த சுவாமிமலை …
சன்னிதியில் நின்றேன் (2)
செந்துவர் வாய்ச் சிரிப்பை … சென்னிமலை சென்று …
என்புருகக் கண்டேன் (2)
நான் … என்புருகக் கண்டேன்
(கந்தன் எழில் காண)
(சிந்தையிலே முருகன்)
மருதமலை மேலே அழகுத் திருக்கோலம் பருகிக் களித்திருந்தேன்
வரதன் கொலுவிருக்கும் வயலூர் காட்சி தந்த வண்ணம் சுவைத்திருந்தேன்
வள்ளிமலை விராலி மயிலம் திருவருணை கழுகுமலைக் கடந்தேன்
புள்ளிருக்கும் வேளூர் சிக்கல் திருப்போரூர் போற்றி வழி நடந்தேன்
இன்பச் சிவக்கொழுந்து இருக்கும் இடமெல்லாம் இன்னமும் அலைந்திடவோ (2)
குன்றுதோரும் சென்று நின்று நின்று குவி குகனை தொடர்ந்திடவோ
எல்லையிலா எழிலை எங்கிருந்தும் காண வல்லமை தாரானோ
சொல்லவுணா சுகத்தில் தோய்ந்திருக்க வேலன்
உள்ளத்தில் வாரானோ … (3).
Also Read:
Kandhan Ezhil Kaana in Tamil | English