Ayyappan Songs: சைவம் வைணவம் ஒன்று திரண்டு in Tamil:
சைவம் வைணவம் ஒன்று திரண்டு
தவம் புரியும் இடம் சபரிமலை!
தவறி விழுந்த மனிதனை எல்லாம்
தழுவிக் கொள்வது சபரிமலை!
ஐயன் இருப்பது சபரிமலை!
ஹரிஹரசுதன் ஆளும் மலை
அழகிய கால்களில் முத்திரை இட்டு
அருள் தர நினைப்பது சபரிமலை!
மானிடர் தமக்கு ஓர் இடர் வந்தால்
ஓடிப் போவது சபரிமலை!
மருத்துவ முறையில் பக்தியை இன்று
திருத்தி அமைத்தது சபரிமலை!
மதங்கள் ஜாதிகள் சங்கமமாகி
மனிதனை கண்டது சபரிமலை!
அரண் அருள் தேடி முனிவர் நடந்தது
பனிமயமான இமயமலை!
மகன் அருள்தேடி மனிதர் நடப்பது
ஒளிமயமான சபரிமலை!
சென்றவர்க்கெல்லாம் ஐயன் இருந்து
திருவருள் தருவது சபரிமலை!
சென்றவர் தம்மை கண்டவருக்கும்
திருவருள் தருவது ஐயன் மலை!
ஐயன் மலை ஐயப்பன் மலை
கரிமலைநாதன் கலியுகவரதன் மலை!
பூமித் தலைவன் பூத நாதன் மலை
மனத்துயர் துடைக்கும் மணிகண்டன் மலை!
கானகவாசன் வாழும் மலை
ஐயன் மலை ஐயப்பசாமி மலை!
எங்கும் நிறைந்தவன் ஐயப்பன்!
எங்கள் நாயகன் ஐயப்பன்!
ஐயப்ப சரணம் சாமி சரணம்!
சாமி சரணம் ஐயன் சரணம்!
ஐயன் சரணம் ஐயப்ப சரணம்!!
ஓம் சரணம் சரணம் சாமியே சரணம்!!