சிவார்ச்சனா சந்திரிகை – ஸ்னானமுறை:
ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை:
ஸ்னானமுறை
நீரில் மூழ்கி ஸ்னானஞ்செய்யமுடியாத சமயங்களில் கழுத்து வரையாயவது, இடுப்பு வரையாவது, முழங்கால் வரையாவது நீரால் சுத்தஞ் செய்து, ஈச வஸ்திரத்தால் சுத்தம் செய்யப்படாத அங்கங்களைத் துடைத்து, வேறு வஸ்திரந்தரித்து ஆசமனஞ் செய்து பின்னர் ஹும்பட்என்னும் பதத்தை இறுதியிலுடைய அஸ்திரமந்திரத்தை உச்சரித்து வலது கால் கட்டை விரலிலிருந்து உண்டான அக்கினியால் தேகத்திலுள்ள வெளி அழுக்கு மாத்திரம் நீங்கினதாகப் பாவித்து அக்கினியின் சம்பந்தத்தால் கலங்கின விந்துத் தானத்திலுள்ள சத்தி மண்டலத்தினின்றும் பெருகுகின்ற மிகுந்த அமிர்ததாசையால் சரீரம் நனைந்ததாகப் பாவிக்கவேண்டும். பின்னர் மனத்தால் மூலமந்திரத்தை நாதாந்தமாக உச்சரித்து அதன் சம்பந்தத்தால் கலங்கின சத்திமண்டலத்திலுள்ள அமிருததாசையால் தன்னுடைய சரீரம் அபிஷேகஞ் செய்யப்பட்டதாகப் பாவிக்க வேண்டும். இந்த மானதஸ்னானத்தை எப்பொழுதெல்லாம் தன்னை அசுத்தனாக நினைக்கின்றானோ அப்பொழுதுதெல்லாம் செய்ய வேண்டும்.
அல்லது விந்துத் தானத்திலிருக்கும் அந்தச் சத்தியைப் பச ரூபமாகத் தியானஞ் செய்து அதனுடைய வாலினின்றுண்டான ஒளி ரூபமான அமிர்தப் பிரவாகத்தால் சரீரம் நனைந்ததாகப் பாவிக்கவேண்டும். இது பாவனாஸ்னானம்.
அல்லது கங்கை, யமுனை முதலிய திவ்விய தீர்த்தங்களாலாவது சரீரத்தை புரோக்ஷித்துக் கொள்ளல் வேண்டும்.
அல்லது அந்த «க்ஷத்திரங்களிலுள்ள மண்ணினாலாவது மண்ணின் தூளியினாலாவது, பஞ்சப்பிரம்மம்ஷடங்கம் மூலம் ஆகியமந்திரங்களை உச்சரித்துக் கொண்டு சரீரத்தைப் பூசிக்கொள்ளல் வேண்டும்.
இவற்றுள் யாதானுமொன்றைச் செய்து பஞ்சப் பிரம்ம மந்திரம் ஷடங்கமந்திரம் மூலமந்திரமென்னும் இவற்றை ஒருமுறை அல்ல மூன்று முறை ஜெபிக்கவேண்டும். பின்னர் முன்போல் இரண்டுமுறை ஆசமனஞ் செய்து வெளிக்கரணம் உட்கரணங்களால் நேரிட்ட அசுத்தத்தைப் போக்கும் விபூதிஸ்னானத்தை செய்ய வேண்டும்.