Templesinindiainfo

Best Spiritual Website

அப்பய்ய தீட்சிதர்

Sivarchana Chandrikai – Dheebam Samarpithhal in Tamil

சிவார்ச்சனா சந்திரிகை – தீபஞ் சமர்ப்பித்தல்: ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை தீபஞ் சமர்ப்பித்தல் பின்னர் மூலமந்திரத்தால் விசேஷார்க்கியங் கொடுத்த ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு, அல்லது ஒன்பது வட்டத்துடன் கூடிய புஷ்பதீபத்தைச் சமர்ப்பித்து, மூன்று அல்லது ஐந்து ஒட்டைப்பிரமாணமுள்ள நாகதீபம், சக்கரதீபம், பத்மதீபம், புருஷமிருகதீபம், கஜாரூட தேவேந்திர தீபம் என்னும் தீபபாத்திரங்களில் ஏற்றப்பட்ட தீபங்களையும் சத்திக்குத் தக்கவாறு சமர்ப்பித்துப் பின்னர் ஆரத்தி சமர்ப்பிக்க வேண்டும்.

Sivarchana Chandrikai – Mugavaasam in Tamil

சிவார்ச்சனா சந்திரிகை – முகவாசம்: ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை முகவாசம் பின்னர் முகவாசமென்னும் தாம்பூலமாத்திரை, தாம்பூல மென்னுமிவற்றை நிவேதனம் செய்ய வேண்டும். உண்டபின்வாய் வாசனையடையும் பொருட்டு வாயில் எதனைஉபயோகித்துக்கொள்கின்றோமோ அதுதான் முகவாசமாகும். அது ஏலம், லவங்கம், தத்கோலம், சாதிக்காய், பச்சைக்கருப்பூரமென்னும் இவற்றைப் பொடியாக்கிப் பனி நீரால் உருண்டையாகச் செய்து வைத்துக் கொள்ளப்படுவதாகும். ஏலம், லவங்கம், தக்கோலம், சாதிக்காய், பச்சைக்கருப்பூரமென்னும் இவற்றின் பொடிகளுடன், சிறிது தேனும் சருக்கரையும் கலந்து முகவாசம் செய்வது உத்தமம். இது […]

Sivarchana Chandrikai – Neivethiyathai Yetrukkollum Murai in Tamil

சிவார்ச்சனா சந்திரிகை – நைவேத்தியத்தை யேற்றுக்கொள்ளு முறை: ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை நைவேத்தியத்தை யேற்றுக்கொள்ளு முறை சதாசிவர் எந்த முகத்தினால் நைவேத்தியத்தை ஏற்றுக் கொள்ளுகறாரெனின், மேல் நோக்யி ஊர்த்துவ முகத்தால் ஏற்றுக்கொள்ளுகிறாரென்க. சர்வஞானோத்திரத்தில் “தின்னக் கூடிய பொருள்களையும் உண்ணக்கூடிய அன்னத்தையும், பருகக்கூடியதையும், இன்னும் அநேகவிதமான நாவாலுண்ணக்கூடியது உரிஞ்சக்கூடியதுகளையும், சதாசிவருடைய ஊர்த்துவ முகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்” எனக் கூறியிருக்கின்றமை காண்க. துவிசதியென்னும் நூலில் “ஓ சப்ரமண்யரே! பக்ஷியம் போஜ்யம் பேயம் லேகியம் சோஷியம் என்னுமிவ்வைந்தினையும் […]

Sivarchana Chandrikai – Samarpikkum Murai in Tamil

சிவார்ச்சனா சந்திரிகை – நைவேத்தியஞ் சமர்ப்பிக்கும் முறை: ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை நைவேத்தியஞ் சமர்ப்பிக்கும் முறை ஈசுவரனுக்குப் பாத்தியம் ஆசமனீயம் அருக்கியமென்னு மிவற்றைக்கொடுத்து, அவருக்கு முன்னர்க் கோமயத்தால் சதுரச் சதுரமாக ஒரு மண்டலமிட்டு, மாப்பொடிகளால் கோலமிட்டு, சுத்தான்னம் பாயசான்ன முதலியவற்றால் நிரம்பப் பெற்ற பாத்திரங்களும், வாழைப்பழம் தேங்காய் மாம்பழம் பலாப்பழம் திரா¬க்ஷப்பழம் பேரிச்சைப்பழம் முதலிய பழங்களாலும், லட்டு, கஸ்தூரி சேர்ந்த பிட்டு மோதகம் அப்பம் என்னுமிவற்றாலும், வாழை பலா என்னும் இவற்றாலாய கறிகளாலும், […]

Sivarchana Chandrikai – Neivethiyam Seiyum Murai in Tamil

சிவார்ச்சனா சந்திரிகை – நைவேத்தியஞ் செய்யும் முறை: ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை நைவேத்தியஞ் செய்யும் முறை நைவேத்தியத்திற்கு விரீகியென்னும் செந்நெல்லரிசி, சாலியென்னும் சம்பாநெல்லரிசி, பிரியங்கு என்னும் தானியத்தினரிசி, நீவாரமென்னும் வனநெல்லினரிசி, கோதுமையினரிசி, மூங்கிலரிசி, வால்நெல்லரிசி யென்னுமிவை மேலானவையாம். அவற்றுள், செந்நெல் அரிசி அதமம். சம்பாநெல்லரிசி மத்திமம். ஏனைய அரிசிகள் உத்தமம். அவற்றுள்ளும் பிரியங்குவின் அரிசியும், நீவாரமென்னும் வனநெல்லரிசியும், கோதுமையரிசியும், மூங்கிலரிசியும் முறையே நூறு, ஆயிரம், இலட்சம், அநந்தமென்னும் பலன்களை யுடையனவாய் ஒன்றுக்கொன்று மேலானவையாம். […]

Sivarchana Chandrikai – Ainthaavathu Aavarana Pujai in Tamil

சிவார்ச்சனா சந்திரிகை – ஐந்தாவது ஆவரண பூசை: ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை ஐந்தாவது ஆவரண பூசை பின்னர் ஐந்தாவது ஆவரணத்தில் உலகபாலகர்களுடைய ஆயுதங்களை அருச்சிக்கும் முறை வருமாறு:- பிரசன்னாத்ம சக்தி சகிதாய வச்சிராய நம: பலவித வருணங்களையுடையதும், திடமாயும் கடினமாயுமுள்ள வடிவத்தையுடையதும், வச்சிரத்தைச் சிரசில் உடையதும், பிரகாசத்தையுடையதும், பிரசன்னை என்னும் தனது சத்தியுடன் கூடினதுமான வச்சித்தைப் பூசிக்கின்றேன். சக்தயே நம: செம்மை வருணமுடையதும், வரம் அபயமென்னுமிவற்றைக் கையிலுடையதும், சத்தியைச் சிரசில் தரித்திருப்பதும், பெண்வடிவத்தையுடையதுமான […]

Sivarchana Chandrikai – Naangaavathu Aavarana Pujai in Tamil

சிவார்ச்சனா சந்திரிகை – நான்காவது ஆவரண பூசை ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை நான்காவது ஆவரண பூசை இந்திராய சசீசகிதாய நம: சுவர்ண வர்ணத்தையுடையவரும், அயிராவதத்தில் ஏறியிருப்பவரும், வச்சிரம் அங்குசம் வரம் அபயமென்னுமிவற்றைக் கையிலுடையவரும், இந்திராணியுடன் கூடியவருமான இந்திரனைப் பூசிக்கின்றேன். அக்னயே சுவாகாசகிதாய நம: செம்மை வர்ணத்தையுடையவரும், கமண்டலம் அக்கமாலை சத்தி வரமென்னுமிவற்றைத் தரிப்பவரும், ஆட்டை வாகனமாகவுடையவரும், சுவாகாதேவியினுடன் கூடியவருமாகிய அக்கினி தேவரைப் பூசிக்கின்றேன். யமாய காலகண்டீ சகிதாய நம: கருமை வர்ணத்தையுடையவரும், தண்டம் […]

Sivarchana Chandrikai – Mundraavathu Aavarana Pujai in Tamil

சிவார்ச்சனா சந்திரிகை – மூன்றாவது ஆவரண பூசை: ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை மூன்றாவது ஆவரண பூசை குண்ட சகிதாய நந்திகேசுவராய நம: செம்மை வருணத்தையுடையவராயும், திரிசூலம், அக்கமாலை, வரம், அபயம் என்னுமிவற்றைக் கையிலுடையவராயும், குண்டலினியுடன் கூடினவராயும் இருக்கும் நந்தியைப் பூசிக்கின்றேன். பத்மினீ சகிதாய மகாகாளாய நம: பொன்மையும் கருமையும் கலந்த நிறமுடையவராயும், செம்மையான மீசையையும் தலைமயிரையுமுடையவராயும், சூலங் கபாலம் கட்கம் கேடம் என்னுமிவற்றைத் தரிப்பவராயும், பத்தினியுடன் கூடினவராயுமிருக்கும் மகாகாளரைப் பூசிக்கின்றேன். ஹ்ராதினீசகிதாய ப்ருங்கிணே […]

Sivarchana Chandrika – Irandaavathu Aavarana Pujai in Tamil

ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை இரண்டாவது ஆவரண பூசை அநந்தாய பூமிசகிதாய நம:, சூக்ஷ¨மாய சுவாக சகிதாய நம:, சிவோத்தமாய ஸ்வதாசகிதாய நம:, ஏகநேத்திராய க்ஷ£ந்தி சகிதாய நம:, ஏகருத்திராய புஷ்டிசகிதாய நம:, திரிமூர்த்தயே ஸ்ரீசகிதாய நம:, ஸ்ரீகண்டாய கீர்த்தி சகிதாய நம:, சிகண்டினேமேதா சகிதாய நம: என்று சொல்லிக்கொண்டும், சுவர்ணம், அக்கினி, மேகம், வண்டு, பாணம், பனி, பவளம், படிகம் என்னுமிவற்றின் வர்ணங்களையுடையவர்களாயும், வரதம், அபயம், ஞாமுத்திரை, உருத்திராக்கமாலை என்னுமிவற்றைத் தரிப்பவர்களாயும், மூன்று […]

Sivarchana Chandrika – Muthalaavathu Aavarana Pujai in Tamil

சிவார்ச்சனா சந்திரிகை – முதலாவது ஆவரணபூஜை: ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை முதலாவது ஆவரணபூஜை ஹோம் ஈசானமூர்த்தநே நம: படிகத்தின் வருணத்தையுடையவரும், கையில் திரிசூலம் அபயமென்னும் இவற்றையுடையவரும், பார்வதியுடன் கூடினவருமான ஈசானரைப் பூஜிக்கின்றேன். ஹேம் தற்புருஷவக்திராய நம: சுவர்ணத்தின் வருணத்தையுடையவரும், பீதாம்பரம் உபவீதமென்னு மிவற்றையுடையவரும், மாதுளங்கம் அக்கமாலை யென்னும் இவற்றைத் தரிப்பவரும், கௌரிதேவியுடன் கூடினவருமாகிய தற்புருஷரைப் பூசிக்கின்றேன். ஹ§ம் அகோர ஹிருதயாய நம: மேகத்தின் வருணத்தையுடையவரும், செம்மையான மீசையையும் தலைமயிரையும் உடையவரும், கோரப்பற்களால் பயங்கரமான […]

Scroll to top