Templesinindiainfo

Best Spiritual Website

அப்பைய தீக்ஷிதர்

Sivarchana Chandrika – Avaahana Murai in Tamil

சிவார்ச்சனா சந்திரிகை – ஆவாஹன முறை: ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை ஆவாஹன முறை இன்னவிதமாயிருப்பவரென்று மனத்தால் அநுமானஞ் செய்வதற்கு முடியாதவராயும், இன்னவிதமா யிருப்பவரென்று நிச்சயிக்க முடியாதவராயும், சமானமில்லாதவராயும், நோயற்றவராயும், சூக்குமராயும், எல்லாவற்றிலும், நிறைந்தவராயும், நித்தியராயும்சலனமற்றவராயும், குறைவற்றவராயும், பிரபுவாயுமிருக்கும் உம்மை, உம்மால் ஆணை செய்யப்பட்டவனாய் மந்திரத்தால் நமஸ்கரிக்கிறேனென்று தெரிவித்துக்கொண்டு, சரீரத்தை நிமிர்ந்ததாகவைத்து, மனம் கண் என்னுமிவற்றின் வியாபாரத்தைத் தடுத்து, இடையென்னும் நாடியால் வாயுவைப் பூரகஞ் செய்து கும்பித்து, இருதயத்தில் புஷ்பங்களால் நிரம்பப்பெற்ற கைகளால் அஞ்சலிசெய்து, […]

Sivarchana Chandrika – Sathasiva Dhyanam in Tamil

சிவார்ச்சனா சந்திரிகை – சதாசிவத்தியானம்: ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை சதாசிவத்தியானம் ஈசுவரனுடைய சமீபத்திலிருக்கிறதாயும், நிலைத்த மின்னற் பிரகாசத்தையுடையதாயும், பிரிவுபடாத அவயவத்தை யுடையதாயுமிருக்கின்ற மூர்த்தியுடன் பிரகாசிக்கும் மேல்ப் பாகத்தையுடையதாயும், பூமிமுதல் சுத்தவித்தைஈறான தத்துவங்களாகிய கிழங்கு தண்டு தளங்களையுடையதாயும், கர்ணிகை கேசரங்களுடன் கூடினதாயும், சூரிய பிம்பம் முதலியவற்றால் அலங்கரிக்கப்பட்டதாயும், பலவிதமான கூடாரங்களையுடைய அநேககோடி யோசனையின் உயரம்போல் பிரகாசிக்கிறதாயுமுள்ள பத்மத்தின் மேலிருக்கிறவராயும், மகாபத்ம கோடி யோசனையால் அளவிடப்பட்டவராயும், பத்மாசனத்தில் இருப்பவராயும் சதாசிவத்தைத் தியானஞ் செய்ய வேண்டும். அலலது, […]

Sivarchana Chandrika – Sivaasana Pujai in Tamil

சிவார்ச்சனா சந்திரிகை – சிவாசன பூஜை: ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை சிவாசன பூஜை சிவ பூஜையில் முதலாவதாக சிவாசன பூஜையைச் செய்ய வேண்டும். சிவாசனமாவது கிழங்கு, தண்டு, முடிச்சு, இதழ்கள், கேசரம், கர்ணிகை என்னுமிவற்றால் வகுக்கப்பட்ட தாமரைப் பூவின் வடிவையுடையதாயும், பிருதிவிதத்துவ முதல் சுத்த வித்தை முடிவாக முப்பத்திரண்டு தத்துவம் முடிவான உயரமுடையதாயும், மேலிருக்கும் சதாசிவ மூர்த்தியுடன் கூட நிவிர்த்தி கலை முதல் சாந்திகலை ஈறான தத்துவம் வரை உயரமுள்ளதாயுமிருக்கும். அதற்கு மேல் […]

Sivarchana Chandrika – Anukgnai in Tamil

சிவார்ச்சனா சந்திரிகை – அனுக்ஞை: ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை அனுக்ஞை பின்னர் எழுந்திருந்து சிவனைப் பிரதக்ஷிணஞ் செய்து, நிருதி திக்கிலிருக்கும் வாஸ்து பிர்மாவிற்கு வடக்கும், சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் கோயிலுக்கு வாயு கோணமுமான இடத்தையடைந்து, அவ்விடத்தில் கருமை நிறமுடையவரும், கைகளில் தந்தம், அக்ஷமாலை, பாசம், ஈட்டி என்னுமிவற்றைத் தரித்திருப்பவரும், துதிக்கையில் மாதுளம்பழத்தைத் தரித்திருப்பவரும், தெற்கு முகமாக எழுந்தருளியிருப்பவருமான கணபதியை ஆவாகன முதலிய எல்லா உபசாரங்களாலும் பூஜித்து, கணபதியே யான் தொடங்கியிருக்கும் சிவ பூஜையை விக்கினமின்றி […]

Sivarchana Chandrika – Tharabishega Murai in Tamil

சிவார்ச்சனா சந்திரிகை – தாராபிஷேக முறை: ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை தாராபிஷேக முறை பின்னர் தாராபிஷேகஞ் செய்ய வேண்டும். அந்ததாரையானது ஆன்மார்த்த பூஜையில் பன்னிரண்டங்குலம் அகலமுள்ளதாயும், ஓரங்குல உயரமுள்ளதாயும், மூன்று நெல்லுக்கனமுள்ளதாயுமிருக்கவேண்டும். இவ்வாறு இருப்பது உத்தமம். ஏங்குல அகலமும், அரை அங்குல உயரமும், இரண்டு நெல்லுக்கனமுமிருப்பது மத்திமம். ஐந்தங்குல அகலமும், கால் அங்குல உயரமும், ஒரு நெல்லுக்கனமுமிருப்பது அதமம். அந்தத்தாரைவிழும் இடமானது சுவர்ணம், வெள்ளி, செம்பு என்னுமிவற்றிலொன்றால் வட்டமாகவேனும், நான்கு முக்குச்சதுரமாகவேனும் செய்திருக்க […]

Sivarchana Chandrika – Abishega Palan in Tamil

சிவார்ச்சனா சந்திரிகை – அபிஷேக பலன்: ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை அபிஷேக பலன் சிவரானுக்கு நெய்யபிஷேகஞ் செய்தலால் ஆயிரங்கோடி வருடங்களில் செய்யப்பெற்ற மகா பாவங்கள் நீங்கும். ஒரு மாதம் நெய்யபிஷேகஞ் செய்தால் இருபத்தொரு தலைமுறையிலுள்ளாரும் சிவபதத்தை யடைவர். கை இயந்திரத்தாலுண்டான தைலத்தை அபிஷேகஞ் செய்தால் சிவபதத்தையடையலாம். பால் அபிஷேகஞ் செய்தால் அலங்காரஞ் செய்யப்பட்ட அளவில்லாத பசுக்களைத் தானஞ்செய்த பலன் கிடைக்கும். தயிரபிஷேகஞ்செய்தால் எல்லாப் பாவங்களும் நீங்கி முடிவில் சிவபதங் கிடைக்கும். தேன் அபிஷேகஞ் […]

Sivarchana Chandrika – Abishega Murai in Tamil

சிவார்ச்சனா சந்திரிகை – அபிஷேக முறை: ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை அபிஷேக முறை பின்னர், சிவசக்திப்பியாம் நம: என்று சொல்லிக்கொண்டு லிங்கமுத்திரையைக் காட்டி, ஆசனமூர்த்தி மூலமந்திரங்களாலாவது எட்டுப் புட்பங்களாலாவது பூஜித்து, தூப தீபஞ் சமர்ப்பித்து, சுவர்ணம், வெள்ளி, செம்பு, சங்கு, சிப்பி, பசுவின் கொம்பு என்னுமிவற்றுள் யாதானுமொன்றால் செய்யப்பெற்ற பாத்திரத்தை வைத்துக்கொண்டு, நாலங்குலப் பிரமாணம் நீண்டதாயும், பசுவின் கொம்பின் நுனியளவு பருமனாயுமிருக்கும் தாரையால் அபிஷேகஞ்செய்து, கை இயந்திரத்திலிருந்தும் உண்டான தைலத்தாலாவது, பசுவின் நெய்யாலாவது […]

Sivarchana Chandrika – Lingasuththi in Tamil

சிவார்ச்சனா சந்திரிகை – லிங்க சுத்தி: ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை லிங்க சுத்தி பின்னர் லிங்கசுத்தி செய்யவேண்டும். அதன் முறை வருமாறு:- கருப்பக் கிரகத்திலிருக்கும் ஈசுவரனிருக்கக்கூடிய பெட்டகத்தைத் திறந்து, அந்தப் பெட்டகத்திற்கு முன்னிருப்பவராயும், நான்கு கைகளையும் மூன்று கண்களையுமுடையவராயும், வரம், அபயம், குடை, சாமரமென்னுமிவற்றைக் கையிலுடையவராயுமுள்ள வீமருத்திரரை அருச்சித்துப் பின்னர், ஓ அரக்கரை சங்கரித்த ஈசா! ஈசுவரனுக்குப் பூஜை செய்யப் போகின்றேன்; சுத்தமான வாயிலின் இடது பக்கத்தில் தேவரீர் இருந்தருள வேண்டுமென்று பிரார்த்தித்துக் […]

Sivarchana Chandrika – Pujayin Vagai in Tamil

சிவார்ச்சனா சந்திரிகை – பூஜையின் வகை: ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை பூஜையின் வகை சூக்கும ஆகமத்தில் கூறப்பட்ட சுத்தம், கேவலம், மிச்சிரமென்னும் அசத்திகமாயும், சசத்திகமாயுமுள்ள சூரியன் முதல் சண்டேசுவர பூஜை முடிவான பூஜைகள், அம்சுமானாகமத்தில் கூறியவாறு கேவலம், சகசம், மிச்சிரமென்னும் பேதத்தால் தனித்தனி முத்திறப்படும். அம்சுமானாகமத்தில் கூறப்பட்ட கேவலமென்னும் பூஜையாவது பரிவார தேவதைகளில்லாத லிங்கபூஜையாகும். சகசமென்னும் பூஜையாவது ரிஷபம், கணபதி, கந்தர், பார்வதி என்னும் நால்வர்களுடன் கூடின லிங்கபூஜையாகும். மிச்சிரமென்னும் பூஜையாவது மகேசுவரர், […]

Sivarchana Chandrika – Manthira Suththi in Tamil

சிவார்ச்சனா சந்திரிகை – மந்திரசுத்தி: ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை மந்திரசுத்தி பற்கள் அண்ணம் உதடுகள் என்னுமிவற்றின் வியாபாரத்தாலுண்டான மாயாகரியமான அசுத்தத்தை நாசஞ்செய்யும் பொருட்டும், ஐசுவரியரூபமான அதிகார மலத்தால் பலத்தைக் கொடுக்கக் கூடிய சாமர்த்தியம் வாய்ந்த மந்திரங்கள் மறைக்கப்பட்டிருத்தலால், அந்த மந்திரங்களுக்கு அந்தச் சாமர்த்தியத்தை யுண்டபண்ணுதற் பொருட்டும், மந்திரங்களின் சுத்தியைச் செய்ய வேண்டும். அதன் முறை வருமாறு :- இருதயத்தில் அஞ்சலிபந்தனஞ் செய்துகொண்டு விந்துஸ்தானம் முடியவும், பிரமரந்திரம் முடியவும், சிகை முடியவும் முறையே ஹ்ரஸ்வம், […]

Scroll to top