Templesinindiainfo

Best Spiritual Website

Somavara Vrata Samba Parameshwara Puja Process in Tamil

ஸோமவார விரதம்:

(ஸாம்ப பரமேச்வர பூஜை)

[காலம் : ஸோமவாரம் என்பது திங்கட்கிழமை. எனவே, திங்கட்கிழமையன்று விரதம் ஏற்று, ஸாம்ப பரமேச்வர பூஜை செய்தால் சகல க்ஷேமமும் உண்டாகும். ஆவணி, சித்திரை, வைகசி, மார்கழி, மாதங்களில் முதல் திங்கட்கிழமை இந்த விரதத்தை ஏற்று பூஜை செய்யலாம். அல்லது 14 வருஷங்கள் வரை தொடர்ந்து ஸோமவார விரதம் அனுஷ்டிக்கலாம். இதை ஆண்கள், பெண்கள் எல்லோரும் அனுஷ்டிக்கலாம்.]

விக்நேச்வர பூஜை :

(மஞ்சள் பிள்ளையார் செய்துவைத்து, கையில் புஷ்பம் அக்ஷதை எடுத்துக்கொண்டு)

கணாநாம் த்வா கணபதிகும் ஹவாமஹே
கவிம் கவீநாம் உபமச்ரவஸ்தமம்|
ஜ்யேஷ்ட ராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பதே
ஆந : ச்ருண்வந்நூதிபிஸ் ஸீத ஸாதநம்||

அஸ்மிந் ஹரித்ராபிம்பே மஹாகணபதிம் த்யாயாமி
மஹா கணபதிம் ஆவாஹயாமி

மஹாகணாதிபதயே ஆஸநம் ஸமர்ப்பயாமி
” ” அர்க்யம் ”
” ” பாத்யம் ”
” ” ஆசமநீயம் ”
” ” ஔபசாரிகஸ்நாநம் ”
” ” ஸ்நாநாநந்தரம் ஆசமநீயம் ”
” ” வஸ்த்ரார்த்தம் அக்ஷதாந் ”
” ” யக்ஞோபவீதார்த்தம் அக்ஷதாந் ”
” ” கந்தாந் தாரயாமி ”
” ” கந்தஸ்யோபரி அக்ஷதாந் ”
” ” அலங்கரணார்த்தம் அக்ஷதாந் ”
” ” ஹரித்ரா குங்குமம் ”

புஷ்பை : பூஜயாமி (புஷ்பம், அக்ஷதையால் மஞ்சள் பிள்ளையாருக்குப் பூஜை செய்யவும்.)

ஓம் ஸுமுகாய நம: ஓம் தூமகேதவே நம:
” ஏகதந்தாய நம: ” கணாத்யக்ஷாய நம:
” கபிலாய நம: ” பாலசந்த்ராய நம:
” கஜகர்ணகாய நம: ” கஜாநநாய நம:
” லம்போதராய நம: ” வக்ரதுண்டாய நம:
” விகடாய நம: ” ச்சூர்ப்ப கர்னாய நம:
” விக்நராஜாய நம: ” ஹேரம்பாய நம:
” கணாதிபாய நம: ” ஸ்கந்த பூர்வஜாய நம:

ஓம் மஹாகணாதிபதயே நம: நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி.

தூபார்த்தம், தீபார்த்தம் அக்ஷதாந் ஸமர்ப்பயாமி.
(வெற்றிலை, பாக்கு, பழம், வெல்லம் நிவேதனம் செய்யவும்.)
நிவேதந மந்த்ரங்கள் :

ஓம் பூர்புவஸ்ஸுவ: தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோதேவஸ்ய தீமஹி, தியோ யோ ந: ப்ரசோதயாத் | தேவஸ்வித : ப்ரஸுவ | ஸத்யம் த்வர்த்தேந பரிஷிஞ்சாமி.

அம்ருதமஸ்து அம்ருதோபஸ்தரணமஸி ஸ்வாஹா, ஓம் ப்ராணாய ஸ்வாஹா, ஓம் அபாநாய ஸ்வாஹா, ஓம் வ்யாநாய ஸ்வாஹா, ஓம் உதாநாய ஸ்வாஹா, ஓம் ஸமாநாய ஸ்வாஹா, ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா.

ப்ரஹ்மணிம ஆத்மாம்ருதத்வாய | மஹாகணாதிபதயே
குடகண்ட, கதளீபல நிவேதநம் ஸமர்ப்பயாமி.
மத்யே மத்யே பாநீயம் ஸமர்ப்பயாமி. (உத்தரணியில் தீர்த்தம் எடுத்து விடவும்)

அம்ருதாபிதாநமஸி – உத்தராபோசநம் ஸமர்ப்பயாமி (உத்தரணியில் தீர்த்தம்
எடுத்து விடவும்)

தாம்பூலம் ஸமர்ப்பயாமி (உத்தரணியில் தீர்த்தம் எடுத்து தாம்பூலத்தில் விடவும்)
(கற்பூரம் ஏற்ற வேண்டும்.)
நீராஜநம் ஸமர்ப்பயாமி.
நீராஜநாநந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி. (உத்தரணியில் தீர்த்தம் எடுத்து விடவும்)

பிரார்த்தனை :

வக்ரதுண்ட மஹாகாய ஸூர்யகோடி ஸமப்ரப |
அவிக்நம் குரு மே தேவ ஸர்வகார்யேஷு ஸர்வதா|| (ப்ரதக்ஷிணமும்
நமஸ்காரமும் செய்யவும்)

கணபதி ப்ரஸாதம் சிரஸா க்ருஹ்ணாமி (கணபதி ப்ரஸாதத்தை சிரஸில்
தரித்துக் கொள்ள வேண்டும்)

ப்ராணாயாமம் :

ஓம்பூ: – ஓம்புவ: – ஓம்ஸுவ: – ஓம்மஹ: –
ஓம்ஜந: – ஓம்தப: – ஓம் ஸத்யம் – ஓம் தத்ஸவிதுர்
வரேண்யம் – பர்க்கோ தேவஸ்ய தீமஹி – தியோ யோ ந:
ப்ரசோதயாத் – ஓமாப: – ஜ்யோதீரஸ: –
அம்ருதம் ப்ரஹ்ம – பூப்ர்புவஸ்ஸுவரோம்.

ஸங்கல்பம் :

அந்தந்த ப்ரதாந பூஜைக்குரிய ஸங்கல்பத்தை அங்கங்கே குறிப்பிட்டதுபோல் செய்யவும்.

விக்நேஸ்வர உத்யாபநம் :

உத்தரணி ஜலத்தால் கையைத் துடைத்துக்கொண்டு,
“விக்நேச்வரம் யதாஸ்த்தாநம் ப்ரதிஷ்டா பயாமி; ச்சோபநார்த்தே க்ஷேமாய புநராகமநாய ச”
என்று மஞ்சள் பிள்ளையாரை வடக்குப் பக்கமாக நகர்த்த வேண்டும்.

ப்ரதாந பூஜை

பூஜா ஆரம்பம் :

சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் |
ப்ரஸந்ந வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோப ஸாந்தயே ||

ப்ராணாயாமம் :

ஓம்பூ: – ஓம்புவ: – ஓம்ஸுவ: – ஓம்மஹ: –
ஓம்ஜந: – ஓம்தப: – ஓம் ஸத்யம் – ஓம் தத்ஸவிதுர்
வரேண்யம் – பர்க்கோ தேவஸ்ய தீமஹி – தியோ யோ ந:
ப்ரசோதயாத் – ஓமாபோ: – ஜ்யோதீ ரஸ: –
அம்ருதம் ப்ரஹ்ம – பூர்ப்புவஸ் ஸுவரோம்.
ஸங்கல்பம் :

மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்த்தம் சுபே சோபநே முஹூர்த்தே, அஸ்ய ஸ்ரீபகவத: மஹா புர்ஷஸ்ய, ஸ்ரீவிஷ்ணோராஜ்ஞயா ப்ரவர்த்தமாநஸ்ய அத்யப்ரஹ்மண; த்விதீய பரார்த்தே ஸ்ரீச்வேத வராஹகல்பே வைவஸ்வத மந்வந்தரே கலியுகே, ப்ரதமே பாதே, ஜம்பூ த்வீபே, பாரத வர்ஷே, பரதகண்டே, சகாப்தே அஸ்மிந் வர்த்தமாநே வ்யாவஹாரிகே –ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே– . . . . . . . . .ஸம்வத்ஸரே . . . . . . . . அயநே. . . . . . . . . ருதௌ. . . . . . . . மாஸே. . . . . . . பக்ஷே. . . . . . . சுபதிதௌ இந்து வாஸர யுக்தாயாம். . . . . . . . நக்ஷத்ரயுக்தாயாம் சுபதிதௌ அஸ்மாகம் ஸகுடும்பநாம் க்ஷேம ஸ்த்தைர்ய வீர்ய விஜய ஆயுராரோக்ய ஐச்வர்யாணாம் அபிவ்ருத்யர்த்தம், தர்மார்த்த காம மோக்ஷ சதுர்வித பல புருஷஅர்த்த ஸித்த்யர்த்தம், ஸாம்ப பரமேச்வர ப்ரஸாத ஸித்த்யர்த்தம், ஸோமவார புண்ய காலே, ஸாம்ப பரமேச்வர பூஜாம் கரிஷ்யே | ததங்கம் கலச் பூஜாம் கரிஷ்யே |

விக்நேச்வர உத்யாபநம் ‘யதாஸ்தாநம் ப்ரதிஷ்ட்டாபயாமி’ என்று அக்ஷதை சேர்த்து மஞ்சள் பிள்ளையாரை வடக்கு பக்கமாகச் சற்று நகர்த்தவும்.

கலச பூஜை :

(கலசத்தை சந்தனம், குங்குமம், அக்ஷதை இவைகளால் அலங்கரித்து)

கலசஸ்ய முகே விஷ்ணு : கண்டே ருத்ர : ஸமாச்ரித : |
மூலே தத்ர ஸ்திதோ ப்ரஹ்மா மத்யே மாத்ருகணா : ஸ்ம்ருதா: ||

குக்ஷெள து ஸாகராஸ் ஸர்வே ஸப்த த்வீபா வஸுந்தரா |
ருக்வேதோத யஜுர்வேதஸ் ஸாமவேதோஸ் ப்யதர்வண : ||

அங்கைச்ச ஸஹிதாஸ் ஸர்வே கலசாம்பு ஸமாச்ரிதா : |
கங்கே ச யமுநே சைவ கோதாவரி ஸரஸ்வதி ||

நர்மதே ஸிந்து காவேரி ஜலேஸ்மிந் ஸந்நிதிம் குரு ||

(என்று ஜபித்து, கலச தீர்த்தம் சிறிதளவு எடுத்து பூஜாத் திரவ்வியங்களையும், தன்னையும்
ப்ரோக்ஷணம் செய்து கொள்க.)

கண்டா பூஜை :

ஆகமார்த்தம் து தேவாநாம் கமநார்த்தம் து ரக்ஷஸாம் |
கண்டாநாதம் கரோம்யாதௌ தேவதாஹ்வாந லாஞ்ச்சநம்;
என்று சொல்லி மணியை அடிக்கவும்.

ஷோடசோபசார பூஜை :

உமயா ஸஹிதம் தேவம் ப்ரஸந்நம் பரமேச்வரம் |
அங்காதிரோபித ஸ்கந்த ஹைரம்ப வ்ருஷவாஹநம் ||

வ்யாக்ரசர்ம பரீதாங்கம் ஹரம் ஸோம விபூஷணம் |
த்யாயேத் சதுர்ப்புஜம் தேவம் சந்த்ரமௌளிம் ஸதாசிவம் ||
அஸ்மிந் பிம்பே ஸாம்ப பரமேச்வரம் த்யாயாமி

ஆவாஹயாமி தேவேசம் ஆதி தேவம் ஸநாதநம் |
ஸோமேச்வரம் சூலபாணிம் விரூபாக்ஷம் பிநாகிநம் ||
அஸ்மிந் பிம்பே ஸாம்ப பரமேச்வரம் ஆவாஹயாமி
ப்ராண ப்ரதிஷ்டை :

(அந்தந்த பூஜைக்குரிய தேவதையை விக்ரஹ மூத்தியிலோ, கலசத்திலோ, படம் முதலியவைகளிலோ கீழ்கண்ட வகையில் ப்ராணப்ரதிஷ்டை செய்ய வேண்டும். தேவதா ப்ரதிமை இருந்தால் பஞ்ச கவ்யத்தால் அந்த ப்ரதிமையைச் சுத்தி செய்து ப்ராணப் பிரதிஷ்டை செய்யவேண்டும். படமாக இருந்தால் ப்ராண ப்ரதிஷ்டை மட்டும் செய்ய வேண்டும்.)

ஓம் அஸ்ய ஸ்ரீ ப்ராணப்ரதிஷ்டா மஹாமந்த்ரஸ்ய,
ப்ரஹ்ம விஷ்ணு மஹேச்வரா: ரிஷய:, ருக் யஜுஸ் ஸாம
அதர்வாணி ச்சந்தாம்ஸி || ஸகல ஜகத் ஸ்ருஷ்டி ஸ்திதி
ஸம்ஹார காரிணீ ப்ராண சக்தி: பரா தேவதா |

ஆம் பீஜம், ஹ்ரீம் சக்தி:, க்ரோம் கீலகம், ப்ராண
ப்ரதிஷ்டாபநே விநியோக:

ஆம் அங்குஷ்ட்டாப்யாம் நம:, ஹ்ரீம் தர்ஜநீப்யாம்
நம;, க்ரோம் மத்யமாப்யாம் நம:

ஆம் அநாமிகாப்யாம் நம:, ஹ்ரீம் கநிஷ்ட்டிகாப்யாம்
நம:, க்ரோம் கரதல கரப்ருஷ்ட்டாப்யாம் நம:

ஆம் ஹ்ருதயாய நம:, ஹ்ரீம் சிரஸே ஸ்வாஹா, க்ரோம் சிகாயை வஷட்,
ஆம் கவசாய ஹூம், ஹ்ரீம் நேத்ரத்ரயாய வௌஷட், க்ரோம் அஸ்த்ராய பட், பூர்ப்புவஸ்
ஸுவரோமிதி திக்பந்த: ||

|| த்யாநம் ||

ரக்தாம்போதிஸ்த்த போதோல்லஸ தருண
ஸரோஜாதிரூடா கராப்ஜை:
பாசம் கோதண்ட மிக்ஷூத்பவ மளிகுண-
மப்யங்குசம் பஞ்சபாணாந் |
பிப்ராணாஸ்ருக் கபாலம் த்ரிணயந லஸிதா
பீந வக்ஷோ ருஹாட்யா
தேவீ பாலார்க்கவர்ணா பவது ஸுக்கரீ
ப்ராணசக்தி: ப்ரா ந: ||

ஓம் ஆம் ஹ்ரீம் க்ரோம் | க்ரோம் ஹ்ரீம் ஆம் | அம் யம் ரம் லம் வம் சம் ஷம்
ஸம் ஹம் ளம் க்ஷம் அம் | ஹம்ஸ: ஸோஹம், ஸோஹம் ஹம்ஸ: |

அஸ்யாம் மூர்த்தௌ ஜீவஸ்திஷ்ட்டது. அஸ்யாம் மூத்தௌ ஸர்வேந்த்ரியாணி வாங்
மநஸ் த்வக் சக்ஷுச் ச்ரோத்ர ஜிஹ்வா க்ராண வாக் பாணி பாத பாயூபஸ்த்தாநி இஹாகத்ய
ஸ்வஸ்தி ஸுகம் சிரம் திஷ்ட்டந்து ஸ்வாஹா |

(புஷ்பம், அக்ஷதை இவைகளைத் தீர்த்தத்துடன் பிம்பத்தின் மீது விடவும்.)

அஸுநீதே புநரஸ்மாஸு சக்ஷு: புந: ப்ராணமிஹ நோ தேஹி போகம் | ஜ்யோக் பச்யேம
ஸூர்ய முச்சரந்த மநுமதே ம்ருளயா ந: ஸ்வஸ்தி ||

ஆவாஹிதோ பவ | ஸ்த்தாபிதோ பவ | ஸந்நிஹிதோ பவ | ஸந்நிருத்தோ பவ | அவகுண்டிதோ
பவ | ஸுப்ரீதோ பவ ஸுப்ரஸந்நோ பவ ஸுமுகோ பவ | வரதோ பவ | ப்ரஸீத ப்ரஸீத ||

ஸ்வாமிந் ஸர்வஜகந்நாத யாவத் பூஜாவஸாநகம் | தாவத் த்வம் ப்ரீதி பாவேந பிம்பேஸ்மிந்
ஸந்நிதிம் குரு || என்று ப்ரார்த்தித்து, வாழைப்பழம் போன்ற ஏதாவது ஒன்றை நிவேதநம் செய்யவும்.

பிறகு கீழ்கண்டதைச் சொல்லி சரட்டைக் கலசத்தின் மீது வைக்கவும்.

முக்தா வைடூர்ய கசிதம் ஜாம்பூநத பரிஷ்க்ருதம் |
ஸிம்ஹாஸநம் மஹாதேவ ஸங்க்ருஹாண ஸுரேச்வர ||
ஆசநம் ஸமர்ப்பயாமி.

ஸர்வதீர்த்த ஸமாநீதம் புஷ்பகந்தைஸ் ஸுவாஸிதம் |
பாத்யம் க்ருஹாண தேவேச பக்தப்ரிய நமோஸ்து தே ||
பாத்யம் ஸமர்ப்பயாமி.

கைலாஸ சிகராவாஸிந் ஸுராஸுர ஸுபூஜித |
அர்க்யம் க்ருஹாண தேவேச பக்தாநா மபயங்கர ||
அர்க்யம் ஸமர்ப்பயாமி.

நமஸ் துப்யம் த்ரிணயந ஸ்ருஷ்டி ஸ்த்தித்யந்த காரண |
க்ருஹாண தேவ தேவேச ஜிதக்ரோத ஜிதேந்த்ரிய ||
ஆசமநீயம் ஸமர்ப்பயாமி.

பயஸா மதுநா தத்நா க்ருதேந ச ததைவ தே |
மதுபர்க்கம் ப்ரதாஸ்யாமி தேவதேவ ஜகத்பதே ||
மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி.

ததிக்ஷீர க்ருதம் சம்போ கதலீ பல ஸம்யுதம் |
பார்வதீச நமஸ்துப்யம் க்ராஹ்யம் பஞ்சாம்ருதம் த்வயா ||
பஞ்சாம்ருதஸ்நாநம் ஸமர்ப்பயாமி.

சந்த்ரமௌளே ஜடாஜூட ஸோமஸூர்யாக்நி லோசந |
பாஹி மாம் க்ருபயா சம்போ பசூநாம் பதயே நம : ||
சுத்தோதக ஸ்நாநம் ஸமர்ப்பயாமி.

துகூலம் தௌத தவளம் நாநா சித்ரமயம் யுகம் |
வஸ்த்ரம் க்ருஹாண பகவந் காலகண்ட நமோஸ்து தே ||
வஸ்த்ரயுக்மம் ஸமர்ப்பயாமி.

காஞ்சநம் ப்ரஹ்மஸூத்ரஞ்ச ராஜதம் சோத்தரீயகம் |
தந்துநா மிச்ரிதம் ஸூத்ரம் பவித்ரஞ்ச க்ருஹாண போ: ||
உபவீதம் ஸமர்ப்பயாமி.

ஸ்ரீகந்தம் குங்குமையர் மிச்ரம் கர்ப்பூரேண மநோஹரம் |
அந்யைஸ் ஸுகந்திபிர் யுக்தம் க்ருஹாண ஸ்வஜநப்ரிய ||
கந்தாந் தாரயாமி.

அக்ஷதாந் தவளாந் திவ்யாந் அவ்ரணாம்ஸ் திலதண்டுலாந் |
அஷ்டமூர்த்தே நமஸ்துப்யம் அக்ஷதாந் ஸங்க்ருஹாண போ: ||
அக்ஷதாந் ஸமர்ப்பயாமி.

கேயூர கடகாதீநி கடிஸூத்ராங்குளீயகை: |
நூபுராதிபி ரந்யைச்ச க்ருஹாணாப்ரணம் ப்ரபோ ||
ஆபரணம் ஸமர்ப்பயாமி.

மால்யாநி ச ஸுகந்தீநி மாலதீ குஸுமாநி ச |
மயா ஹ்ருதாநி பூஜார்த்தம் புஷ்பாணி ப்ரதிக்ருஹ்யதாம் ||
புஷ்பாணி ஸமர்ப்பயாமி.

|| அங்க பூஜா ||

ஹராய நம: பாதௌ பூஜயாமி
சங்கராய நம் குல்பௌ ”
சம்பவே நம: ஜங்கே ”
சிவாய நம: ஜாநுநீ ”
அகநாசிநே நம: ஊரூ ”
ஜகத்பதயே நம: ஜகநம் ”
ப்ரஜாபதயே நம: மேட்ரம் ”
ஸர்வாச்ரம பதயே நம: கடிம் ”
ஸர்வரக்ஷாய நம: நாபிம் ”
திக்வாஸஸே நம: மத்யம் ”
பார்வதீசாய நம: பார்ச்வே ”
உமாபதயே நம: வக்ஷஸ்தலம் ”
ஜகத்குக்ஷயே நம: குக்ஷிம் ”
நீலகண்டாய நம: கண்டம் ”
த்ரிபுராந்தகாய நம: பாஹூந் ”
தேவதேவாய நம: கராந் ”
வ்ருஷாங்காய நம: கர்ணௌ ”
க்ரதுபல ப்ரதாய நம: முகம் ”
நாகஹாராய நம: நாஸிகே ”
சந்த்ரார்க்க வஹ்நிநேத்ராய நம: நேத்ராணி ”
கபாலிநே நம: லலாடம் ”
ஸோமேச்வராய நம: சிர: ”
கங்காதராய நம: ஜடா: ”
சுபதாயிநே நம: ஸர்வாண்யங்காநீ பூஜயாமி ||

(பிறகு அஷ்டோத்திரத்தால் அர்ச்சனை செய்யவும்)

|| சிவாஷ்டோத்தர சத நாமாவளி ||

ஓம் சிவாய நம: ஓம் மஹேச்வராய நம:
” சம்பவே நம: ” பிநாகிநே நம:
” சசிசேகராய நம: ” வாமதேவாய நம:
” விரூபாக்ஷாய நம: ” கபர்திநே நம:
” நீலலோஹிதாய நம: ” சங்கராய நம்: (10)
” சூலபாணயே நம: ” கட்வாங்கிநே நம:
” விஷ்ணுவல்லபாய நம: ” சிபிவிஷ்டாய நம:
” அம்பிகாநாதாய நம: ” ஸ்ரீ கண்ட்டாய நம:
” பக்தவத்ஸலாய நம: ” பவாய நம:
” சர்வாய நம: ” த்ரிலோகேசாய நம: (20)
” சிதிகண்ட்டாய நம: ” சிவப்ரியாய நம:
” உக்ராய நம: ” கபர்திநே நம:
” காமாரயே நம: ” அந்தகாஸுரஸூதநாய நம:
” கங்காதராய நம: ” லலாடாக்ஷாய நம:
” காலகாலாய நம: ” க்ருபாநிதிதயே நம : (30)
” பீமாய நம: ” பரசுஹஸ்தாய நம:
” ம்ருக பாணயே நம: ” ஜடாதராய நம:
” கைலாஸ வாஸிநே நம: ” கவசிநே நம:
” கடோராய நம: ” த்ரிபுராந்தகாய நம:
” வ்ருஷாங்காய நம: ” வ்ருஷபாரூடாய நம்: (40)
” பஸ்மோத்தூளித
விக்ரஹாய நம: ” ஸாமப்ரியாய நம:
” ஸ்வரமயாய நம: ” த்ரயீமூர்த்தயே நம:
” அநீச்வராய நம: ” ஸர்வஜ்ஞாய நம:
” பரமாத்மநே நம: ” ஸோமஸூர்யாக்நி லோசநாய நம:
” ஹவிஷே நம: ” யஜ்ஞமயாய நம: (50)
” ஸோமாய நம: ” பஞ்சவக்த்ராய நம:
” ஸதாசிவாய நம: ” விச்வேச்வராய நம:
” வீரபத்ராய நம: ” கணநாதாய நம:
” ப்ரஜாபதயே நம: ” ஹிரண்யரேதஸே நம:
” துர்தர்ஷாய நம: ” கிரீசாய நம: (60)
” கிரிசாய நம: ” அநகாய நம:
” புஜங்கபூஷ்ணாய நம: ” பர்காய நம:
” கிரிதந்வநே நம: ” கிரிப்ரியாய நம:
” க்ருத்திவாஸஸே நம: ” புராராதயே நம:
” பகவதே நம: ” ப்ரமதாதிபாய நம: (70)
” ம்ருத்யுஞ்ஜயாய நம: ” ஸூக்ஷமதநவே நம:
” ஜகத்வ்யாபிநே நம: ” ஜதக்குரவே நம:
” வ்யோமகேசாய நம: ” மஹாஸேநஜநகாய நம:
” சாருவிக்ரமாய நம: ” ருத்ராய நம:
” பூதபதயே நம: ” ஸ்த்தாணவே நம: (80)
” அஹிர்புத்ந்யாய நம: ” திகம்பராய நம:
” அஷ்டமூர்தயே நம: ” அநேகாத்மநே நம:
” ஸாத்விகாய நம: ” சுத்தவிக்ரஹாய நம:
” சாச்வதாய நம: ” கண்டபரசவே நம:
” அஜாய நம: ” பாசவிமோசகாய நம: (90)
” ம்ருடாய நம: ” பசுபதயே நம:
” தேவாய நம: ” மஹாதேவாய நம:
” அவ்யயாய நம: ” ஹரயே நம:
” பூஷதந்தபிதே நம: ” அவ்யக்ராய நம:
” தக்ஷாத்வரஹராய நம: ” ஹராய நம: (100)
” பகநேத்ரபிதே நம: ” அவ்யக்தாய நம:
” ஸஹஸ்ராக்ஷாய நம: ” ஸஹஸ்ரபதே நம:
” அபவர்கப்ரதாய நம: ” அநந்தாய நம:
” தாரகாய நம: ” பரமேச்வராய நம: (108)

ஸாம்ப பரமேச்வராய நம:, நாநாவித பரிமளபத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி ||
என்று சொல்லி புஷ்பம் சேர்க்கவும்.

|| ஏகாதச (11) கலச பூஜை ||

1) சிவாய நம: 2) ருத்ராய நம: 3) பசுபதயே நம:
4) நீலகண்டாய நம: 5) மஹேச்வராய நம: 6) சர்வாய நம:
7) ஈசாநாய நம: 8) பிநாகிநே நம: 9) வ்ருஷபத்வஜாய நம:
10)சங்கராய நம: 11) மஹாதேவாய நம: ||

உத்தராங்க பூஜை :

தசாங்கம் குக்குலும் தூபம் ஸுகந்தம் ஸுமநோஹரம் |
தூபம் க்ருஹாண தேவேச விரூபாக்ஷ நமோஸ்து தே ||
தூபம் ஆக்ராபயாமி.

ஸாஜ்யம் த்ரிவர்த்தி ஸம்யுக்தம் வஹ்நிநா யோஜிதம் மயா |
தீபம் க்ருஹாண தேவேச த்ரைலோக்ய திமிராபஹம் ||
தீபம் தர்சயாமி.

ஷட்ரஸைச்ச ஸமோபேதம் நாநாபக்ஷ்ய ஸமந்விதம் |
நைவேத்யம் து மயா தத்தம் க்ருஹாண பரமேச்வர ||

ஸாம்ப பரமேச்வராய நம:, சால்யந்நம், க்ருதகுள பாயஸம்,
பலாநி, ஏதத் ஸர்வம் மஹாநைவேத்யம் நிவேதயாமி.
ஆசமநீயம் ஸமர்ப்பயாமி.

கர்ப்பூர பாடலிர் யுக்தம் ஏலோசீர ஸமந்விதம் |
சம்பகோத்பல ஸம்யுக்தம் பாநீயம் ப்ரதிக்ருஹ்யதாம் ||
பாநீயம் ஸமர்ப்பயாமி.

கங்கா யமுநயோஸ் தோயை: சாதகும்பகடைர் ஹ்ருதை: |
ஹஸ்த ப்ரக்ஷாளநம் தேவ சுத்யர்த்தம் ப்ரதிக்ருஹ்யதாம் ||
ஹஸ்தப்ரக்ஷாளநம் ஸமர்ப்பயாமி.

பூகீபல ஸமாயுக்தம் நாகவல்லீ தளைர் யுதம் |
கர்ப்பூர சூர்ணஸம்யுக்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம் ||
தாம்பூலம் ஸமர்ப்பயாமி.

நீராஜநம் மஹாதேவ கோடிஸூர்ய ப்ரகாசக |
பக்த்யாஹம் தே ப்ரதாஸ்யாமி ஸ்வீகுருஷ்வ தயாநிதே ||
மர்ப்பூரநீராஜநம் தர்ஸயாமி.

யஸ்யாஜ்ஞபா ஜகத்ஸ்ரஷ்டா விரிஞ்ச: பாலகோ ஹரி: |
ஸம்ஹர்த்தா காலருத்ராக்ய: நமஸ்தஸ்மை பிநாகிநே ||
மந்த்ரபுஷ்பம் ஸமர்ப்பயாமி.

நாநாரத்ந ஸமாயுக்தம் வஜ்ரநாள ஸமந்விதம் |
முக்தாகேஸர ஸம்யுக்தம் ஸ்வர்ண புஷ்பம் ததாம்யஹம் ||
ஸ்வர்ணபுஷ்பம் ஸமர்ப்பயாமி.

யாநி காநி ச பாபாநி ஜந்மாந்தர க்ருதாநி ச |
தாநி தாநி ப்ரணச்யந்தி ப்ரதக்ஷிணபதே பதே ||

ஸோமேச்வர விரூபாக்ஷ ஸோமரூப ஸதாசிவ |
ப்ரதக்ஷிணம் கரோமீச ப்ரஸீத பரமேச்வர ||

நமஸ்தே ஸர்வலோகேச நமஸ்தே புண்யமூர்த்தயே |
நமோ வேதாந்த வேத்யாய சரண்யாய நமோ நம: ||

ஸாம்ப சிவாய நம:, அநந்தகோடி ப்ரதக்ஷிண நமஸ்காராந் ஸமர்ப்பயாமி.
(பஞ்சாக்ஷரஜபம் செய்யவும்.)

அர்க்ய ப்ரதாநம் :

அத்ய பூர்வோக்த – ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம. . .
சுபதிதௌ, ஸோமவார புண்யகாலே ஸாம்ப பரமேச்வர
பூஜாந்தே அர்க்யப்ரதாநம் உபாயநதாநம் ச கரிஷ்யே ||

ஸோமவாரே திவா ஸ்த்தித்வா நிராஹாரோ மஹேச்வர |
நக்தம் போக்ஷ்யாமி தேவேச அர்ப்பயாமி ஸதாசிவ ||
ஸாம்பசிவாய நம: இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம்.

நக்தே ச ஸோமவாரே ச ஸோமநாத ஜகத்பதே |
அநந்தகோடி ஸௌபாக்யம் அக்ஷய்யம் குரு சங்கர ||
சாம்பசிவாய நம: இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம்.

நமஸ் ஸோம விபூஷாய ஸோமாயாமித தேஜஸே |
இதமர்க்யம் ப்ரதாஸ்யாமி ஸோமோ யச்சது மே சிவம் ||
ஸாம்பசிவாய நம: இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம்.

ஆகாச திக்சரீராய க்ரஹநக்ஷத்ர மாலிநே |
இதமர்க்யம் ப்ரதாஸ்யாமி ஸுப்ரீதோ வரதோ பவ ||
ஸாம்பசிவாய நம: இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம்.

அம்பிகாயை நமஸ்துப்யம் நமஸ்தே தேவி பார்வதி |
அம்பிகே வரதே தேவி க்ருஹ்ணீதார்க்யம் ப்ரஸீத மே ||
பார்வத்யை நம:, இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம்.

ஸுப்ரஹ்மண்ய மஹாபாக கார்த்திகேய ஸுரேச்வர |
இதமர்க்யம் ப்ரதாஸ்யாமி ஸுப்ரீதோ வரதோ பவ ||
ஸுப்ரஹ்மண்யாய நம:, இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம்.

நந்திகேச மஹாபாக சிவத்யாந பராயண |
சைலாதயே நமஸ்துப்யம் க்ருஹ்ணீதார்க்ய மிதம் ப்ரபோ ||
நந்திகேச்வராய நம:, இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம்.

அநேந அர்க்யப்ரதாநேந பகவாந் ஸர்வாத்மக: ஸர்வம் ஸாம்பசிவ:
ப்ரீயதாம்.

|| தத்ஸத் ப்ரஹ்மார்ப்பணமஸ்து ||

யஸ்ய ஸ்ம்ருத்யா ச நாமோக்த்யா தப: பூஜா க்ரியாதிஷு |
ந்யூநம் ஸம்பூர்ணதாம் யாதி ஸத்யோ வந்தே ஸதாசிவம் ||

ஸோமவார வ்ரதம் பக்த்யா க்ருதம் கல்யாண தாயகம் |
ப்ரஸீத பார்வதீநாத ஸாயுஜ்யம் தேஹி மே ப்ரபோ ||

ஸோமநாதா ஜகத்வந்த்ய பக்தாநா மிஷ்டதாயக |
ஆயுஷ்யம் சைவ ஸௌபாக்யம் தேஹாந்தே முக்திதோ பவ ||
(ப்ராத்தனை செய்து கொள்ளவும்)

உபாயந தாநம் :

ஸாம்பசிவ ஸ்வரூபஸ்ய ப்ராஹ்மணஸ்ய இதமாஸநம் |
கந்தாதி ஸகலாராதநை: ஸ்வர்ச்சிதம் ||

ஸோமேச: ப்ரதிக்ருஹ்ணாதி ஸோமேசோ வை ததாதி ச |
ஸோமேசஸ் தாரகோ த்வாப்யாம் ஸோமேசாய நமோ நம: ||

இதமுபாயனம் ஸதக்ஷிணாகம் ஸதாம்பூலம் ஸாம்பசிவ பூஜா
பல ஸாத்குண்யம் காமயமாந: ஸாம்ப பரமேச்வர ஸ்வரூபாய
ப்ராஹ்மணாய துப்யமஹம் ஸம்ப்ரததே ந மம ||

(தீர்த்தம், ப்ரஸாதம் பெற்றுகொள்ளவும்)

உமாமஹேச்வர பூஜை முற்றும்

Somavara Vrata Samba Parameshwara Puja Process in Tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to top