Templesinindiainfo

Best Spiritual Website

Sivarchana Chandrika – Archanaiyin Murai in Tamil

சிவார்ச்சனா சந்திரிகை – அர்ச்சனையின் முறை:

ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை
அர்ச்சனையின் முறை

இவ்வாறு மூலமந்திரத்தை யுச்சரித்துக்கொண்டு புஷ்பம் முதலியவற்றால் அருச்சித்து ஹாம் சிவாசனாயக நம:, ஹாம் ஹம் ஹாம் சிவமூர்த்தயே நம:, ஹாம் ஹெளம் சிவாய நம:, ஹோம் ஈசானமூர்த்தநே நம:, ஹேம் த்புருஷவக்தராய நம:, ஹ§ம் அகோர ஹிருதயாய நம:, ஹிம் வாமதேவகுஹ்யாய நம:, ஹம்ஸத்யோஜாத மூத்தயே நம: என்று உச்சரித்துக்கொண்டு ஆசனம், மூர்த்தி, மூலமந்திரங்களானும், பஞ்சப்பிரம மந்திரங்களானும் எட்டுப் புஷ்பங்களானுமர்ச்சித்து, ஹாம் ஹிருதயாய நம: என்பது முதலிய அங்கமந்திரங்களானும் அர்ச்சிக்க வேண்டும். பின்னர், ஆயிர நாமங்களாலாவது, நூறு நாமங்களாலாவது அர்ச்சிக்க வேண்டும்.

அதற்குக் காலங் கிடைக்கவில்லையாயின், சர்வாயக்ஷிதிமூர்த்தயே நம:, பவாயஜல மூர்த்தயே நம:, ருத்ராய தேஜோமூர்த்தயே நம:, உக்ராயவாயு மூர்த்தயே நம:, பீமாய ஆகாசமூர்த்தயே நம:, பசுபதயே யஜமானமூர்த்தயே நம:, ஈசானாய சூர்யமூர்த்தயே நம:, மஹாதேவாய சோமமூர்த்தயே நம: என்னும் எட்டு நாமங்களாலாவது சிவாய நம:, மகேசுவராய நம:, ருத்ராய நம:, விஷ்ணவே நம:, பிதாமஹாய நம:, ஸம்ஸாரவைத்யாய நம:, ஸர்வஞ்ஞாய நம:, பரமாத்மநே நம: என்னும் எட்டு நாமங்களாலாவது அர்க்சிக்க வேண்டும்.

அல்லது, பிரவே நம:, சம்பவே நம:, உமாபதயே நம: என்ற மூன்று நாமங்களாலாது அர்ச்சிக்க வேண்டும். அல்லது, நமோ நீலகண்டாய நம: என்று ஒரு புஷ்பத்தாலாவது அர்ச்சித்து சக்திக்குத் தக்கவாறு புஷ்பமாலைகளால் அலங்கரிக்க வேண்டும்.

Sivarchana Chandrika – Archanaiyin Murai in Tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to top