Templesinindiainfo

Best Spiritual Website

Shivarchana

Sivarchana Chandrika – Nithiyathitaana Devathaiyin Vanthana Murai

சிவார்ச்சனா சந்திரிகை – சந்தியாதிட்டான தேவதையின் வந்தன முறை: ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை: சந்தியாதிட்டான தேவதையின் வந்தன முறை சங்கிதாமந்திரங்களாலாவது, காயத்திரியாலாவது மூன்று முறை பிராணாயாமஞ் செய்து, ஹெளம் நேத்திராப்பியாம் நம: என்ற மந்திரத்தை உச்சரித்துக் கட்டை விரல்களால் கண்களில் திவ்விய முத்திரையை நியாசஞ் செய்து, நம: என்னும் பதத்தை இறுதியிலுள்ள மூலமந்திரத்தால் ஜலத்தை நிரீக்ஷணஞ் செய்து (பார்த்து), அதேமந்திரத்தால் தாடனஞ்செய்து (அடித்து), வெளஷடு என்னும் பதத்தை இறுதியிலுடைய கவசமந்திரத்தால் அப்பியுக்ஷணஞ் செய்து […]

Sivarchana Chandrika – Sivatheertham Karppikkum Murai in Tamil

சிவார்ச்சனா சந்திரிகை – சிவதீர்த்தங் கற்பிக்குமுறை ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை சிவதீர்த்தங் கற்பிக்குமுறை மண்ணை இடது கையில் கிழக்கு, தெற்கு, வடக்கு ஆகிய இவற்றில் மூன்று பாகமாகப் பிரித்து வைத்துக் கிழக்குத் திக்கிலுள்ள மண்ணை ஏழுமுறை அஸ்திரமந்திரத்தால் அபிமந்திரணஞ் செய்து, தெற்குத் திக்கிலுள்ள மண்ணை எட்டு முறை ஜெபிக்கப்பட்ட பஞ்சபிரம மந்திரங்களினாலாவது கவசத்தை இறுதியிலுடைய அங்கமந்திரங்களாலாவது அபிமந்திரணஞ் செய்து, வடக்குத் திக்கிலுள்ள மண்ணைப் பத்துமுறை ஜெபிக்கப்பட்ட அஸ்திரமந்திரத்தாலாவது சிவமந்திரத்தாலாவது அபிமந்திரணஞ் செய்த, அஸ்திரமந்திரத்தால் […]

Sivarchana Chandrika – Vithisnanam in Tamil

சிவார்ச்சனா சந்திரிகை – விதிஸ்நாநம: ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளியசிவார்ச்சனா சந்திரிகை விதிஸ்நாநம் பின்னர் விதி ஸ்நாநத்திற்காக விந்துத் தானத்திலிருந்து கங்கை முதலிய தீர்த்தங்களுள் யாதானுமோர் தீர்த்தத்தை அங்குசமுத்திரையினால் வெளஷட் என்னும் பதத்தை இறுதியிலுடைய இருதய மந்திரத்தை உச்சரித்து இழுத்து, உத்பவ முத்திரையால் நமோந்தமான இருதய மந்திரத்தை உச்சரித்து முன்னர் ஸ்தாபித்து, அந்தத் தீர்த்தத்தால் நதி தடாகம் முதலியவற்றை நிறைந்திருப்பதாகப் பாவிக்கவேண்டும். பின்னர் விதிஸ்நாநத்திற்காக வைக்கப்பட்ட மூன்றாவது பாகமாகிய மண்ணை எடுத்து நாபியளவுள்ள நீரிலிறங்கி நதியாயின் பிரவாகத்திற்கு […]

Sivarchana Chandrika – Asthra Santhiyin Murai in Tamil

சிவார்ச்சனா சந்திரிகை – அஸ்திர சந்தியின் முறை: ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளியசிவார்ச்சனா சந்திரிகை அஸ்திர சந்தியின் முறை அஸ்திர மந்திரத்தால் விரல்களின் நுனிகளைக்கொண்டு நீர்த்துளிகளை சிரசில் மூன்றுமுறை புரோக்ஷணஞ் செய்து, “சிவாஸ்திராயவித்மஹே, காலாநலாய தீமஹீ, தந்நச்சஸ்திரப் பிரசோதயாத்” என்ற அஸ்திர காயத்திரியால் சூரியமண்டலத்திலிருக்கும் அஸ்திரதேவதையின் பொருட்டு மூன்று முறை அருக்கியங் கொடுத்துச் கொடுததுச் சத்திக்குத் தக்கவாறு அஸ்திரகாயத்திரியை ஜபிக்கவேண்டும். அல்லது இருதய கமலத்தில் பிரகாசிப்பதாக அஸ்திர மந்திரத்தை தியானஞ் செய்ய வேண்டும்

Sivarchana Chandrika – Malasnana Vithi in Tamil

சிவார்ச்சனா சந்திரிகை – மலஸ்நான விதி: ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளியசிவார்ச்சனா சந்திரிகை: மலஸ்நான விதி முறைப்படி ஆசமனம் கரநியாசம் செய்துகொண்டு, பிராணாயாமஞ்செய்து, கைகளில் தருப்பைகளைத் தரித்துக்கொண்டு சூரியன் எந்த அயனத்திலிருகின்றானோ அந்த அயனத்தையும், மாதத்தையும், திதியையும், வாரத்தையும், ஸ்நானஞ்செய்யும் நதியின் பெயரையும் சொல்லிக்கொண்டு ஹே ஈசா! உம்மைப் பூசிப்பதற்காக நான் ஸ்நானஞ் செய்யப்போகின்றேன்; தேவரீரருள் செய்யவேண்டுமென்று ஈசுவரனைப் பிரார்த்தித்துச் சுத்தமான பூமியை எட்டங்குலம்வரையும் ஹும்பட் என்னும் பதத்தை இறுதியிலுடைய அஸ்திரமந்திரத்தால் தோண்டி, அதேமந்திரத்தால் மண்ணையெழுப்பி, எழுப்பின […]

Sivarchana Chandrikai – Thantha Suththi in Tamil

சிவார்ச்சனா சந்திரிகை – தந்த சுத்தி: ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளியசிவார்ச்சனா சந்திரிகை தந்த சுத்தி பின்னர் இருதயமந்திரத்தை உச்சரித்துக்கொண்டு தோலுடன் கூடிய குச்சியை எடுத்துக்கொள்ளல்வேண்டும். கணுவின் நுனிக்குச் சமீபமாகக் குச்சியை ஒடிக்கலாகாது. குற்றியின் முனையில் நுனியிருக்கவேண்டும். கடைவிரலுக்குச் சமமான பருமனாகவேனும், அல்லது பல்லிற்குத் தக்கபடி சிறிதாகவேனுமிருக்க வேண்டும். இவ்வித இலக்கணம் வாய்ந்த குச்சியானது, நைட்டிகர்களுக்கு எட்டங்குல அளவாகவும், போகிகளுக்குப் பன்னிரண்டங்குல அளவாகவும், பிரமசாரிகளுக்கு பத்து அல்லது எட்டு அல்லது ஏழு அங்குல அளவாகவும், சன்னியாசிகளுக்கு ஆறு […]

Sivarchana Chandrikai – Malajalam Kazhikkum Procedure

சிவார்ச்சனா சந்திரிகை – மலசலம் கழிக்குமுறை: ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை மலசலம் கழிக்குமுறை உரியதான இடத்தையடைந்து சலநிவிர்த்தி மலநிவிர்த்திகள் செய்யவேண்டும். பகற்காலங்களிலும் சந்திகளிலும் வடக்குமுகமாகவும், இராக்காலங்களில் தெற்குமுகமாகவும் ஈருந்துகொண்டுதான் மலசல நிவிர்த்திகள் செய்யவேண்டும். அல்லது காலையில் கிழக்குமுகமாகவம், மாலையில் மேற்குமுகமாகவும், நடுப்பகலில் வடக்குமுகமாகவும், இரவில் தெற்குமுகமாகவும் இருந்துகொண்டு மலசல நிவிர்த்திகள் செய்யலாம். செய்யுங்காலத்தில் வெறும் வெளியிலிருந்துகொண்டாவது, மலசலங்களின் முன்னரிந்துகொண்டாவது, ஒரு திக்கைப்பார்த்துக்கொண்டாவது, சந்திரன், சூரியன், நக்ஷத்திரங்கள், அக்கினி என்னும் இவைகளினுடைய பார்வையிலிருந்துகொண்டாவது, தேவர்கள், […]

Sivarchana Chandrikai Vaigarai Dhyanam

சிவார்ச்சனா சந்திரிகை – வைகறைத் தியானம்: ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய: (தமிழ் மொழி பெயர்ப்பு) வைகறைத் தியானம் சூரியோதயத்திற்கு முன் இரண்டு முகூர்த்தம் அஃதாவது, ஐந்து நாழிகையிருக்கும்பொழுதே எழுந்து கைகால்களைக் கழுவிக்கொண்டு விபூதி தரித்து சமயதீக்ஷையுடையவர்கள் இருதயத்திலும், விசேட தீக்ஷையுடையவன் விந்துத்தானமான லலாடத்திலும், நிருவாணதீக்ஷையுடையவன் சிரசிலும், போதகாசிரியரும் ஆசாரியாபிஷேகம் பெற்றுக்கொண்டவரும் துவாதசாந்தத்திலும் பரமேசுவரனைத் தியானிக்க வேண்டும். பின்னர் மனத்திற்கு இனிமையைத் தரும் சிவபிரானுடைய நாமங்களையும் சரித்திரங்களையும் சங்கீர்த்தனஞ்* செய்க. ( *சங்கீர்த்தனம் – நன்றாய்ச் சொல்லுதல். […]

Shiva Archana Chandrikai | சிவார்ச்சனா சந்திரிகை

ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை: (தமிழ் மொழி பெயர்ப்பு) மங்கள வாழ்த்து: பரிபூரணமான சத்தியையுடைய எந்தப் பரம்பொருளினது ஒரு சிறு கூற்றிலே இந்த எல்லாப் பிரபஞ்சங்களும் அடங்கினவெனச் சிவாகமங்களை அறிந்தவர் கூறுகின்றனரோ, அத்தகைய, பச்சினை (தமால விருக்ஷம்) மரத்தின் காந்திபோல் விளங்கும் கழுத்தையுடையவராயும், நாராயணியென்னும் சத்திக்கு நாயகராயுமிருக்கும் சிவபெருமானுக்கு வணக்கம் செய்கிறேன். நூல் சைவர்கள் அனுட்டிக்கவேண்டிய கடமைகளுள் ஆன்மார்த்த சிவபூஜையானது இன்றியமையாது செய்யத்தக்கதாகும். அது, வைதிக முறையாயும், வைதிகத்தோடு கலந்த ஆகமமுறையாயும், தனி ஆகமமுறையாயுமிருப்பதால், […]

Scroll to top