Shivarchana

Sivarchana Chandrika – Thaana Suththi in Tamil

சிவார்ச்சனா சந்திரிகை – தானசுத்தி:

ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை
தானசுத்தி

அஃதாவது இருதயத்தில் கைகளை உயரே மேல்நோக்கியவையாகச் செய்து, ஹ: அஸ்திராய ஹும்பட்என்னும் மந்திரத்தால் மூன்று தாளஞ்செய்து, நொடியில் பத்துத் திக்குக்களிலுமுள்ள விக்கினங்களை போக்கி, அஸ்திரமந்திரத்தால் சொலிக்கக்கூடிய அக்கினி வருணமான கோட்டையைச் செய்து, பின்னர் வெளியில் ஹைம் கவசாய நம: என்னும் மந்திரத்தால் வலதகை சுட்டுவிரலைச் சுற்றிக்கொண்டு மூன்று அகழிகளைச் செய்து, ஹாம் சக்தயே வெளஷட் என்னும் மந்திரத்தால் சத்திசம்பந்தமான தேஜசை மேலும் கீழும் பாவனை செய்து மஹா முத்திரையைக் கொடுக்க வேண்டும். இவ்வாறு விக்கினங்களை நீக்குவதின் பொருட்டு தானசுத்தி செய்த பின்னர் திரவியசுத்தி செய்ய வேண்டும்.

Add Comment

Click here to post a comment