Templesinindiainfo

Best Spiritual Website

Thalangalum Thantavangalum | தலங்களும் தாண்டவங்களும்

சிவபெருமானின் தாண்டவங்கள்:

நடனக்கலைக்கு நாயகனாக திகழ்பவர் சிவன். அதனால்தான் அப்பெருமானை “ நடேசன் “ என்று போற்றுகின்றோம். இவர் 108 நடனங்களை ஆடியிருக்கிறார். இதில் அவர் மட்டும் தனித்து ஆடியவை 48. தேவியோடு சேர்ந்து ஆடியவை 36. திருமாலுடன் ஆடியது 9. முருகப்பெருமானுடன் ஆடியது 3. தேவர்களுக்காக ஆடியது 12 ஆகும். சிதம்பரத்தில் இவர் ஆடும் ஆனந்த தாண்டவத்தை தரிசிப்பவர்கள் முக்தி நிலையை அடைவார்கள். இதனை “ பார்க்க முக்தி தரும் தில்லை “ என்று கூறுவர். நம் ஆன்மாவை சிவகாமியாக எண்ணி நடராஜப்பெருமானின் நடனத்தை காண வேண்டும் என்பது ஐதீகமாகும்.

சிவ தாண்டவம்:

1) பாண்டுரங்க நடனம் – முப்புரம் எரிக்க முற்பட்டபோது பிரமன் தேரோட்டியாக இருந்தார். கலங்கிய கலைமகளை தேற்றி கலக்கத்தை போக்க ஆடியது {திருவதிகை} கொடிகுகாட்டி நடனம்-திரிபுரம் எரித்த பின் ஆடியது.

2) கொடுகொட்டி நடனம் – திரிபுரம் எரித்த பின் மகிழ்ச்சியோடு தாளமாட சிவனார் தன் கரங்களை கொட்டி ஆடியது.

3) சந்தியா நிருத்தம் – ஆலகால விஷம் உண்டு. அறிதுயிலில் இருந்த சிவன், தேவர்கள் வழிபட்ட பின் மறுநாள் பிரதோஷத்தில் {திரயோதசி திதி} டமருகம் ஏந்தி, சூலத்தை சுழற்றி ஒரு ஜாம நேரம் ஆடியது.

4) சண்டா தாண்டவம் – திருவாலங்காட்டில் காளியின் செருக்கை அடக்க, பைரவர் மூர்த்தங்கொண்டு ஆடியது.

5) கௌரி தாண்டவம் – தாருகாவனத்தில் மோகினி வடிவெடுத்த திருமாலுடன் ஆடியது போல கௌரிக்கு கயிலையில் ஆடிக்காட்டியது.

6) வீரட்டகாச நடனம் – குமரக்கடவுள் பிரணவப் பொருளை உணர்த்தியபோது தானும் குமரனும் ஒன்றே என்று வீரம் புலம்பட ஆடியது.

7) ஆனந்த தாண்டவம் – பதஞ்சலி, வியாக்ரபாதர் காண சிவகாமியம்மை உளம் மகிழ முயலகன் முதுகுமிதித்து சிதம்பரத்தில் ஆடியது.

8) அனவரத நடனம் – ஆன்மாக்களுக்குப் போக முக்திகளை அளிக்கும் பொருட்டு படைப்பு முதலான செயல்களை செய்து எப்போதும் ஆடும் நடனம்.

9) மஹா சங்கர நடனம் – மஹா பிரளய காலத்தில் உலகம் அனைத்தும் பராசக்தியில் ஒடுங்க, பராசக்தி பரமசிவத்தில் ஒடுங்க, பரமசிவன் ஒருவனே தானாக இருந்து ஆடியது.

நடராஜர் சுற்றி திருவாசி உள்ளது. அதில் 51 சுடர்கள் இருக்கும். திருவாசி என்பது ஓம் என்ற பிரணவ மந்திரத்தையும் 51 சுடர்கள் 51 எழுத்துக்களையும் சுட்டிக்காட்டக்கூடியது. ஆண் ஆடுவது – தாண்டவ நடனம், பெண் ஆடுவது – லாஸ்ய நடனம். நடராஜர் கால்மாறி ஆடியது மதுரை, கீள்வேளூர், திருவக்கரை. தூக்கிய திருவடி இடுப்புக்குமேல் நிறுத்துவது வக்ர தாண்டவம் ஆகும்.

ஈசன் நடனம்:

1) மதுரை – வரகுன பாண்டியனுக்கு காலமாறி {வலதுபாதம்} தூக்கி ஆடியது.

2) கீள்வேளூர் – அகத்தியருக்கு 10 கைகளுடன் நடராஜர் கால்மாறி {வலதுபாதம்} தூக்கி ஆடியது.

3) திருவாலங்காடு, சிதம்பரம் – இறைவன் காளியுடன் நடனமாடியது.

4) மயிலாடுதுறை – அம்பாள் மயில் வடிவம் கொண்டு ஈசன் முன்பு கௌரி தாண்டவம் ஆடினார்.

5) திருப்புத்தூர் – சிவன் லட்சுமிக்கு கௌரி நடனத்தை ஆடி காட்டியது.

6) திருவிற்கோலம் – காளி அம்மன் ஆலங்காடு பெருமானோடு தர்க்கித்து ரக்ஷா நடனம் ஆடி மகா தாண்டவம் ஆடியது.

7) திருவாவடுதுரை – இறைவன் வீர சிங்க ஆசனத்தில் சுந்தர நடனம் மகா தாண்டவம் ஆடியது.

8) திருக்கூடலையாற்றார் – பிரம்மனுக்கு நர்த்தனம் செய்து காட்டியது.

9) திருவதிகை – சம்பந்தருக்கு இறைவன் திருநடனம் ஆடிகாட்டியது. இறைவி பாட இறைவன் ஆடியது.

10) திருப்பனையூர் – ஊரின் புறந்தே சுந்தரமூர்த்திக்கு நடன காட்சி தந்தது.

11) திருவுசாத்தானம் – விஸ்வாமித்திரருக்கு நடன காட்சி தந்தது.

12) திருக்களர் – துர்வாச முனிவருக்கு பிரம்ம தாண்டவம் ஆடி காட்டியது.

13) திருவான்மியூர் – வான்மீகி முனிவர்க்கு இறைவன் பிரம்ம தாண்டவ நடன காக்ஷியும் கல்யாண காட்சியும் அருளியது.

14) கொடுமுடி – சித்ரா பௌர்ணமியில் பரத்வாச முனிவருக்கு நடராஜர் சதுர்முகத்தாண்டவ நடன காட்சி அருளியது.

15) திருமழபாடி – மார்கண்டேயருக்கு மழு ஏந்தி நடன காட்சி தந்தது.

16) கஞ்சனூர் – பராசர முனிவர்க்கு முக்தி தாண்டவம் அருளியது.

17) திருக்காறாயில் – பதஞ்சலி முனிவருக்கு 7 வகை தாண்டவங்களை காட்டியது. கபால முனிவருக்கு காட்சி தரல்.

18) அரித்துவார மங்களம் – உபமன்யு மகரிஷிக்கு இறைவன் திருநடனமாடி அருள் புரிந்தது.

19) திருவொற்றியூர் – மாசி மாதத்தில் நந்திக்கு நாட்டிய காக்ஷி.

20) திருக்கச்சூர் – திருமாலுக்கு நடன காட்க்ஷி தியாகராஜர் அருளியது.

21) திருப்பைஞ்ஜிலி – வசிட்ட முனிவர்க்கு நடராஜர் நடன காட்க்ஷி அருளியது.

22) கொடுமுடி, கூடலையாற்றூர், திருகளர், திருமுருகன்பூண்டி – பிரம்மனுக்கு ஈசன் நடன காட்க்ஷி.

23) திருத்துறைபூண்டி – நடராஜர் சந்திர சூடாமணி தாண்டவமாடுகிறார். அகத்தியர் நடனத்தை கண்டும் வேதாரயேஸ்வரரின் மணக்கோலத்தையுக் கண்டார்.

திருச்சிற்றம்பலம்!

Thalangalum Thantavangalum | தலங்களும் தாண்டவங்களும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to top