முரவம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)
Thirumurais composed in the first millennium refer to many of the music instruments in vogue at that time. Many of them are still in use even today.
முரவம்:
மரவஞ்சிலை தரளம்மிகு மணியுந்துவெள் ளருவி
அரவஞ்செய முரவம்படும் அண்ணாமலை யண்ணல்
உரவஞ்சடை யுலவும்புனல் உடனாவதும் ஓரார்
குரவங்கமழ் நறுமென்குழல் உமைபுல்குதல் குணமே. 1.10.5
விரவிலாதுமைக் கேட்கின்றேனடி விரும்பியாட்செய்வீர் விளம்புமின்
கரவெலாந்திரை மண்டுகாவிரிக் கண்டியூருறை வீரட்டன்
முரவமொந்தை முழாவொலிக்க முழங்குபேயொடுங் கூடிப்போய்ப்
பரவுவானவர்க் காகவார்கடல் நஞ்சமுண்ட பரிசதே 3.38.5
ஓதமலி கின்றதென் இலங்கையரை யன்மலிபு யங்கள்நெரியப்
பாதமலி கின்றவிர லொன்றினில டர்த்தபர மன்றனதிடம்
போதமலி கின்றமட வார்கள்நட மாடலொடு பொங்குமுரவஞ்
சேதமலி கின்றகரம் வென்றிதொழி லாளர்புரி தேவூரதுவே. 3.74.8