Shivarchana

Sivarchana Chandrika – Manthira Suththi in Tamil

சிவார்ச்சனா சந்திரிகை – மந்திரசுத்தி:

ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை
மந்திரசுத்தி

பற்கள் அண்ணம் உதடுகள் என்னுமிவற்றின் வியாபாரத்தாலுண்டான மாயாகரியமான அசுத்தத்தை நாசஞ்செய்யும் பொருட்டும், ஐசுவரியரூபமான அதிகார மலத்தால் பலத்தைக் கொடுக்கக் கூடிய சாமர்த்தியம் வாய்ந்த மந்திரங்கள் மறைக்கப்பட்டிருத்தலால், அந்த மந்திரங்களுக்கு அந்தச் சாமர்த்தியத்தை யுண்டபண்ணுதற் பொருட்டும், மந்திரங்களின் சுத்தியைச் செய்ய வேண்டும். அதன் முறை வருமாறு :-

இருதயத்தில் அஞ்சலிபந்தனஞ் செய்துகொண்டு விந்துஸ்தானம் முடியவும், பிரமரந்திரம் முடியவும், சிகை முடியவும் முறையே ஹ்ரஸ்வம், தீர்க்கம், ப்லுதம் என்னும் சுரத்துடன் பிரணவத்தை ஆதியாகவுடையதாயும், நமோந்தமாயுமுள்ள மூலமந்திரத்தை மூன்றுமுறை மெல்ல உச்சரிக்க வேண்டும். பின்னர், பஞ்சப்பிரம்ம மந்திரங்கள் ஷடங்கமந்திரங்களையும் அவ்வாறே உச்சரிக்க வேண்டும். மந்திர சுத்தி முடிந்தது.

இவ்வாறு மந்திரசுத்தி செய்த பின்னர், பரிவாரதேவதைகளிருக்குமாயின்அந்தத் தேவதைகளையும் பூஜிக்கவேண்டும். சத்தியுடன் கூடின கேவலமான சிவபூஜையில் பரிவார தேவதைகள் எவ்வாறிருத்தல் கூடுமெனின், கூறுதும்.

Add Comment

Click here to post a comment