Templesinindiainfo

Best Spiritual Website

Shiva Archana Chandrikai | சிவார்ச்சனா சந்திரிகை

ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய

சிவார்ச்சனா சந்திரிகை:

(தமிழ் மொழி பெயர்ப்பு)

மங்கள வாழ்த்து:

பரிபூரணமான சத்தியையுடைய எந்தப் பரம்பொருளினது ஒரு சிறு கூற்றிலே இந்த எல்லாப் பிரபஞ்சங்களும் அடங்கினவெனச் சிவாகமங்களை அறிந்தவர் கூறுகின்றனரோ, அத்தகைய, பச்சினை (தமால விருக்ஷம்) மரத்தின் காந்திபோல் விளங்கும் கழுத்தையுடையவராயும், நாராயணியென்னும் சத்திக்கு நாயகராயுமிருக்கும் சிவபெருமானுக்கு வணக்கம் செய்கிறேன்.

நூல்

சைவர்கள் அனுட்டிக்கவேண்டிய கடமைகளுள் ஆன்மார்த்த சிவபூஜையானது இன்றியமையாது செய்யத்தக்கதாகும். அது, வைதிக முறையாயும், வைதிகத்தோடு கலந்த ஆகமமுறையாயும், தனி ஆகமமுறையாயுமிருப்பதால், சைவர்களுக்குச் சைவமுறை (ஆகமமுறை) மிகவும் சிரேஷ்டமானது. அந்தச் சிவபூஜையினுள்ளும் சத்தியின் கலப்பில்லாத சுத்த பூஜையினின்றும், கலப்புடைய சூரியன்முதலிய பூஜைகளினின்றும், சத்தியுடன் கூடிய சிவபூஜையானது போக மோக்ஷங்களைத் தரக்கூடியதாகையால் மிகவும் மேலானது. ஆகையால் அம்பிகையுடன் கூடச் சிவபெருமானைப் பூஜிக்கும் ஆன்மார்த்த சிவபூஜையை எல்லாத் திவ்வியாகமங்களிலிருந்தும் திரட்டிச்சுருக்கமாகக் கூறுகின்றேன்.

ஒவ்வொரு திவ்வியாகமங்களினின்றும் வேண்டிய பகுதிகளை மாத்திரம் எடுத்து இவ்விடத்தில் திரட்டிக் கூறுதலால் பலவாகமஙகளின் கலப்பென்று சொல்லக்ககூடிய கலப்புத் தோஷம் நேரிடாதோவெனின், பலதிவ்யாகமங்களினுடைய பொருளின் கலப்பு இருப்பினும், ஒரே சிவசாத்திரமென்ற ஒற்றுமைபற்றிக் கலப்புத் தோஷம் நேரிடாதென்க. பாசுபதாகமத்தின் பொருள்களைத் திவ்வியாகமங்களின் பொருள்களுடன் கலந்தாற்றான் அத்தோஷம் நேரும். வேண்டிய விடங்களில் ஒரு திவ்வியாகமத்தைச் சார்ந்து பல திவ்யாகமங்களின் பொருள்களையும் கொள்ளலாமென்னுங் கூற்றும் மனிதரால் பிரதிட்டை செய்யப்பட்ட இலிங்கங்களில் பொருந்துமேயல்லது சுயம்பு முதலிய லிங்கங்களிற்பொருந்தாது.

ஈசுவரனும் ஒரு ஆகமத்தை ஆதாரமாகக்கொண்டு அந்த ஆகமத்தின் பொருள்கள் சுருக்கமாக இருப்பின் விரிவான பாகத்தை வேறு ஆகமங்களினின்றும் எடுத்துக்கொள்ளலாமென்று கூறியுள்ளார். ஒரு திவ்வியாகமப்பொருளும் பிறிதொரு திவ்வியாகமப் பொருளும் ஈசுவரன் கூறினமைபற்றிச் சமமாகவிருப்பினும், பூஜைக்கு அங்கமாக எந்த ஆகமத்தைக் கொண்டிருக்கிறோமோ, அதுதான் கொள்ளத்தகுமல்லது பிறிதொரு திவ்வியாகமம் கொள்ளத்தக்கதன்று. ஆதலால் எல்லாத் திவ்வியாமங்களினின்றும் வேண்டிய பகுதிகளை மாத்திரம் எடுத்துச் “சிவார்ச்சனா சந்திரிகை” என்னும் நூலைச் செய்யத் தொடங்குகின்றேன்.

நூலின் சுருக்கம்:

முன்னர் ஆசமனஞ்செய்து, விபூதி உருத்திராக்கங்களால் அலங்கரிக்கப்பெற்ற சரீரத்துடன் சகளீகரணஞ்செய்து, கிரமப்படி சாமான்னிய அருக்கியத்தை அமைத்துகொள்ளல் வேண்டிடும். பின்னர்ச் சிவபூஜைக்குரியவிடத்தைச் சுத்த வித்தியாசொரூபமாகத் தியானஞ்செய்து அந்த இடத்தின் தெற்கு வாயிலில் துவாரபாலர்களை முறைப்படி அர்ச்சனை செய்யவேண்டும். பின்னர் பூமி, ஆகாசம், சுவர்க்கம் என்னும்மிடங்களிலுண்டான மூன்று விக்கினங்களையும் அந்தந்த முறையில் விலக்கிக்கொண்டு உள்ளே சென்று அஸ்திரம் முதலியவற்றின் பூஜையைச் செய்து சிவபூஜைக்கு வேண்டிய எல்லாப் பொருள்களையுந் சேகரித்து சமீபத்தில் வைத்துக்கொள்ளல்வேண்டும். பின்னர் ஈசுவரனுக்கு வலது பாகத்திலாவது அக்கினிதிக்கிலாவது வடக்கு முகமாக விதிக்கப்பட்ட ஆசனத்திலமர்ந்து ஐந்து சுத்திகளையுஞ் செய்தல் வேண்டும். இவ்வாறு இந்நூலின் சுருக்கத்தை அறிந்து கொள்க.

1) சிவார்ச்சனா சந்திரிகை- வைகறைத் தியானம்
2) சிவார்ச்சனா சந்திரிகை – மலசலம் கழிக்குமுறை
3) சிவார்ச்சனா சந்திரிகை – தந்த சுத்தி
4) சிவார்ச்சனா சந்திரிகை – மலஸ்நான விதி
5) சிவார்ச்சனா சந்திரிகை – அஸ்திர சந்தியின் முறை
6) சிவார்ச்சனா சந்திரிகை – விதிஸ்நாநம
7) சிவார்ச்சனா சந்திரிகை – சிவதீர்த்தங் கற்பிக்குமுறை
8) சிவார்ச்சனா சந்திரிகை – சந்தியாதிட்டான தேவதையின் வந்தன முறை
9) சிவார்ச்சனா சந்திரிகை – சிவபூஜையின் முறை
10) சிவார்ச்சனா சந்திரிகை – ஆசமன விதி

11) சிவார்ச்சனா சந்திரிகை – சிவபூஜையின் சுருக்கம்
12) சிவார்ச்சனா சந்திரிகை – சிவபூஜையின் விரி- ஆசமனம்
13) சிவார்ச்சனா சந்திரிகை – விபூதியின் வகை
14) சிவார்ச்சனா சந்திரிகை – ஸ்னானமுறை
15) சிவார்ச்சனா சந்திரிகை – விபூதிஸ்நான முறை
16) சிவார்ச்சனா சந்திரிகை – திரிபுண்டர முறை
17) சிவார்ச்சனா சந்திரிகை – உருத்திராக்கதாரண விதி
18) சிவார்ச்சனா சந்திரிகை – சகளீகரண முறை
19) சிவார்ச்சனா சந்திரிகை – கரநியாசம்
20) சிவார்ச்சனா சந்திரிகை – அங்கநியாசம்

21) சிவார்ச்சனா சந்திரிகை – சாமான்னியார்க்கிய பூஜை
22) சிவார்ச்சனா சந்திரிகை – துவாரபாலர் பூஜை
23) சிவார்ச்சனா சந்திரிகை – ஆன்ம சுத்தி
24) சிவார்ச்சனா சந்திரிகை – தேகசுத்தி
25) சிவார்ச்சனா சந்திரிகை – பூதசுத்தி
26) சிவார்ச்சனா சந்திரிகை – தத்துவ சுத்தி
27) சிவார்ச்சனா சந்திரிகை – அந்தரியாகம்
28) சிவார்ச்சனா சந்திரிகை – அகத்து அக்கினி காரியம்
29) சிவார்ச்சனா சந்திரிகை – தானசுத்தி
30) சிவார்ச்சனா சந்திரிகை – திரவியம் சேகரிக்கும் முறை

31) சிவார்ச்சனா சந்திரிகை – பாத்தியம் முதலியவற்றின் பூஜை
32) சிவார்ச்சனா சந்திரிகை – பஞ்ச கவ்விய முறை
33) சிவார்ச்சனா சந்திரிகை – பஞ்சாமிருதம்
34) சிவார்ச்சனா சந்திரிகை – ஸ்நபனோதகம்
35) சிவார்ச்சனா சந்திரிகை – திரவியசுத்தி
36) சிவார்ச்சனா சந்திரிகை – மந்திரசுத்தி
37) சிவார்ச்சனா சந்திரிகை – பூஜையின் வகை
38) சிவார்ச்சனா சந்திரிகை – லிங்க சுத்தி
39) சிவார்ச்சனா சந்திரிகை – அபிஷேக முறை
40) சிவார்ச்சனா சந்திரிகை – அபிஷேக பலன்

41) சிவார்ச்சனா சந்திரிகை – தாராபிஷேக முறை
42) சிவார்ச்சனா சந்திரிகை – அனுக்ஞை
43) சிவார்ச்சனா சந்திரிகை – சிவாசன பூஜை
44) சிவார்ச்சனா சந்திரிகை – சதாசிவத்தியானம்
45) சிவார்ச்சனா சந்திரிகை – ஆவாஹன முறை
46) சிவார்ச்சனா சந்திரிகை – பாத்திய முதலியவற்றைச் சமர்ப்பிக்குமுறை
47) சிவார்ச்சனா சந்திரிகை – சந்தனம சேர்க்கும் முறை
48) சிவார்ச்சனா சந்திரிகை – புஷ்பவகை
49) சிவார்ச்சனா சந்திரிகை – பத்திரங்களுள் மிகச்சிறந்தவை வருமாறு
50) சிவார்ச்சனா சந்திரிகை – அர்ச்சனையின் முறை

51) சிவார்ச்சனா சந்திரிகை – அலங்காரம்
52) சிவார்ச்சனா சந்திரிகை – தூபோபசாரமுறை
53) சிவார்ச்சனா சந்திரிகை – தூபத்திரவியங்கள்
54) சிவார்ச்சனா சந்திரிகை – தீபோபசாரம்
55) சிவார்ச்சனா சந்திரிகை – ஆவரணபூஜை
56) சிவார்ச்சனா சந்திரிகை – முதலாவது ஆவரணபூஜை
57) சிவார்ச்சனா சந்திரிகை – இரண்டாவது ஆவரண பூசை
58) சிவார்ச்சனா சந்திரிகை – மூன்றாவது ஆவரண பூசை
59) சிவார்ச்சனா சந்திரிகை – நான்காவது ஆவரண பூசை
60) சிவார்ச்சனா சந்திரிகை – ஐந்தாவது ஆவரண பூசை

61) சிவார்ச்சனா சந்திரிகை – நைவேத்தியஞ் செய்யும் முறை
62) சிவார்ச்சனா சந்திரிகை – நைவேத்தியஞ் சமர்ப்பிக்கும் முறை
63) சிவார்ச்சனா சந்திரிகை – நைவேத்தியத்தை யேற்றுக்கொள்ளு முறை
64) சிவார்ச்சனா சந்திரிகை – முகவாசம்
65) சிவார்ச்சனா சந்திரிகை – தீபஞ் சமர்ப்பித்தல்
66) சிவார்ச்சனா சந்திரிகை – ஆரத்தி சமர்ப்பிக்கும் முறை
67) சிவார்ச்சனா சந்திரிகை – கருப்பூரதீபஞ் சமர்ப்பிக்கும் மறை
68) சிவார்ச்சனா சந்திரிகை – பஞ்சாக்கர செபமுறை
69) சிவார்ச்சனா சந்திரிகை – பிரதக்ஷிணஞ் செய்யும் முறை
70) சிவார்ச்சனா சந்திரிகை – நமஸ்காரஞ் செய்யுமுறை

71) சிவார்ச்சனா சந்திரிகை – அக்கினிகாரியஞ் செய்யுமுறை
72) சிவார்ச்சனா சந்திரிகை – சிவாகம பூசை செய்யும் முறை
73) சிவார்ச்சனா சந்திரிகை – குருபூசை
74) சிவார்ச்சனா சந்திரிகை – பிரார்த்தனை
75) சிவார்ச்சனா சந்திரிகை – பூசையைப் பூர்த்திசெய்யும் முறை
76) சிவார்ச்சனா சந்திரிகை – பூசைசெய்தற்குரிய காலம்
77) சிவார்ச்சனா சந்திரிகை – உபசாரம்
78) சிவார்ச்சனா சந்திரிகை – அஷ்ட புஷ்ப அர்ச்சனை
79) சிவார்ச்சனா சந்திரிகை – கபில பூசை
80) சிவார்ச்சனா சந்திரிகை – பரார்த்தாலய தரிசம்

81) சிவார்ச்சனா சந்திரிகை – சித்தாந்த சாத்திரபடனம்
82) சிவார்ச்சனா சந்திரிகை – சுல்லி ஓமம் செய்யும் முறை
83) சிவார்ச்சனா சந்திரிகை – நிர்மால்ய போஜன ஆராய்ச்சி
84) சிவார்ச்சனா சந்திரிகை – போஜன விதி
85) சிவார்ச்சனா சந்திரிகை – முடிவுரை

Shiva Archana Chandrikai | சிவார்ச்சனா சந்திரிகை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to top