Templesinindiainfo

Best Spiritual Website

Sivarchana Chandrikai – Nirmalya Bojana Arayichi in Tamil

சிவார்ச்சனா சந்திரிகை – நிர்மால்ய போஜன ஆராய்ச்சி:

ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை
நிர்மால்ய போஜன ஆராய்ச்சி

பின்னர், சிவபெருமானுக்கு நிவேதனஞ் செய்யப்பெற்ற அன்னத்தையாவது, எஞ்சியிருக்கும் அன்னத்தையாவது உண்ணுதல் வேண்டும்.

“என்னால் அனுபவிக்கப்பட்ட நிர்மால்யம், பாதஜலம், புஷ்பம், பத்ரம் என்னும் இவற்றை எவன் ஆதரவுடன் அநுபவிக்கின்றானோ, அவன் முறை அறம், பொருள், இன்பம், வீடு என்னும் இவற்றை அடைகின்றான்” என்னும் வாக்கியங்களால் சிவனுக்கு நிவேதனம் செய்யப்பெற்ற அன்னத்தை உண்ணுதலால் உண்டாம் பயன் மிகமேலானதென்பது காணப்படுகின்றது.

“சிவபெருமானுடைய நிர்மால்யத்தைத் தரித்தலும், உண்ணுதலும் ஆகாது” என்று கூறும் வாக்கியங்களால் சிவநிர்மால்யத்தை அநுபவித்தல் கூடாதென்பதும் காணப்படுகின்றது.

ஆகவே சில இடங்களில் சிவ நிர்மால்யத்தைக் கொள்ளலாமென்று விதியும், சில இடங்களில் கொள்ளக்கூடாதென்று விலக்கும் காணப்படுதலால், சிவதீக்ஷையுடையார் சிவநிர்மால்யத்தை உட்கொள்ளலாமென்றும், சிவதீக்ஷை இல்லாதார் அதனை உட்கொள்ளலாகாதென்றும், விதி, விலக்குகளுக்கு முரணாதவாறு நிர்ணயம் செய்து கொள்ளல் வேண்டும்.

சிவதீக்ஷை இல்லாதார் சிவநிர்மால்யத்தை அநுபவித்தலால் அவருக்கு உண்டாம் துன்பம் சிவபுராணத்தில் கூறப்படுகின்றது. அது வருமாறு:- “நிர்மால்யம் என்பதற்கு மலமற்றதாயிருப்பது கொண்டு சுத்தமாயிருப்பது என்பது பொருள். அது பற்றியே அது ஒருவராலும் நிந்திக்கப்படாதது. சுத்தமான அந்த நிர்மால்யத்தைச் சிவபாவனை அற்றவராயும், அசுத்தராயும் உள்ளவர் ஒருபொழுதும் அநுபவித்தல் கூடாது. சுவையின் விருப்பத்தால் அநுபவிப்பின் ரௌரவம் என்னும் பெயா¢கொண்ட கொடிய நரகத்தை அடைவான்” என்பதாம்.

ஆகையால் சிவதீக்ஷையில்லாதார் சிவநிர்மால்யத்தை உநுபவித்தல் கூடாதென்பதும், சிவதீக்ஷை உடையார் சிவநிர்மால்யத்தை அநுபவித்தல் கூடும் என்பதும் செவ்வனே விளங்குகின்றதென்பது சிலர் கொள்கை.

காமிகம் முதலிய சித்தாந்த சாத்திரங்களில் சிவதீக்ஷை பெற்றவருக்கே சமயாசாரங்கள் விதிக்கப்படுதலாலும், அந்தச் சித்தாந்த சாத்திரங்களில் சிவநிர்மால்யத்தை அநுபவித்தலாகாது; நிந்தித்தலும் ஆகாது; தவறி அநுபவிப்பின் அகோர மந்திரத்தைப் பதினாயிரம் முறை செபிக்க வேண்டும் என்று கூறப்படுதலால் விலக்கும், பிராயச்சித்தமும் காணப்படுதலாலும், காமிகம் முதலியவற்றால் தீக்ஷைபெற்றவர் அநுபவித்தல் கூடாதென்பது “தின்னக்கூடிய பொருள்கள் என்னும் இவற்றைச் சிவனுக்கு நிவேதித்து, அவற்றைச் சிவபெருமானிடம் அடிமைப்பாவனையுடன் உண்ணுதல் வேண்டும்” என்னும் பொருள் கொண்ட வாக்கியங்களும், இன்னும் இதுபோன்ற புராணவசனங்களும் காணப்படுதலால் வைதிக, பௌராணிக, பாசுபதம் முதலியவற்றில் விதிக்கப்பட்ட சிவசமஸ்காரத்தால் எவர்கள் தீக்ஷை பெற்றவர்களோ அவர்களே சிவநிர்மால்யத்தை அநுபவிக்கலாமென்பதும் சிலர் கொள்கை.

அதே காமிகாகமத்திலேயே அசுத்தமான ஆன்மாவையுடைய எவன் அசுத்தத்துடன் ஆசையினால் என்னால் அநுபவிக்கப்பெற்ற பரமசுத்தமான நிர்மால்யத்தை அநுபவிக்கின்றானோ, அவன் இரசத்தை உண்டவன் எவ்வாறு நாசமடைவானோ அவ்வாறே நாசமடைவான் என்றும், என்னுடைய அடையாளங்களான விபூதி, உருத்திராக்க முதலியவற்றைத் தரித்து என்னையே சரணமாக எவர் அடைந்திருக்கின்றனரோ அவரே என்னுடைய நிர்மால்யத்தை அநுபவிக்கலாம்; ஏனையோர், அநுபவித்தல் கூடாது என்றும் கூறப்பட்டிருத்தலாலும், வாதுளாகமம் முதலியவற்றில் ஆயிரம் உபவாசங்களின் பலன்களும், அநேகம் பிராஜாபத்தியங்களின் பலன்களும், சிவப்பிரசாதத்தின் பலத்தின் கோடியில் ஒரு அம்சத்திற்குக் கூடச் சமானமாகாது என்று கூறப்பட்டிருத்தலாலும், சித்தாந்த முறைப்படி தீக்ஷை பெற்றவருக்கும் சிவநிர்மால்யத்தை அநுபவித்தல் கூடும் என்பது பெறப்படுகின்றது.

சிவ நிர்மால்யத்தை அநுபவித்தல் கூடாதென்றும், அநுபவித்தல் பிராயச்சித்தம் செய்தல் வேண்டும் என்றுங் கூறப்பட்ட வசனங்களுக்குக் கருத்தென்னையெனின், கூறுதும்,

சிவநிர்மால்யமானது தேவஸ்வம் என்றும், தேவதாத்திரவியம் என்றும், நைவேத்தியம் என்றும், நிவேதிதம் என்றும், சண்டதிரவியம் என்றும், நிர்மால்யம் என்றும் ஆறுவகைப்படும். அவற்றுள் தேவஸ்வம் என்பது சிவசம்பந்தமான கிராமம் பூமிமுதலியன தேவதாத்திரவியம் என்பது சிவசம்பந்தமான வஸ்திரம் சுவர்ணம் வெள்ளி இரத்தினம் முதலியன. நைவேத்தியம் என்பது சிவபெருமானுக்காகச் சங்கற்பிக்கப்பட்டு நிவேதனம் செய்யப்படாத அன்னம், பலம், புஷ்பம் முதலியன. நிவேதிதம் என்பது சிவபெருமானுக்கு நிவேதனம் செய்யப்பட்ட அன்னம், பழம் முதலியன. சண்டதிரவியம் என்பது சணடேசுவரருக்குச் சமர்ப்பிக்கப்பட்ட நைவேத்தியம் புஷ்பம் முதலியன நிர்மால்யம் என்பது வெளியே போடப்பட்ட நிர்மால்யங்கள்.

இந்த ஆறனுள், நிவேதிதம் நீங்கிய ஐந்தையும் அனைவரும் அநுபவித்தல் கூடாது. நிவேதிதத்தைச் சிவதீக்ஷை உடையார் அநுபவிக்கலாம். ஏனையோர் அநுபவித்தல் கூடாது. அநுபவித்தால் பிராயச்சித்தம் செய்யவேண்டும் என்பதே அந்த விலக்கு வாக்கியங்களுக்கும், பிராயச்சித்தவாக்கியங்களுக்கும் கருத்தாகும்.

இது எவ்வாறு பெறப்படுகின்றதெனின், காமிகாகமத்தில் முதலாவது நிர்மால்யத்தின் ஆறு பேதங்களைக் கூறி, பின்னர் அவற்றை அநுபவித்தலால் உண்டாங் கேட்டையும் கூறி, அதன்பின்னர் தவறி அநுபவித்தால் பிராயச்சித்தமும் கூறிவிட்டு, அதன் பின்னரே சிவபெருமானுடைய நிவேதிதம் என்னும் நிர்மால்யத்தைச் சிவதீக்ஷையுடையார் அநுபவித்தற்கு அநுமதிகொடுத்தற் பொருட்டு, அசுத்தான்மாவான எவன் அசுத்தத்துடன் ஆசையினால் சிவநிர்மால்யத்தை அநுபவிக்கின்றானோ அவன் நாசத்தை அடைவான் என்ற வசனம் படிக்கப்பட்டிருத்தலால் பெறப்படுகின்றதென்க.

ஆகவே, சிவநிர்மால்ய அநுபவவிலக்கு சித்தாந்த முறைப்படி தீக்ஷைபெறாதவர்களுக்கென்பதும், அந்த முறைப்படி தீக்ஷைபெற்றவர்கள் சிவநிர்மால்யத்தை அநுபவிக்கலாமென்பதும் சிலர் கொள்கை.

சுப்ரபேதாகமத்தில் சிவபெருமானுடைய நிர்மால்யத்தை மனிதன் அனுபவித்தல் கூடாது; பசுக்களிடத்திலும், யானைகளிடத்திலும் செலவிடல் வேண்டும்; அல்லது நீரிலாவது போடுதல் வேண்டும்; அல்லது தகனம் செய்தல் வேண்டும்; அல்லது பூமியிலாவது புதைத்தல் வேண்டுமென்று கூறப்பட்டிருத்தலால், மானுடப்பிறவியில் உதித்த அனைவரும் சிவ நிர்மால்யத்தை அநுபவித்தல் ஆகாதென்பதும், நிலம் நீர் அக்கினி பசு யானை என்னும் இவற்றிற் செலவிடல் வேண்டும் என்பதும் பெறப்படுதலால், சிவதீக்ஷை பெற்றவரும் சிவநிர்மால்யத்தை அநுபவித்தல் கூடாதென்பது செவ்வனே விளங்குகின்றது.

சிவதீக்ஷை பெற்றவர் சிவநிர்மால்யத்தை அநுபவித்தல் கூடுமென்ற விதியின் கருத்து, சிவலிங்கம் அல்லாத ஏனைய சகளமூர்த்திகளுக்கு நிவேதனம் செய்யப்பட்ட நிர்மால்யத்தை அநுபவிக்கலாமென்பதேயாம். இதற்குப் பிரமாணம், சிவன்கோவிலுக் குள்ளிருக்கும் நடேசர் முதலிய சகளமூர்த்திகளுக்குச் சண்டாதிகாரம் கிடையாது என்னும் வாக்கியமேயாகும். இதனால் சண்டாதிகாரமுடைய சிவநிர்மால்யத்தை அநுபவித்தல் கூடாதென விலக்கியதாகும்.

காரணாகமத்திலும் சகளநிர்மாலியத்தை அனைவரும் அநுபவிக்கலாமென்று கூறப்பட்டிருக்கின்றது. அவ்விடத்து அனைவரும், என்னும் பதத்தால் சிவதீக்ஷை பெற்ற எல்லாப் பரிசாரகரையும் பொருளாகக் கொள்ளல் வேண்டும். எதனாலெனின், சுப்ரபேதாகமத்தில் சதாசிவ நிர்மாலியத்தை மனிதர் அநுபவித்தல் கூடாதெனக்கூறி அதன் பின்னர் சகளநிர்மால்யத்தைப் பரிசாரகர் அநுபவித்தல் வேண்டும்; ஏனையோர் அநுபவித்தால் அவர்கள் தோஷத்தைச் செய்தவராவர் என்று கூறப்பட்டிருத்தலால் என்க.

ஆகையால் சிவலிங்க நிர்மால்யத்தை அனுபவித்தல் கூடாதென்பதும், சகளமூர்த்திகளின் நிர்மால்யத்தை அநுபவித்தல் கூடுமென்பதும் சிலர் கொள்கை.

சதாசிவ நிர்மால்யங்களுள்ளும் மனிதர் முதலியோரால் பிரதிட்டை செய்யப்பெற்ற இலிங்கத்தில் அர்ப்பணம் செய்யப்பட்ட நிர்மால்யங்களைத்தான் அநுபவித்தல் கூடாது; சரலிங்கம் முதலியவற்றில் அர்ப்பணம் செய்யப்பட்ட நிர்மால்யத்தை அநுபவிக்கலாம்; பாணலிங்கம், சரலிங்கம், உலோகலிங்கம், இரத்தினலிங்கம், சுயம்புலிங்கம், பிரதிமை (சகளமூர்த்தி) என்னும் இவற்றில் சண்டாதிகாரம் கிடையாதென்று ஒரு நூலிலும், மற்றொரு நூலில் சுயம்புலிங்கம், பாணலிங்கம், இரத்தினலிங்கம், இரசலிங்கம், சித்தர் பிரதிட்டை செய்த லிங்கம் ஆகிய இவற்றில் சண்டாதிகாரம் கிடையாது என்றும் கூறப்பட்டிருத்தலால், சரலிங்கம் முதலியவற்றில் அர்ப்பணம் செய்யப்பட்ட நிர்மால்யத்தை அநுபவிக்கலாமென்பது பெறப்படுகின்றது. ஆகையால் சிவநிர்மால்யத்தை அநுபவித்தல் கூடாதென்ற விலக்கு எல்லாச் சிவநிர்மால்யங்களிலும் செல்லாதென்பது சிலர் கொள்கை.

வைதிகம், பௌராணிகம், வாமம், தக்ஷிணம் ஆகிய தந்திரங்களின்படி பூஜை செய்யும் முறையிற்றான் சண்டேசுவரருக்கு அதிகாரம் கிடையாது; காமிகம் முதலிய சித்தாந்த சாத்திரங்களின் முறைப்படி செய்யப்படும் பூசையில் சண்டேசுவரருக்கு அதிகாரமுண்டு, திரலிங்கம், சரலிங்கம், இரத்தின லிங்கம், மண்லிங்கம், மரலிங்கம், கல்லிங்கம், உலோகலிங்கம், சித்திரவிங்கம், பாணலிங்கம் ஆகிய இவற்றில் சித்தாந்த முறைப்படி சண்டருக்கு அதிகாரமுண்டு; மற்ற வாமம் தக்ஷிணம் முதலிய தந்திரங்களின் அதிகாரம் கிடையாது என்று ஒரு நூலிலும், அவ்வியக்தலிங்கம், வியக்தலிங்கம், மண்டலம், தண்டிலலிங்கம், அக்கினிலிங்கம், சரலிங்கம், ஸ்திரலிங்கம், இரத்னலிங்கம், உருத்திராக்கமணி லிங்கம், சித்திரலிங்கம், சந்தனலிங்கம், அன்னலிங்கம், மண்லிங்கம், விபூதிலிங்கம், பழலிங்கம், புஷ்பலிங்கம் என்னும் இவற்றில் சண்டேசுவருக்கு நிச்சயமாகப் பூசை உண்டு என்று காலோத்தரம் முதலிய ஆகமங்களிலும் விசேஷமாகக் கூறப்படுதலால் சரலிங்கத்திற்கு அர்ப்பணம் செய்யப்பெற்ற நைவேத்தியத்தை அனுபவிக்கலாமென்றும், திரலிங்கத்திற்கு அர்ப்பணம் செய்யப்பெற்ற நைவேத்தியத்தை அனுபவித்தல் கூடாதென்றும் நிர்ணயித்தல் கூடாது.

சிவநிர்மால்யத்தை அநுபவித்தல் கூடுமென்று, கூடாதென்றும் கூறப்பட்ட விதிவிலக்குகளுக்கு அன்னத்தை அநுபவித்தல் கூடாதென்றும். தாம்பூலம், பஸ்மம், தைலம், சந்தனம், புஷ்பம் என்னும் இவற்றையும், அபூபம், பழம் முதலிய தின்னுதற்குரிய வற்றையும் அனுபவித்தல் கூடுமென்றும் நிர்ணயம் செய்து கொள்ளல் வேண்டும். தாம்பூலம் முதலியவற்றிற்கு நிர்மால்யத்தன்மை இல்லை யென்பதற்குப் பிரமாணமும் இருக்கின்றது. ஆகையால் அன்னத்தைத்தான் அநுபவித்தல் கூடாது. தாம்பூலம் முதலியவற்றை அநுபவித்தல் கூடும் என்பது சிலர் கொள்கை.

காமிகாகமத்தில், “தனது இஷ்டலிங்கத்திற்கு எதைச் சமர்ப்பித்தோமோ அதை அன்னத்தைப் போலவே சகோதரர், சகோதரிகள், புதல்வர் ஆகிய இவர்களின் பொருட்டு ஐயமின்றிக் கொடுத்தல் வேண்டும்” எனவும், காரணாகமத்தில், “படிகலிங்கம், பாணலிங்கம் என்னும் இவை பிரதிட்டை செய்யப்பட்டனவாய் திரமாயிருப்பினும், பிரதிட்டை செய்யப்படாத சரமாயிருப்பினும் இவற்றின் நைவேத்தியம் நிர்மால்யமாகாது; பாலர், யௌவனப் பெண்கள் ஆகிய இவர்கள் உட்கொண்டால் தைரியத்தைக் கொடுக்கும்” எனவும் கூறப்பட்டிருத்தலால்¢ இந்த இரண்டு ஆகமங்களாலும் சிவநிர்மால்யத்திற்கு விலக்குக் கிடையாதென்பது பெறப்படுதலால், சரலிங்கம் முதலியவற்றிற்கு நிவேதிக்கப்பட்ட அன்னமும் அநுபவிக்கத்தக்கதாகும். ஆயினும், சகோதரர், புதல்வர் முதலியோருக்குக் கொடுக்க வேண்டுமென்னும் கூற்றால் பூசகர் அநுபவித்தல் கூடாதெனவே பெறப்படுகின்றது என்பதும், தாம்பூலம் பஸ்மம் முதலியவற்றை அநுபவிக்கலாம் என்னும் கூற்று மனிதர் முதலியோரால் பிரதிட்டை செய்யப்பெறற திரலிங்க விஷயமாகும் என்பதும் சிலர் கொள்கை.

காமிகாகமத்தில் “நிவேதனம் செய்வதற்காகச் கங்கற்பித்து வைக்கப்பட்டிருக்கும் நைவேத்தியத்தை சிவன் பொருட்டு என்று சொல்லிக்கொண்டு ஊர்த்வமுகத்தில் எனக்கு நிவேதனம் செய்து நிவேதிக்கப்பட்ட உச்சிஷ்டத்தை எவன் தினமும் அனுபவிக்கின்றானோ, அவன் எனக்குச் சமானனாவன்; என்னுடைய உச்சிஷ்டத்திற்கு அத்தகைய சக்தி உண்டு” என்று கூறப்பட்டிருத்தலால் நிவேதனம் செய்பவருக்குச் சிவபெருமானுடைய உச்சிஷ்டத்தை உண்ணலாம் என்று விதிக்கப்பட்டிருப்பதுகொண்டு பூசகரும் சிவநிர்மால்யத்தை அநுபவிக்கலாமென்பது பெறப்படுகின்றது. பூசகர் அநுபவித்தல் ஆகாதென்று கூறியதற்கு, சங்காரருத்திரர் முதலியோரின் பொருட்டு நிவேதனம் செய்யப்பட்டதை உண்ணலாகாதென்பது கருத்து.(இங்கே ஆராய்ச்சி செய்யப்படுவது கங்காரருத்திரருக்கு மேற்பட்ட சதாசிவ நிர்மால்ய விஷயம் என்பது அறிந்து கொள்க.) ஆகையால் பூசகரும் சிவார்ப்பண புத்தியுடன் சிவநிர்மால்யத்தை அனுபவிக்கலாம் என்பது சிலர் கொள்கை.

சதாசிவ மூர்த்தியினிடத்தில் பரமசிவனை ஆவாகனம் செய்தல், ஆவாகனம் செய்து பூசை செய்தல் ஆகிய இவற்றை நிரூபணம் செய்து, இறுதியில் சிவநிர்மால்யத்தை அனுபவித்தல் ஆகாதென்னும் விலக்குத் திவ்யாகமங்களில் மிகுதியும் காணப்படுதலால், அநேகவிதி விலக்குகளுடன் கூடிய எல்லாவித நிர்மால்யங்களும் விலக்கத்தக்கவை யென்பதே பொருந்தும். “சிவநிர்மால்யத்தை அநுபவித்தலால் உண்டாம் தோஷங்களோ பலவுள; அவற்றை அநுபவித்தலால் உண்டாம் பயன்களோ பலவுள; இவ்வாறு தோஷமும், பயனும் ஒன்றாக வரும் இடங்களில் பயனை விலக்குதல் வேண்டும். விலக்குதலைக் கூறும் நூலால் உண்டாம் தோஷமன்றோ மிவலிமையுடையது. விதிவிலக்குகள் ஒன்றாகவரும் இடங்களில் விலக்கையே கொள்ளல் வேண்டும்” என்று பிரமாணவாக்கியம் காணப்படுகின்றமையால் என்க.

காமிகாகமத்தில் “பத்திரம், புஷ்பம், பலம், சலம், அன்னம், பாத்தியம், ஒளஷதம் என்னும் இவற்றைச் சிவபெருமானுக்கு நிவேதனம் செய்யாது புசிக்கலாகாது” என்று கூறப்படுதலால் நிவேதனம் செய்யப்பட்ட அன்னம் முதலியவற்றை அநுபவித்தல் கூடுமெனக் கொள்ளலாமே எனின், அவ்வாறன்று. வேறென்னையெனின், அதிதிகளுக்குப் பூசை செய்யாது அன்னத்தை எவ்வாறு உட்கொள்ளலாகாதோ, அவ்வாறே சிவபெருமானுக்குப் பூசை செய்யாது உண்ணுதல் கூடாதென்னும் கருத்துக்கொண்டு சிவபெருமானுக்கு நிவேதனம் செய்தபின்னர் எஞ்சியிருக்கும் அன்னத்தை உண்ணுதல் வேண்டும் என்பதே அதன் கருத்தாகும். சித்தாந்த சேகரத்திலும், “அன்னம், ஒளஷதம், சலம், பத்திரம், புஷ்பம், பலம் முதலியவற்றைச் சிவபெருமானுக்கு நிவேதித்து அதன் பின்னர் எஞ்சியிருப்பதை உட்கொள்ளல் வேண்டும்” என்று கூறப்பட்டிருக்கின்றது. ஆகையால் சிவநிர்மால்யத்தை அநுபவிக்கவே கூடாதென்பது சிலா¢ கொள்கை.

ஆகவே சிவநிர்மால்யத்தைப் பற்றிய விதிவாக்கியங்களையும், விலக்குவாக்கியங்களையும் ஆராயுமிடத்து ஒன்பது பக்கங்கள் உண்டாகின்றன. அவற்றுள்,

முதலாவது பக்கம்:- சிவசமஸ்கார ரூபமான தீக்ஷைபெற்றவரே சிவநிர்மாலியத்தை அனுபவித்தல் கூடும்; ஏனையோர் அநுபவித்தல் கூடாதென்பது.

இரண்டாவது பக்கம்:- சிவசமஸ்காரத்தினுள்ளும் வைதிகமுறையாகத் தீக்ஷைபெற்ற அதிவருணாச்சிரமிகளே அனுபவித்தல் கூடும்; காமிகம் முதலிய சித்தாந்த சாத்திரப்படி தீக்ஷைபெற்றவர்க்கு அநுபவித்தல் கூடாதென்று விலக்கும், அநுபவித்தால் பிராயச்சித்தமும் காணப்படுதலால் சித்தாந்த முறைப்படி தீக்ஷைபெற்றவர் அநுபவித்தல் கூடாதென்பது.

மூன்றாவது பக்கம்:- கூறப்பட்ட விலக்கும், பிராயச்சித்தமும், நைவேத்தியமல்லாத ஐந்துவித நி£¢மாலிய விஷயம். நிவேதனம் செய்யப்பெற்றதைச் சிவதீக்ஷையுடையார் கொள்ளலாம் என்பது.

நான்காவது பக்கம்:- சிவலிங்க நிர்மால்யத்தை அநுபவித்தல் கூடாதென்பதும், சகள மூர்த்திகளின் நிர்மால்யத்தை அநுபவிக்கலாம் என்பதும்.

ஐந்தாவது பக்கம்:- எல்லாச் சிவலிங்கங்களுக்கும் நிவேதனமான நிர்மால்யத்தை விலக்குதல் கூடாது; மனிதர் முதலாயினோரால் பிரதிட்டை செய்யப்பெற்ற திரலிங்கத்திற்கு நிவேத்திக்கப்பட்ட நிர்மாலியத்தைத்தான் அநுபவித்தல் கூடாது; சரலிங்கத்திற்குச் சண்டாதிகாரம் கிடையாமையால் சரலிங்க முதலியவற்றிற்கு நிவேதிக்கப்பட்ட நிர்மால்யத்தை அநுபவிக்கலாம் என்பது.

ஆறாவது பக்கம்:- நிர்மால்யத்தை அநுபவித்தல் கூடாதென்றும், கூடும் என்றும் கூறப்பட்ட காமிகாகம வசனங்களுக்கு முறையே திரலிங்க சரலிங்கம் விஷயமென்று நிர்ணயித்தல் கூடாது; காமிகம் முதலிய சித்தாந்த சாத்திரப்படி சரலிங்க பூசையிலும் சண்டாதிகாரம் இருக்கின்றமையால். ஆதலின் அந்த விலக்கு அன்னத்தையே குறிக்கும். விதியானது பலம், தாம்பூலம், அபூபம் முதலிய நிர்மால்யங்களைக் குறிக்கும். எதனாலெனின், அன்னத்தினும் வேறான அபூபம் முதலியவற்றை அநுபவித்தல் கூடும் என்ற விசேஷவசனம் இருப்பதால் என்பது.

ஏழாவது பக்கம்:- சரலிங்கம் முதலியவற்றிற்கு நிவேதனம் செய்யப்பட்ட நிர்மால்யத்தை அநுபவித்தல் கூடும்; ஆனால் அதனைச் சகோதரர் முதலியவருக்கே கொடுத்தல் வேண்டும்; பூசகர் அநுபவித்தல் கூடாது என்பது.

எட்டாவது பக்கம்:- சிவார்ப்பண புத்தியுடன் பூசகரும் சிவநிர்மால்யத்தை அநுபவித்தல் கூடும் என்பது.

ஒன்பதாவது பக்கம்:- பலனைக்கூறும் வாக்கியம், விலக்கைக் கூறும் வாக்கியம் ஆகிய இரண்டனுள், விலக்கைக் கூறும் வாக்கியத்திற்கு வலிமையுண்டு. ஆகையால் எல்லாச் சிவநிர்மாலியங்களையும் அநுபவித்தல் கூடாது என்பது.

இவற்றுள், ஒன்பதாவது பக்கம் சிறிதும் பொருந்தாது. எதனாலெனின், சிவநிர்மால்யத்தை அநுபவித்தலால் பெரும் பலன்கள் உண்டு என்று கூடும் அநேக திவ்யாகமங்களுக்கும், புராணங்களுக்கும் அப்பிராமாணியம் நேரிடுமாகையால் என்க. இருடிகளின் வாக்கியங்களிலேயே ஒரு அக்கரங் கூட அப்பிராமாணியத்தைச் சகிக்காமலிருக்கும் பொழுது, அனைவருக்கும் முதல்வனான சிவபெருமானுடைய வாக்கியங்கள் எவ்வாறு அப்பிராமாணியத்தைச் சகிக்கும்.

வாயு விரைவில் செல்லக்கூடிய தேவதை என்னும் வாக்கியமானது, எவ்வாறு தன்னுடைய பொருளில் பயன்படாமல், விதிவாக்கியத்துடன் கலந்து, வாயுவை தேவதையாகக் கொண்ட யாகம் விரைவாகப் பலத்தைத் தரும் என்னும் பொருளைத் தருகின்றதோ, அவ்வாறே இவ்விடத்தும் சிவ நிர்மால்யத்தை அநுபவித்தல் கூடும் என்னும் வாக்கியங்கள், அர்த்தவாத வாக்கியங்களாகும். ஆகையால், விதிவாக்கியத்துடன் கலந்து சிவநிர்மால்யத்தை அநுபவித்தல் வேண்டும் என்னும் பொருளைத் தருகின்றனவென்று பிராமாணியமாகக் கொளளலாமோ எனின், அவ்வாறு அர்த்தவாத வாக்கியமாகக் கொண்டு பிராமாணியமாகக் கொள்ளுதலுங்கூட கொடிய தீங்குக்கு ஏதுவாகுமென எல்லாத் திவ்யாகமங்களும் முறையிடுகின்றன.

அன்றியும், நிர்மால்யத்தை அநுபவித்தலால் மிகுந்த தோஷங்களும், மிகுந்த பலன்களும் கூறப்பட்டிருக்கின்றமையால், பலனைக்கூறும் வாக்கியங்களை விலக்குதல் வேண்டும்; தோஷமே வலிமையுடையது என்னும் கொள்கையினை உடைய ஒன்பதாவது பக்கத்தினர்க்கு நியாயமான விறுகூறுதும்.

விதி, விலக்கு இரண்டும் தனித்தனி தன்னைக்கெடுக்காத வெவ்வேறிடங்களில் பிராமாண்யத்துடன் இருந்துகொண்டு, ஒரே இடத்தில ஒரே சமயத்தில் அவ்விரண்டும் சேர்ந்து வரும் பொழுது விலக்கிற்கு வலிமையுண்டு. அஃதாவது துவாதசியில் நெல்லிக்கனியை அனுபவித்தலால் மிகுந்த நலம் உண்டாம் என ஒரு வாக்கியம் இருக்கின்றது. ஞாயிற்றுக் கிழமையில் நெல்லிக்கனியை அநுபவித்தல் கூடாதென்று ஒரு வாக்கியமிருக்கின்றது. ஆகவே, துவாதசியில் நெல்லிக்கனிக்குப் பெருமை கூறிய வாக்கியமானது, ஞாயிற்றுக் கிழமையல்லாத துவாதசிகளில் வலிமை பெறும். ஞாயிற்றுக் கிழமையில் நெல்லிக்கனியை விலக்கிய வாக்கியமானது, துவாதசியுடன் கூடாத ஞாயிற்றுக் கிழமைகளில் வலிமை பெறும். துவாதசியும், ஞாயிற்றுக்கிழமையும் கூடின தினத்தில் நெல்லிக்கனியை விலக்குதல் வேண்டும் என்று விலக்கு வசனத்திற்கு வலிமை கொள்ளுதல் வேண்டும். இவ்வாறின்றி எல்லாவிடங்களிலும் விதிவாக்கியங்களுக்கு அப்பிராமாணியத்தையும், விலக்கு வாக்கியங்களுக்குப் பிராமாணியத்தையும் கொள்ளுதல் பிராமாணிகர்கள் ஏற்றுக்கொள்ளத் தக்கதன்று. ஆகையால் விதிவிலக்கு வாக்கியங்களுக்கு நிர்ணயத்தைக் காட்டுவது தான் முறையாகும்.

மேலே கூறியவாறு சைவர்கள் அனைவரும் மகிழும்படியான நிர்மால்ய விஷய நிர்ணயத்தை ஒரு ஆகமங்களுடனும் கூட முரணாதவாறு காட்டுதும்.

சைவர்களுடைய போசனம் மூன்று வகைப்படும். அவற்றுள் சிவ பூஜையின் முடிவில் வெளிக்குண்டத்தில் சிவாக்கினிகாரியம் செய்த பின்னர், அகத்துச் செய்யும் சிவாக்கினி காரியம் ஆன்மபோசனம் என்னும் பாவனையுடன் செய்யப்படுவது முதலாவது போசனம்.

நிவேதனம் செய்யும்பொழுது நைவேத்தியங்களின் உருவம் மாத்திரம் அர்ப்பணம் செய்யப்படுகின்றது. இது நிவேதனத்தின் ஆரம்பம். ஆன்ம போசனமானது நைவேத்தியத்தின் சுவையைச் சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்வது ரூபமாயிருக்கின்றது. ஆகையால், ஆன்மபோஜனத்தினாற்றான் நைவேத்தியத்தின் அர்ப்பணம் பூர்த்தியாகின்றது என்னும் பாவனையுடன் செய்யப்படுவது இரண்டாவது போசனம்.

முதலாவது நிவேதனம் செய்யும்பொழுதே யாகத்திற் கொடுக்கப்பட்ட பரஸ்வத் முதலிய ஹவிசு சூக்குமரூபமாகத் தேவர்களால் உண்ணப்படுமாறு போலச் சிவபெருமானும் சுவையுடன் கூடவே சூக்கும ரூபமாக நைவேத்தியங்களை ஏற்றுக்கொண்டார்; சிவபெருமானுடைய உச்சிஷ்ட போசனத்தை உண்ணுதல் சிவனுக்கு அடிமையான தனது கடமை என்னும் பாவனையுடன் செய்யப்படுவது மூன்றாவது போசனம்.

இவற்றுள், முதலாவது போசனமானது சுப்ரபேதாகமத்தில் வன்னிகாரிய பலடத்தில் விரிவாகக் கூறப்பட்டிருக்கின்றது. அது வருமாறு:- அக்கினிகாரியம் செய் பின்னர் பிராணாக்கினியில் ஓமம் செய்தல் வேண்டும்.(இதுவே போசனஞ் செய்தல்) அக்கினிசாலைக்குப் பக்கத்திலாவது, அக்கினி சாலையிலாவது போசனம் செய்யக்கூடிய இடத்தைச் செய்து கொள்ளலாம். அல்லது கிருஹத்திலாவது செய்துகொள்ளல் வேண்டும். அந்த இடம் கோமயத்தால் மெழுகிச் சுத்தம் செய்து கோலமிட்டு, மேல் கட்டி தீபம் முதலியவற்றால் அலங்கரிக்கப்படல் வேண்டும். சொர்ணம் வெள்ளி பித்தளை வெண்கலம் முதலியவற்றால் செய்யப்பட்ட பாத்திரத்தையாவது வாழை இலையையாவது போசன பாத்திரமாகக் கொண்டு அதற்குத்தக்காவறு சுத்தியையும் செய்து பாத்திரத்தில் யெல்லாப் பதார்த்தங்களையும் வைத்து தன்னுடைய ஆன்மாவில் இருக்கும் சிவனை அருசித்தல் வேண்டும். எவ்வாறெனில், ஆன்மா யஜமானனாகும். புத்தி அவன் பத்தினியாகும். கேச உரோமங்கள் தருப்பைகளாகும். நா முதலியன யாகபாத்திரமாகும். இருதய கமலம் வேதிகையாகும். இவ்வேதிகையிலிருக்கும் அக்கினியில் சிவபெருமானிருக்கின்றார். அவரைப் பூசித்தல் வேண்டும் என்க. உரோமமாகிய தருப்பைகளைப் பரப்பி சிவமந்திரத்துடன் பிரணவத்தை உச்சரித்து, நீரால் சுற்றி, பின்னர் சிவமந்திரத்தால் அப்யுக்ஷணம் செய்து, ஜலத்தில் சிவமந்திரத்தை செபித்து, பஞ்சப்பிரம ஷடங்கங்களையும் முறையே செபித்து, சிவபெருமானைத் தியானம் செய்து, சிவாய என்று சொல்லிக் கொண்டு ஹிருதய மந்திரத்தால் ஜலத்தைப் பருகி, பஞ்சப்பிரம்மமந்திரங்களை உச்சரித்துக் கொண்டு நடுவிரல், அணிவிரல், கட்டைவிரல்களால் அன்னத்தைச் சிறிது சிறிதாக எடுத்துச் சிவன்பொருட்டு ஓமஞ்செய்ய வேண்டும். அமிருதமந்திரம் முதலியவற்றால் ஜலத்தைப்பருகி, ஐந்து பிராணமந்திரங்களால் ஐந்து ஆகுதிகளையும் ஓமஞ்செய்தல் வேண்டும். பின்னர் பாத்திரத்தைத் தொட்டுக்கொண்டு உண்ணுதல் வேண்டும். பின்னர் சூரியனுக்கு எதிர்முகமாக இருந்துகொண்டு விதிப்படி ஆசமனம் செய்து சிவமந்திரத்தால் வயிற்றை இடது கையால் தொடுதல் வேண்டும். அதன் பின்னர் வலதுகைக் கட்டைவிரலால் வலதுகால் கட்டைவிரலில் சிவமந்திரத்தைத் தியானித்து ஹிருதய மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு ஜலத்தை விடுதல் வேண்டும். இது தன்னுடைய பாதமூலத்தில் சமர்ப்பிக்கப்படும் சுளுகோதகம் எனப்படும். இவ்வாறு பிராணாக்கினி காரியமான நித்தியாக்கினி காரியமானது சொல்லப்பட்டது; இனிக்குண்டலக்ஷணத்தைக் சொல்லுகறேன் கேள் என்பதாம்.

இந்தப் போஜனமானது நிவேதனம் செய்யப்படாத அன்னத்தினாலேயே செய்யப்படல் வேண்டும். இதற்காகவே பாகம் செய்யப்பட்டதில் ஒருபாகம் நிவேதனத்திற்காகவும், மற்றொரு பாகம் ஹசிசுக்காகவும், பிறிதொருபாகம் பலிசமர்ப்பித்ற் பொருட்டும் பகுத்து, எஞ்சிய பாகத்தை ஆசிரியன் உண்ணுதல் வேண்டும் என்று ஆகமங்களில் பரார்த்தபூஜா விஷயத்தில் கூறப்பட்டிருக்கின்றது. இதனால் நிவேதிக்கப்படாத அன்னமும் உண்டென்பது தெரிகின்றமை காண்க.

அன்றியும் பாகம் செய்யப்பட்டவற்றில் பாதியையெடுத்து, எடுக்கப்பட்டதனுள் பாதியைச் சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்து, அதனுள் எஞ்சியிருக்கும் பாதியை அக்கினியில் ஓமம் செய்து; ஓமம் செய்யும் முறையைக் கூறுகின்றேன் என்று ஆத்மார்த்த பூசையில் சுல்லி ஓமப் பிரகரணத்துள்ள ஆகம வசனங்கள் கூறுகின்றன. இதனாலும் நிவேதனம் செய்யப்படாத அன்னம் உண்டென்பது விளங்குகின்றமை காண்க.

இனி இரண்டாவது போஜனமோவெனில், வாதுளாகமத்தில் கூறப்பட்டிருக்கின்றது. அது வருமாறு:- நைவேத்தியத்தின் உருவத்தைச் சமர்ப்பித்த பின்னர் சிவபெருமானிடத்தில் சுவையையும் சமா¢பித்தல் வேண்டும். இவ்விரண்டினையும் சமாப்பிக்காத நைவேத்தியம் பலனற்றது. அந்தந்தப் பிரசாதத்தின் அநுபவம் முடிவாக நைவேத்தியத்தின் அர்ப்பணம் பூர்த்தியாகின்றது. பிரசாதமாய் அநுபவிக்கப்படாத வைநேத்தியம், பயனற்றதென்பது முதலியனவாம். இந்த இரண்டாவது போஜனமானது நிவேதனத்திற்கு ஆரம்பித்து முடிவு பெறாத நிவேதனக் கிரியையினையுடைய அன்னத்தினாலேயே செய்யப்படல் வேண்டும். நிவேதனோபசார சமயத்தில் சிவபெருமானடைய சந்நிதியில் வைக்கப்பட்ட நைவேத்தியமானது, அப்பொழுது உருவம் மாத்திரம் சமர்ப்பிக்கப்படுதலால், ஆரம்பிக்கப்பட்ட நிவேதனக்கிரியையினை உடையதாய்ச் சுவையைச் சமா¢ப்பித்தல் முடிவாக அந்தக்கிரியையானது தொடர்ந்து பூர்த்தியாகின்றது. ஆ¬காயல் இதுவே ஆரம்பிக்கப்பட்டு முடிவுபெறாத நிவேதனக் கிரியையினை உடைய அன்னமாகும். இந்த அன்னத்தை, தேவர்கள், பிதுருககளை உத்தேசித்துக் கொடுக்கப்படும் அன்னத்தை அவர்களுக்குச் சமர்ப்பிக்கின்றேன். என்னும் புத்தியுடன் சமர்ப்பிக்குமாறு போல், பூசகரும் சிவனுக்குச் சமர்ப்பிக்கின்றேன் என்னும் புத்தியுடன் உண்ணுதல் வேண்டும்.

மூன்றாவது போஜனமானது காமிகம் முதலிய ஆகமங்களில் கூறப்பட்டிருக்கின்றது. அது வருமாறு:- என்னுடைய அடையாளங்களைத் தரிக்கிறவராயும், என்னையே தியானிப்பவராயும், என்னையே சரணமாக அடைந்தவராயுமுள்ளவருக்கே என்னுடைய நிர்மால்யம் உரிமையாகும்; ஏனையோருக்கு உரிமையாகாது. தின்னக் கூடியவையும், உரிஞ்சக்கூடியவையும், பருகக் கூடியவையும், கொடுக்கக்கூடிய மற்றவையும் ஆகிய இவற்றை எனக்கு நிவேதித்து இந்த எல்லாச் சிவநிர்மால்யங்களையும் தான் அடிமையென்னும் பாவனையுடன் புசித்தல் வேண்டும். எனக்கு அடிமை என்னும் புத்தியை உடைய பாசுபத நைவர்தான் இவற்றை அநுபவிக்கலாம். இவர்களுக்குத்தான் இதுமுத்தியைக் கொடுக்கும் என்பதாம். இதனால் இந்தப் போஜனமானது நிவேதனம் செய்யப்பெற்ற அன்னத்தினாலேயே செய்தல் வேண்டும் என்பது பெறப்படுகின்றமை காண்க.

முத்தியை விரும்புவோரால் ஈசுவரனுக்கு முன்னர் நிவேதனோபசார சமயத்தில் யாதொரு பதார்த்தம் வைக்கப்பட்டதோ அது அப்பொழுதே சூக்கும ரூபமாகச் சுவையுடன் கூடவே சிவனால் அநுபவிக்கப்பட்ட தென்பது கொண்டு, இந்த அன்னம் நிவேதனம் செய்யப்பட்ட அன்னம் என்று கூறப்படுகிறது. சிவபெருமானுடைய உச்சிட்டமான இந்த அன்னத்தைச் சிவபெருமானுக்கு அடிமையென்னும் புத்தியுடன் அநுபவித்தல் வேண்டும். எதுபோலுமெனின், பிராமணருக்கு அடிமைத் தொழிலைச் செய்யும் தாழ்ந்த ஜாதியார் அந்தப் பிராமணருடைய உச்சிட்டத்தைப் புசித்தல் போலுமென்க.

ஆகவே, சிவநிர்மால்ய விஷயத்தில் பொதுவாக எந்தெந்த விலக்கு வாக்கியங்கள் காணப்படுகின்றனவோ, அவையனைத்தும் சிவபெருமானுக்கு அடிமை என்னும் பாவனையில்லாத விலங்கிற்குச் சமானரான மனிதர்களைக் குறித்தனவென்பதும், சிவபெருமானுக்கு அடிமை என்னும் பாவனையை உடைய தீக்ஷைபெற்றவரைக் குறித்து எந்தெந்த விலக்கு வசனங்கள் காணப்படுகின்றனவோ, அவை அனைத்தும் நிவேதனம் செய்யப்படாத ஐந்துவித நிர்மால்யங்களைக் குறித்தனவென்பதும் இவ்வாறு இரண்டுவித நிர்ணயங்களும் பெரியோர்களால் காட்டப்பட்டிருக்கின்றன. இவற்றுள் இரண்டாவது நிர்ணயமானது ஆறுவித நிர்மால்யங்களுள் நிவேதனஞ்செய்யப்பட்ட நிர்மால்யம் ஒன்றையே புசித்தல் வேண்டும் என்ற ஆகம வாக்கியங்களால் பிரசித்தமாய்க் காணப்படுகின்றது. முதலாவது நிர்ணயமானது சிவபுராணத்தில் மிகவிரிவாகக் காணப்படுகின்றது. எவ்வாறெனில்:- என்னுடைய நைவேத்தியமும், பாதஜலமும், புஷ்பமும், பத்திரமுமாகிய இவை ஏனையோர் அநுபவித்தற்கு உரிமையாகாவென்று ஈசுவரனால் சொல்லப்பட்டதாகச் சில மகரிஷிகள் கூறுகின்றனர்; அதன் பொருள் என்னை என்று ஜைமினி கேட்கும் பொழுது வியாசர் கூறுகின்றார்.

ஓ ஜைமினி மகரிஷியே! ஈசுவரனுடைய வாக்குக்கு அடங்காதவர்களாயும், வீரபத்திரரால் சபிக்கப்பட்டவர்களாயும், சிவபிரானிடத்துப் பக்தி இல்லாதவர்களாயும், சிவபெருமானினும் வேறான தேவர்களிடத்தில் பக்தி உள்ளவர்களாயும், தீக்ஷைபெறாதவர்களாயும், அசுத்தமான செயல்கள் உள்ளவர்களாயும், சம்புவினும் வேறான தேவர்களிடத்துச் சமபுத்தியுள்ளவர்களாயும் இருப்பவர்கள் சிவபெருமானுடைய நைவேத்தியம் முதலிய *நான்குவித பிரசாதங்களையும் அனுபவித்தல் கூடாதென்பதாம். தீக்ஷை பெறாதவராயும், பத்தியில்லாதவராயும், உள்ளவர்க்குச் சிவநிர்மால்யம் உரிமையாகா தென்பதற்கு முன்னர்க் காட்டப்பட்ட காமிகம் முதலிய ஆகமவசனங்கள் பிரசித்தமான பிரமாணமாகும். இது நிற்க.

( * நான்கு விதம் – நைவேத்தியம், நிவேதிதம், சண்டதிரவியம், நிர்மால்யம்)

சிவநிர்மால

Sivarchana Chandrikai – Nirmalya Bojana Arayichi in Tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to top