Sivarchana Chandrika – Aachamana Vithi in Tamil
சிவார்ச்சனா சந்திரிகை – ஆசமன விதி: ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளியசிவார்ச்சனா சந்திரிகை: ஆசமன விதி பின்னர், சரீரத்திலுள்ள முப்பத்தைந்து தத்துவங்களின் சுத்தியின் பொருட்டுச் சிந்மாத்திர ஆசமனஞ் செய்யவேண்டும். செய்யுங்காலத்துச் சுவர்ணநிறமுடையவராயும், பத்மம், அக்ஷமாலை, சுருக்கு, குண்டிகை, என்னுமிவைகளைத் தரித்திருக்கின்ற நான்கு கைகளையுடையவராயும், நான்கு முகங்களையுடையவராயும் ஆன்மதத்துவருபமாயுமுள்ள பிரமாவைத் தியானஞ் செய்கிறேனென்று ஆன்மதத்துவத்தின் தியானத்தைச் செய்து, ஹாம் ஆத்மதத்துவாயஸ்வதா என்று முதலாவது ஆசமனஞ் செய்ய வேண்டும். இதனால் தன் சரீரத்தில் பிருதிவி முதல் மாயையீறாகவுள்ள முப்பத்தொரு தத்துவங்களும் […]