Mannanalum Thiruchchendhuril Mannaven in Tamil:
॥ மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் – பாடல் வரிகள் ॥
மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
ஒரு மரமானாலும் பழமுதிர்ச் சோலை மரமாவேன்
கருங்கல்லானாலும் தணிகை மலையில் கல்லாவேன்
பசும் புல்லானாலும் முருகன் அருளால் பூவாவேன்..
நான்…
மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
ஒரு மரமானாலும் பழமுதிர்ச் சோலை மரமாவேன்
பொன்னானாலும் வடிவேல் செய்யும் பொன்னாவேன்
பனிப் பூவானாலும் சரவணப் பொய்கை பூவாவேன்
தமிழ்ப் பேச்சானாலும் திருப்புகழ் விளக்க பேச்சாவேன்
மனம் பித்தானாலும் முருகன் அருளால் முத்தாவேன்
நான்…
மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
ஒரு மரமானாலும் பழமுதிர்ச் சோலை மரமாவேன
சொல்லானாலும் ஓம் என்றொலிக்கும் சொல்லாவேன்
பழச்சுவையானாலும் பஞ்சாமிருதச் சுவையாவேன்
அருள் உண்டானாலும் வீடும் பெயரும் உண்டாவேன்
தனி உயிரானாலும் முருகன் அருளால் பயிராவேன்
நான்…
மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
ஒரு மரமானாலும் பழமுதிர்ச் சோலை மரமாவேன்
கருங்கல்லானாலும் தணிகை மலையில் கல்லாவேன்
பசும் புல்லானாலும் முருகன் அருளால் பூவாவேன்..
நான்…
மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
ஒரு மரமானாலும் பழமுதிர்ச் சோலை மரமாவேன்
முருகா…..முருகா…..முருகா..
Add Comment