Sivarchana Chandrikai – Mundraavathu Aavarana Pujai in Tamil
சிவார்ச்சனா சந்திரிகை – மூன்றாவது ஆவரண பூசை: ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை மூன்றாவது ஆவரண பூசை குண்ட சகிதாய நந்திகேசுவராய நம: செம்மை வருணத்தையுடையவராயும், திரிசூலம், அக்கமாலை, வரம், அபயம் என்னுமிவற்றைக் கையிலுடையவராயும், குண்டலினியுடன் கூடினவராயும் இருக்கும் நந்தியைப் பூசிக்கின்றேன். பத்மினீ சகிதாய மகாகாளாய நம: பொன்மையும் கருமையும் கலந்த நிறமுடையவராயும், செம்மையான மீசையையும் தலைமயிரையுமுடையவராயும், சூலங் கபாலம் கட்கம் கேடம் என்னுமிவற்றைத் தரிப்பவராயும், பத்தினியுடன் கூடினவராயுமிருக்கும் மகாகாளரைப் பூசிக்கின்றேன். ஹ்ராதினீசகிதாய ப்ருங்கிணே […]