Templesinindiainfo

Best Spiritual Website

Manikanda Prabhu Manikanda Lyrics in Tamil

மணிகண்டா பிரபு மணிகண்டா in Tamil:

மணிகண்டா பிரபு மணிகண்டா
மாமலை வாசா மணிகண்டா.
மணிமய பூஷனா மணிகண்டா
மந்தகாச வதனா மணிகண்டா.

மாயோன் சுதனே மணிகண்டா
மாமன்னன் மகனே மணிகண்டா.

மோகன ரூபா மணிகண்டா
மோகினி தனயா மணிகண்டா.

மாதவன் மகனே மணிகண்டா
மகிஷி மர்த்தனனே மணிகண்டா.

மறையோர் போற்றும் மணிகண்டா
மாமேதையே எங்கள் மணிகண்டா.

மண்டல நாதா மணிகண்டா
மஹா பண்டிதனே மணிகண்டா.

மாலவன் மகனே மணிகண்டா
மலை அரசனே மணிகண்டா.

ஆபத்துச் சகாயா மணிகண்டா
ஆனந்த மூர்த்தியே மணிகண்டா.

சங்கரன் மகனே மணிகண்டா
சங்கடம் போக்கிடும் மணிகண்டா.

காக்கும் தெய்வமே மணிகண்டா
காத்தருள் புரிபவனே மணிகண்டா.

Manikanda Prabhu Manikanda Lyrics in Tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to top