Panniru Vizhigalile in Tamil:
॥ பன்னிரு விழிகளிலே ॥
பன்னிரு விழிகளிலே …
பன்னிரு விழிகளிலே … பரிவுடன் ஒரு விழியால்
என்னை நீ பார்த்தாலும் போதும். முருகா …
(பன்னிரு விழிகளிலே)
வாழ்வில் இடரேதும் வாராது எப்போதும் (2)
ஷண்முகா …
(பன்னிரு விழிகளிலே)
உன்னிரு பதம் நினைந்து … அன்புடன் தினம் பணிந்து
முருகா … முருகா …
உன்னிரு பதம் நினைந்து … அன்புடன் தினம் பணிந்து (2)
திண்ணமாய் போற்றும் என்பால்
நின் திரு உள்ளம் கனிந்து (2)
(பன்னிரு விழிகளிலே)
பன்னக சயனன் மகிழ்ந்திடும் மருகா
பாரோர் புகழ்ந்து போற்றிடும் குமரா (2)
வண்ணமயில் ஏறும் வடிவேல் அழகா (2)
வள்ளி தெய்வானையுடன் காட்சி தரும் முருகா
வள்ளி தெய்வானையுடன் காட்சி தரும் ஆறுமுகா
வாழ்வில் இடரேதும் வாராது எப்போதும்
முருகா …
பன்னிரு விழிகளிலே … பரிவுடன் ஒரு விழியால்
என்னை நீ பார்த்தாலும் போதும்.
Do you have in English version?
Dear Meenakshi
Click the below link for english Lyrics
https://templesinindiainfo.com/panniru-vizhigalile-lyrics-in-english-murugan-song/