Pazham Neeyappa Song Lyrics in Tamil:
॥ பழம் நீயப்பா ॥
{ பழம் நீயப்பா
ஞானப் பழம் நீயப்பா
தமிழ் ஞானப் பழம்
நீயப்பா } (2)
சபைதன்னில்
திருச்சபைதன்னில்
உருவாகி புலவோர்க்குப்
பொருள் கூறும் பழம் நீயப்பா
ஞானப் பழம் நீயப்பா
தமிழ் ஞானப் பழம்
நீயப்பா
கண்ணொன்றில்
கனலாய் வந்தாய் நெற்றிக்
கண்ணொன்றில் கனலாய்
வந்தாய் ஆறு கமலத்தில்
உருவாய் நின்றாய் ஆறு
கமலத்தில் உருவாய் நின்றாய்
கார்த்திகைப்
பெண்பால் உண்டாய்
திருக் கார்த்திகைப்
பெண்பாலுண்டாய்
உலகன்னை அணைப்பாலே
திருமேனி ஒரு சேர்த்த
தமிழ் ஞானப் பழம் நீயப்பா
ஊருண்டு பேருண்டு
உறவுண்டு சுகமுண்டு உற்றார்
பெற்றாரும் உண்டு ஊருண்டு
பேருண்டு உறவுண்டு சுகமுண்டு
உற்றார் பெற்றாரும் உண்டு
நீருண்ட மேகங்கள் நின்றாடும்
கயிலையில் நீ வாழ இடமும்
உண்டு நீருண்ட மேகங்கள்
நின்றாடும் கயிலையில் நீ
வாழ இடமும் உண்டு
தாயுண்டு மனம்
உண்டு தாயுண்டு மனம்
உண்டு அன்புள்ள தந்தைக்கு
தாளாத பாசம் உண்டு உன்
தத்துவம் தவறென்று சொல்லவும்
ஔவையின் தமிழுக்கு உரிமை
உண்டு
ஆறுவது சினம்
கூறுவது தமிழ் அறியாத
சிறுவனா நீ ஆறுவது சினம்
கூறுவது தமிழ் அறியாத
சிறுவனா நீ மாறுவது மனம்
சேருவது இனம் தெரியாத
முருகனா நீ மாறுவது மனம்
சேருவது இனம் தெரியாத
முருகனா நீ
ஏறு மயிலேறு
ஈசனிடம் நாடு ஏறு
மயிலேறு ஈசனிடம்
நாடு இன்முகம்
காட்டவா நீ
ஏற்றுக்கொள்வாய்
கூட்டிச் செல்வேன் என்னுடன்
ஓடிவா நீ என்னுடன் ஓடிவா நீ
Add Comment