Meyyana Deivame Vendugiren Yenthan in Tamil:
॥ மெய்யான தெய்வமே வேண்டுகிறேன் எந்தன் ॥
சக்திச்சிவ முத்துக்குமரனே முருகா
உன்னைத் தேவாக உளமாற வேண்டுகிறேன்
சரவணஞான குருபரனே கந்தா கடம்பா
கண்டிகதிர் காமவேலனே வாராய்
மெய்யான தெய்வமே வேண்டுகிறேன்
எந்தன் நெஞ்சம்தானே உந்தன் திருக்கோவில்
வந்து சுருள் செய்வாய் முருகா (மெய்)
அருணகிரி வணங்க தருணத்தில் வந்து
திருசுண்ணாமலையில் தரிசனம் தந்தாய்
இராமலிங்க வள்ளலார் வேண்டி நீயும்
வடலூர்ப்பதியினில் காட்சியும் அளித்தாய்
குமரகுருபரரை பேசிட செய்தாய்
சுட்டகனிதந்து அவ்வைக்கு உரைத்தாய்
தவிக்கும் பக்தரெனை தயவுடன் காத்திடு
தாமதம் ஏன் திருமுருகையா (மெய்)
காவடி எடுத்து வந்து சேவடி தொழுவேன்
தேனால் அபிசேகம் தினம் தினம் செய்தேன்
எண்ணற்ற மலர்தொடுத்து திருவடிசேர்த்தேன்
இசையுடன் பாடல்பாடி உனையே துதித்தேன்
எனது கண்களில் கண்ணீர் பெருகிட இன்னும்
உனது திருவுளம் ஏன்தயங்குது
பக்தன் எனது நிலை உணர்ந்திடுமுருகா
சரணம் சரணம் சரவணனே (மெய்)