thanigaimalai perunthuraiye … va va va in Tamil:
॥ தணிகைமலை பெருந்துறையே ॥
தணிகைமலை பெருந்துறையே … வா வா வா
தயாநிதியே தர்மதுரையே … வா வா வா
அடியவர்க்கு அருளும் அரசே … வா வா வா
ஆலமுண்டோன் பாலகனே … வா வா வா
பிறவிப் பிணியை தீர்க்கும் மருந்தே … வா வா வா
ஆறுமுக கருணைக் கோவே … வா வா வா
என் ஆவி பிரியும் சமயம் முன்னே … வா வா வா
பாவி என்னை மறந்திடாதே … வா வா வா
வேல் பிடிக்கும் செஞ்சுடரே … வா வா வா
வேல் எடுத்து வினைய தீர்க்க … வா வா வா
என் மரண பயம் தீர்க்க நீயும் … வா வா வா
மயிலும் ஆடி நீயும் ஆடி … வா வா வா
திருத்தணிகைமலை, சுவாமிமலை, பழனிமலை சோலைமலை பெருந்துறையே … வா வா வா
தயாநிதியே தர்மதுரையே … வா வா வா…
அன்பர்க்கருள் புரியும் அழகு நேயன்!
அருளை வாரித் தரும் கார்த்திகேயன்!
ஆறுமுகதெய்வமருளால் வியாழன் கிழமை நல்லதாக இருகட்டும்.
Also Read:
Murugan Song – Thanigaimalai Perundhuraiye … va va va Lyrics in Tamil | English