Practicing Hinduism – Povum Nerum – பூவும் நீரும்
பூவும் நீரும் “அட்ட புட்பம் அவைகொளு மாறுகொண்டு அட்ட மூர்த்தி அனாதிதன் பாலணைந்து அட்டு மாறுசெய் கிற்பஅ திகைவீ ரட்ட னாரடி சேரு மவர்களே” – திருநாவுக்கரசர் “புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு” என்பது திருமுறை. மானிடராகப் பிறந்த ஒவ்வொருவரும் வழிபாடு செய்வது இன்றியமையாதது. வீடுகளில் செய்யப் பெறுவது ஆத்மார்த்த வழிபாடு. திருக்கோயில்களில் நிகழ்த்தப் பெறுவது பரார்த்த வழிபாடு. இவ்விரண்டிலும் இறைவன் திருவுருவங்களுக்கு அபிஷேகம், அர்ச்சனை முதலியன நிகழும். அபிஷேகத்திற்குரிய திரவியங்கள் இவை என்பதையும், அவற்றின் பயன்களையும், […]