Sivarchana Chandrika – Thoopopachara Murai in Tamil
சிவார்ச்சனா சந்திரிகை – தூபோபசாரமுறை: ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை தூபோபசாரமுறை சுவர்ணம், வெள்ளி, செம்பு, பித்தளையென்னுமிவற்றுள் யாதானுமொன்றாற் செய்யப்பெற்றதாயும், நான்கங்குலம் நீண்டதாயும், அதிற் பாதியளவு உயர்ந்ததாயும், எட்டங்குலம், விளிம்பையுடையதாயும், பின்பக்கத்தில் பத்மதளத்தால் அடையாளஞ் செய்யப்பட்ட இரண்டங்குலமுள்ள கழுத்தும், இரண்ங்குல உயரமுமுடையதாயும், நன்றாய் வட்டமாயும், குளம்பின் வடிவுபோல் வடிவையுடையதாயுமிருக்கிற பாதத்தையுடையதாயும், இரண்டங்குல அகலத்தையுடையதாயும், முன்னர்க் கூறப்பட்ட இலக்கணத்தையுடைய காலுடன் கூடியதாயுமுள்ள முகநாளத்துடன் கூடியதாயும், அநேக துவாரங்களையுடையதாகவாவது, ஒரு துவாரத்தை யுடையதாகவாவதுள்ள தாமரை மொட்டுப் போன்ற […]