Templesinindiainfo

Best Spiritual Website

appaiya dhikshthar

Sivarchana Chandrikai – Mudivurai in Tamil

சிவார்ச்சனா சந்திரிகை – முடிவுரை: ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை முடிவுரை இவ்வாறு நாடோறும் பிராதக் காலத்தில் சிவசிந்தனை செய்து, தன்னால் இயன்றவாறு ஸ்நானம், விபூதி, உருத்திராக்கதாரணம், சந்திதேவதைகளை உபாசித்தல் என்னும் இவற்றைச் செய்து கொண்டும், மூன்று காலங்களிலாவது, இரண்டு காலங்களிலாவது, ஒரு காலத்திலாவது ++நாற்பது, அல்லது பதினாறு, பத்து, ஐந்து என்னும் உபசாரங்களாலாவது, அல்லது அஷ்டபுஷ்பங்களாலாவது சிவபெருமானைப் பூசித்துக்கொண்டும், அவகாசமிருந்தால் சிவசாத்திரங்களையும் பாராயணம் செய்துகொண்டும், சிவகதைகளையுங் கேட்டுக்கொண்டும், போஜன காலத்தில் சிவனுடைய அக்கினி […]

Sivarchana Chandrikai – Bojana Vithi in Tamil

சிவார்ச்சனா சந்திரிகை – போஜன விதி: ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை போஜன விதி ஆபஸ்தம்பம், போதாயனம் முதலிய அவரவர் சூத்திரத்திற் கூறப்பட்டவாறு ஸ்வாஹாந்தமான மந்திரங்களால் ஓமஞ் செய்து அக்கினி முதலாயினாரை அனுப்புதல் வேண்டும். இவ்வாறு அக்கினி காரியத்தைச் செய்து கை, கால்களைக் கழுவி ஆசமனம் செய்து ஈன சாதியர்களான தீக்ஷை பெறாதவர்களைத் தம்முடைய பந்திக்கு வரவொட்டாது விலக்கிக் கொண்டு, நல்லொழுக்கத்துடன் கூடின சிவபக்தர்களுடன் போசனம் செய்யும் இடத்தை அடைந்து பீடத்தில் கிழக்கு முகமாக […]

Sivarchana Chandrikai – Sithantha Saathira Padanam in Tamil

சிவார்ச்சனா சந்திரிகை – சித்தாந்த சாத்திரபடனம் ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை சித்தாந்த சாத்திரபடனம் இவ்வாறு சிவதரிசனம் செய்த பின்னர் இல்லத்தை அடைந்து காலத்துக்குத் தக்கவாறு சிறிது நேரமேனும் சித்தாந்தசாத்திரத்தைத் தீக்ஷை பெற்றவருடன், தீக்ஷையில்லாதார் பார்வையின்றி கேட்டல், படித்தல்களைச் செய்தல் வேண்டும். “ஓ சிரேட்டமான முகத்தையுடையவளே! திருடருக்குத் தெரிவிக்காமல் பொருளை எவ்வாறு காக்கின்றோமோ, அவ்வாறே அபத்தர்களுக்குத் தெரிவிக்காமல் அந்த ஞானத்தைக் காத்தல் வேண்டும்” என்னும் வசனத்தால் தீக்ஷை பெறாதவருடைய சம்பந்தத்தை நீக்குதல் வேண்டும் என்பதை […]

Sivarchana Chandrikai – Praartha Aalaya Tharisanam in Tamil

சிவார்ச்சனா சந்திரிகை – பரார்த்தாலய தரிசம்: ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை பரார்த்தாலய தரிசனம் இவ்வாறு கபில பூசை முடிந்த பின்னர் ஆலயத்திற்கு சென்று சிவபெருமானைத் தரிசிக்க வேண்டும். தரிசிக்கும் முறைவருமாறு:- ஆலயத்துக்கு அருகே சென்று கோபுரத்துவாரத்திற்கு வெளியிலாவது, பலிபீடத்திற்கு வெளியிலாவது, தூலலிங்க சொரூபமான விமானத்திற்கு நமஸ்காரம் செய்ய வேண்டும். பின்னர் பத்திரலிங்கமாகிய பலிபீடம், கொடிமரம், இடபம் என்னும் இவற்றிற்கு நமஸ்காரத்தைச் செய்து, “ஆலயத்திற்குள் செல்லுதலாலும், சிவபெருமானைத் தரிசித்தலாலும், அவரை அருச்சித்தலாலும் உண்டாகும் பலனை […]

Sivarchana Chandrikai – Kapila Pujai in Tamil

சிவார்ச்சனா சந்திரிகை – கபில பூசை ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை கபில பூசை இவ்வாறு சிவபூசையை முடித்துவிட்டுக் கபில பூசையைச் செய்ய வேண்டும். அது வருமாறு:- நந்தை, பத்திரை, சுரபி, சுசீலை, சுமனஸ் என்னும் பெயரையுடைய பொன்மை வர்ணமான பசுவை “பஞ்சகோத்ர ரூபாயை கபிலாயை நம:” என்று சொல்லிக்கொண்டு சந்தனம் புஷ்பங்களால் அர்ச்சித்து, ஓ உலகத்துக்கு அன்னையாயும், தேவர்களுக்கு அமிர்தத்தை அளிப்பவளாயும் இருக்கும் தேனுவே! என்னால் கொடுக்கப்பெற்ற இந்தக் கவளத்தை ஏற்றுக்கொண்டு என்னுடைய […]

Sivarchana Chandrikai – Ashta Pushpa Archanai in Tamil

சிவார்ச்சனா சந்திரிகை – அஷ்ட புஷ்ப அர்ச்சனை: ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை அஷ்ட புஷ்ப அர்ச்சனை இவ்வாறு கூறப்பட்ட நியமங்களுடன் ஐந்து உபசாரங்களையும் செய்ய முடியாதவன் அட்ட புஷ்பங்களால் அர்ச்சிக்க வேண்டும். அது வருமாறு, – சுத்தமான மனதுடன் ஒரு புஷ்பத்தை ஆசன நிமித்தமாகச் சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் இன்னுமொரு புஷ்பத்தை இருதயத்தால் மூர்த்தியைத் தியானிக்கும் நிமித்தமாகச் சமா¢ப்பிக்க வேண்டும். பின்னர் ஐந்து புஷ்பங்களை ஐந்து அங்கங்களையும் தியானிக்கும் நிமித்தமாகச் சமர்ப்பிக்க வேண்டும். […]

Sivarchana Chandrikai – Pujai Seitharkuriya Kalam in Tamil

சிவார்ச்சனா சந்திரிகை – பூசைசெய்தற்குரிய காலம்: ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை பூசைசெய்தற்குரிய காலம் இவ்வாறு விடியுங்காலம், உச்சிக்காலம், சாயங்காலம், நடுராத்திரியென்னும் இக்காலங்களிலாவது, அல்லது விடியுங்காலம் முதல் மூன்று காலங்களிலாவது, அல்லது விடியுங்காலம் முதல் இரண்டு காலங்களிலாவது, அல்லது விடியுங்காலத்திலாவது மூன்று நாழிகை வரை பூசை செய்யவேண்டும். சங்கிராந்தி கிரகணம், அட்டமி, சதுர்த்தசியாகிய இக்காலங்கள் நீங்கிய ஏனைய நாட்களில் போகத்தை விரும்புகிறவன் இரவில் பூசை செய்யக்கூடாது. அவன் மூன்று கால பூசை செய்பவனாயின், அத்தமன […]

Sivarchana Chandrikai – Pujaiyai Poorthi Seiyum Murai in Tamil

சிவார்ச்சனா சந்திரிகை – பூசையைப் பூர்த்திசெய்யும் முறை: ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை பூசையைப் பூர்த்திசெய்யும் முறை பின்னா¢, சத்தியோஜாதம் முதலாக முறையே ஐந்து சிரசுகளிலும் சிவனையருச்சித்து, அஸ்திரம் முதல் இருதயம் ஈறாகவுள்ள அங்கங்களையும் எதிர் முறையாகப் பூசித்து, விருப்பப்படி முன்போல் ஊர்த்துவமுகமாக இருப்பீராகவென்று பிரார்த்தித்து ஹாம், ஹெளம், சிவாய ஸாங்காய பராங் முகார்க்கியம் ஸ்வாஹா என்று பராங்முகார்க்கியங் கொடுத்து, கொ¢ப்பக்கிருகத்திலிருக்கும் ஆவரணரூபமான சத்தியோஜாதம் முதலிய பஞ்சப்பிரம மந்திரங்களையும், அஸ்திரம் முதலிய அங்கமந்திரங்களையும், ஈசுவரனுடைய […]

Sivarchana Chandrikai – Praarthanai in Tamil

சிவார்ச்சனா சந்திரிகை – பிரார்த்தனை: ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை பிரார்த்தனை பின்னர், சிவபெருமானிடத்திற்குவந்து அட்ட புஷ்பங்களால் சிவனைப் பூசித்து, விசேடார்க்கியங்கொடுத்து, நமஸ்கரித்து விருப்பமான பிரார்த்தனையைச் செய்து, ஓ பிரபோ! யான் அறியாமையால் குறைவாகவோ அதிகமாகவோ கிரியைகளைச் செய்திருப்பினும், அவற்றைத் தேவரீர் ஏற்றுக் கிரியை பூர்த்தியானதாகவே அருள்புரிய வேண்டும். ஓ பக்தர்களிடத்து அன்புள்ளவதே! என்னால் இரவும் பகலும் அநேக அபராதங்கள் செய்யப்படுகின்றன. எனை அடிமையாகப் பாவித்து அவற்றைப் பொறுத்தருளல் வேண்டும். ஓ சுவாமின்! சிறியனாகவும், […]

Sivarchana Chandrikai – Guru Pujai in Tamil

சிவார்ச்சனா சந்திரிகை – குருபூசை: ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை குருபூசை பின்னர், தமது பீடத்திலிருக்கும் குருவையடைந்து அவருடைய பாதங்களைச் சுத்திசெய்து பரமசிவன் என்னும் புத்தியுடன் சந்தனம் முதலியவற்றால் பூசித்து, மூன்று புஷ்பாஞ்சலிகள் செய்து, சாஷ்டாங்கமாக மூன்றுமுறை நமஸ்கரித்து எழுந்து, பூமியில் முழங்கால்களை வைக்கொண்டும் இருகைகளைக் குவித்துக்கொண்டும் குற்றங்களைப் பொறுத்தருளர் வேண்டுமெனப்பிரார்த்திக்க வேண்டும். “தேனில் விருப்பமுள்ள வண்டானது சோலையில் ஒரு புஷ்பத்தினின்றும் நீங்கிப் பிறிதொரு புஷ்பத்திற்குச் செல்லுமாறுபோல, ஞானத்தில் விருப்பமுள்ள சீடன் ஒரு குருவினிடத்தினின்றும் […]

Scroll to top