சிவார்ச்சனா சந்திரிகை – அஷ்ட புஷ்ப அர்ச்சனை:
ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை
அஷ்ட புஷ்ப அர்ச்சனை
இவ்வாறு கூறப்பட்ட நியமங்களுடன் ஐந்து உபசாரங்களையும் செய்ய முடியாதவன் அட்ட புஷ்பங்களால் அர்ச்சிக்க வேண்டும். அது வருமாறு, – சுத்தமான மனதுடன் ஒரு புஷ்பத்தை ஆசன நிமித்தமாகச் சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் இன்னுமொரு புஷ்பத்தை இருதயத்தால் மூர்த்தியைத் தியானிக்கும் நிமித்தமாகச் சமா¢ப்பிக்க வேண்டும். பின்னர் ஐந்து புஷ்பங்களை ஐந்து அங்கங்களையும் தியானிக்கும் நிமித்தமாகச் சமர்ப்பிக்க வேண்டும். சிவனைத்தியானிக்கும் நிமித்தமாக ஒரு புஷ்பத்தைச் சமா¢ப்பிக்க வேண்டும். சிரசு முதலிய பஞ்சப்பிரமங்களே ஐந்து அங்களாகும். அல்லது நேத்திரம் நீங்கிய இருதயம் முதலியவற்றை ஐந்து அங்கங்களாகவும் கொள்ளலாம். இந்த எட்டுப் புஷ்பங்களும் அனைவருக்கும் பொதுவாகும். எல்லா ஆச்ரமங்களிலுள்ளவருக்கும் எல்லாச் சித்திகளையும் கொடுக்கும். எல்லாச்சாதியாருக்கும் பொது. இந்த அஷ்ட புஷ்பங்காளல் ஒரு காலமாவது, இரண்டு காலமாவது, மூன்று காலமாவது, பூசை செய்ய வேண்டும். பிராதக்காலத்திலும், உச்சிக்காலத்திலும், அஸ்தமன காலத்திலும் மிருந்த பக்தியுடன் அட்ட புஷ்பத்தால் பூசிக்க வேண்டும்.
தரித்திரர்கள், ஆதரிப்போரில்லாதவர்கள், பாலர்கள், பெண்கள், அறிவில்லாதவர்கள், அரசர்கள், நோயாளிகள், ஆன்மாவைத்தியானத்தில் அர்ப்பணம் செய்தவர்கள், சிவாத்திரத்தில் அன்புடையவர்கள், பலவிதசித்திகளை உடையவர்கள், போகத்தில் விருப்பமுடையவர்கள், வைராக்கியமுடையவர்கள் என்னும் இவர்களுக்கு அஷ்டபுஷ்பத்தால் அருச்சித்தல் விதிக்கப்பட்டிருக்கிறதென்று காலோத்தர ஆகமத்தில் கூறப்படுதலால், இத்ததையார் அஷ்டபுஷ்பங்களால் சிவனை அருச்சிக்கலாம்.
அரசருக்கும், சிவ சாத்திரத்தில் அன்புடையாருக்கும் அஷ்டபுஷ்ப அ£¢ச்சனையை விதித்தநோக்காவது:- உலகபரிபாலனம் செய்வதால் அநேகம் சிவாலயங்களிலும், பக்கதர்களுடைய இல்லங்களிலும் சிவபூசை நடப்பது கொண்டு அநேக புண்ணியங்கள் ஏற்படுவதுபற்றி அரசருக்கும், சிவசாத்திரதிற்கு வியாக்கியானம் செய்தலானும், அதனைக் கற்றலாலும் முறைப்படி அநேககாலம் பூசை செய்யததாலுண்டாம் மிகுந்த புண்ணியம் ஏற்படுவது பற்றிச் சிவசாத்திரத்தில் அன்புடையாருக்கும் அவகாசமில்லாத காலத்தில் அஷ்டபுஷ்பத்தால் அருச்சித்தல் விதிக்கப்பட்டதென்க.