Prayer to Cure Poisoning | Snake Bite Cure Prayer in Tamil
நமசிவாய வாழ்க, நாதன்தாள் வாழ்க! விடம் தீர்க்கும் பதிகம் திருப்பழனத்திலிருந்து திங்களூர் புகுந்த திருநாவுக்கரசர் திகைத்து நின்றார். தண்ணீர்ப் பந்தல், சத்திரம், சாலை, குளமென்று அவ்வூரில் எம்மருங்கும் அவர் பெயர் வரையப் பட்டிருந்தது. யார் செய்துவரும் திருத்தொண்டிது! அருகிருந்த பந்தலொன்றில் அமுதமெனத் தண்ணீர் அளித்து விடாய் தீர்த்த அன்பரிடம் வினவினார். ‘தம்மை ஆண்டிருக்கும் பெருந்தகை நாவரசின் மீது கொண்ட பேரன்பால் இவையனைத்தும் எங்களூர் வேதியர் தலைவர் அப்பூதி அடிகளார் அமைத்திருப்பது. தம் மக்களுக்கே மூத்த திருநாவுக்கரசு, இளைய […]