Ayyappa Stotram

Sabarimalaiyile Swami Maarkalin Sanjalam Lyrics in Tamil

Ayyappan Song: Sabarimalaiyile Swami Maarkalin Sanjalam in Tamil:

॥ சித்திவினாயகன் சிவசக்திவேலன் தம்பியே ॥
சித்திவினாயகன் சிவசக்திவேலன் தம்பியே…. ஐ சரணம் ஐயப்பா

சரண‌ம் சாமி சரணம் சுவாமி சரணம் சரணம் ஐயப்பா
சபரிமலையிலே சுவாமி மார்களின்
சஞ்சலம் எல்லாம் விலகுது தர்ம‌
சாஸ்தாவைக் காண‌ பக்தர்கள் கூட்டம்
கோடிக் கோடியாய் வருகுது
ஆயிரம் கோடு சூரியன் போலே
ஐயப்பன் முகம் ஜொலிக்குது
அருகில் சென்று மனமுருகிப் பாடி
அவன் பதமலர் தனையே தேடுது
(சபரிமலையிலே )

கோவில் மணியோசை கேட்டதுமே
நம் கவலையெல்லாம் பறக்குது
கோமகன் அழகை காண‌ மனம்
எண்ணி எண்ணி துடிக்குது
பாலபிஷேகம் கண்டபின்னே நம்
பாவங்களெல்லாம் கரையுது
பணிந்து அவனின் புகழ் பாடப்பாட‌
நம் உள்ளமெல்லாம் உருகுது
(சபரிமலையிலே )

காடுமலையிலே நடந்திடும் போது
ஐயன் சரண‌ ஒலி கேட்குது
சாமியே ஐயப்போ
சாமி சரணம் ஐயப்பா சரணம்
காடுமலையிலே நடந்திடும் போது ஐயன்
சரண‌ ஒலி கேட்குது அந்த‌
ஐயனின் சரணம் கேட்டதுமே அங்கு
யானைகளெல்லாம் விலகுது
கற்பூர‌ ஒளியிலே ஐயனின் தரிசனம்
காந்தம் போலே இழுக்குது
காருண்ய‌ மூர்த்தியின் தவக்கோலம்
கண்டால் மனமே சிலிர்க்குது
(சபரிமலையிலே )
சரண‌ம் சாமி சரணம் சுவாமி சரணம் சரணம் ஐயப்பா — x 4

Add Comment

Click here to post a comment