Templesinindiainfo

Best Spiritual Website

Slokas

Mantras, Songs, Slokas, bakthi songs, pooja manthram

Prayer to Cure Stomach Related Diseases in Tamil – English

திருநாவுக்கரசர் அருளிய தேவாரம் தலம் : திருவதிகை வீரட்டானம் பண் : கொல்லி நான்காம் திருமுறை திருச்சிற்றம்பலம் பணிந்தாரன பாவங்கள் பாற்றவல்லீர் படுவெண்டலையிற் பலி கொண்டுழல்வீர் துணிந்தே உமக்காட் செய்து வாழலுற்றால் சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர் பிணிந்தார் பொடி கொண்டு மெய் பூச வல்லீர் பெற்றம் ஏற்றுகந்தீர் சுற்றும் வெண்டலை கொண்டு அணிந்தீர் அடிகேள் அதிகைக் கெடில வீரட்டானத்து உறை அம்மானே. திருச்சிற்றம்பலம் Prayer to Cure Stomach Related Diseases in English: Thirunavukkarasar Aruliya […]

Prayer For Coming Out of Gloom of Loss of Relatives in Tamil

நமசிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க! புத்திரசோகத்திலிருந்து மீள.. ஞானசம்பந்தப் பெருமான் விடம் தீர்த்தெழுப்பிய காதலன் கதையையும், நாவுக்கரசர் பெருமான் விடம் தீர்த்தெழுப்பிய மகவின் கதையையும் முன்னர் கண்டோம். புத்திரசோகத்திலிருந்து தம் அடியவரை மீட்டெழுப்பும் அற்புதப் பதிகங்கள் இரண்டினைக் கீழே காண்போம். முதலில் சுந்தரர் நிகழ்த்திய மாபெரும் அதிசயம்: இது பெரியபுராணத்தில் வெள்ளானைச் சருக்கமெனும் இறுதி அத்தியாயத்தில் பாடப் பட்டுள்ளது. தம் உற்ற தோழர் சேரமான் பெருமானைக் காணவேண்டி கொங்கு நாட்டின் வழியே பயணிக்கும் சுந்தரர் திருப்புக்கொளியூரெனும் அவிநாசியின் […]

Prayer to Cure Skin Related Diseases | Ailment Prayers in Tamil

Chant this padhikam regularly to get away from all Skin Related Problems நமசிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க! சொரி, படை, மேகம், அம்மை போன்ற தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் அனைத்தும் விட்டோட. காஞ்சியில் விழியொளி பெற்று ஆரூர் நோக்கி நடக்கும் சுந்தரரை மற்றொரு சோதனை சூழ்கிறது. அவர் உடலெங்கும் ஒருவகை சருமநோய் ஏற்பட்டுத் தாளாத வேதனையில் ஆழ்கிறார் சுந்தரர். ஆயினும் விடாமல் ஆருரானைத் தரிசிக்கும் ஆவலில் பைய நடப்பவர் திருத்துருத்தியை வந்தடைகிறார். இங்கு […]

Nirgunamanasa Puja Lyrics in Marathi

Nirguna Manasa Puja Lyrics in Marathi: || निर्गुण मानसपूजा || (शन्कर बगवत्पाद) अखण्डे सच्चिदानन्दे निर्विकल्पैकरूपिणि . स्थिते.अद्वितीयभावे.अपि कथं पूजा विधीयते || 1 || पूर्णस्यावाहनं कुत्र सर्वाधारस्य चासनम.ह . स्वच्च्हस्य पाद्यमर्घ्यं च शुद्धस्याचमनं कुतः || 2 || निर्मलस्य कुतः स्नानं वासो विश्वोदरस्य च . अगोत्रस्य त्ववर्णस्य कुतस्तस्योपवीतकम.ह || 3 || निर्लेपस्य कुतो गन्धः पुश्ह्पं निर्वासनस्य च […]

For Prosperity and Good Life in Tamil

திருமணம் முதலிய சுபநிகழ்ச்சிகள் யாவிலும் ஓதவேண்டிய மங்கலப்பதிகம் மதுரையில் நுழையும்போதே, மீண்டும் எங்கும் திருநீற்றுக் கோலத்தைக் காணும்போதே சிவபாதவிருதயருக்கு நிம்மதி திரும்பி விட்டது. நாவுக்கரசர் தடுத்தும் கேளாமல் பாண்டிமாதேவியாரின் அழைப்பை ஏற்றுக் கிளம்பிய குழந்தை ஞானசம்பந்தன் மதுரைச் சமணரிடம் என்ன பாடுபடுமோ என்று அவ்வப்போது அச்சமாயிருந்தாலும் தோணியப்பன் காத்திருப்பான் என்று திடப்படுத்திக் கொண்டிருந்தார். இதோ உரத்து முழங்கும் அரன் நாமம் அதை உறுதி படுத்துகிறதே! ‘பானறுங் குதலைச் செய்ய பவளவாய்ப் பிள்ளையார்தாம் மான சீர்த் தென்னன் நாடு […]

For Getting Blessed with Children in Tamil

நமசிவாய வாழ்க, நாதன்தாள் வாழ்க! மக்கட்பேறு வேண்டி இரு பதிகங்கள் ஞானசம்பந்தப் பெருமான் தம் இறுதிச் சுற்றாய் தொண்டமண்டலத் தலங்களைத் தரிசித்து வருகையில் காஞ்சிக்குப் பக்கம் திருவோத்தூரில் நிகழ்த்திய அற்புதமிது. அத்தலத்தில் ஆண்பனையொன்றிருந்தது. அவ்வூரைச் சேர்ந்த சைவர் ஒருவரை பெரும்பான்மைச் சமணர்கள் அப்பனையைக் காட்டி எள்ளுவது வழக்கம். சிவபெருமானின் திருவருளால் அம்மரத்தைக் காய்க்க வைப்பதுதானே என்று அவர்கள் நகைத்திருப்பதை ஞானசம்பந்தப் பெருமானிடம் சொல்லி அழுகிறார் அவ்வடியார். ஆளுடைப் பிள்ளையார் உடனொரு பதிகம் பாட அம்மரம் பெண்பனையாகிக் காய்ப்பதாய்த் […]

Vendukol Padhikangal – Win Destiny Through Thirumurai

ஆழ்க தீயதெல்லாம் சூழ்க அரன் நாமமே! எண்ணிலா அற்புதங்கள் நிகழ்த்தியிருக்கும் இந்த அருட்பதிகங்களின் தொகுப்பினை எழுதத் தூண்டுகோலாய் இருந்தது இணையத்தில் கண்ட சிங்கை நண்பர் ஒருவரின் மடல். அதில் சிங்கை மற்றும் மலேசியாவில் தேவாரம், திருவாசகம் பாடல்களை பொதுவாய் சாவு நிகழ்ச்சிகளில் பாட உகந்ததென்றே பலரும் கருதுவதாக அவர் எழுதியிருந்தார். திருமணம் போன்ற மங்கல நிகழ்வுகளில் பாடத்தக்க பதிகங்கள் உள்ளனவா என்றும் கேட்டிருந்தார். அடியேன் அயர்ந்து போனேன். இந்த மூடத்தனத்துக்கு யார் பொறுப்பு? கடந்த நூற்றாண்டில் தமிழ்ச்சமுதாயத்தைச் […]

Prayer For Cure from Stammering and Other Speaking Troubles

நமசிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க! ஊமை, திக்குவாய்க் குழந்தைகள் அக்குறை நீங்கப் பாடவேண்டிய அருட்பாடல்களிவை. ஈழநாட்டுப் பௌத்தமன்னன் துணையுடன் தில்லைவாழ் அந்தணருடன் வாது செய்ய வந்த பௌத்தகுருவுடன் தில்லைவாழ் அந்தணர் சார்பாக மணிவாசகப் பெருமான் நடத்திய வாதின் போது அருளிய பாடல்களிவை. அவ்வமயம் அருகிலிருந்த ஈழமன்னனின் ஊமை மகள் மணிவாசகரால் ஒளிபெற்று ஒலிபெற்றுத் தன் திருவாயாலேயே வினாவிடை போல் பௌத்தகுரு தொடுக்கவிருந்த வாதுப் பொருளையெல்லாம் தானே பாடி தெளிவித்ததாய் வரலாறு. இதனை திருச்சாழலின் பாடல்வரிகளூடே அறியலாம். பின்னர் […]

Prayer For Success in Love & To Get Married

காதல் வெல்ல ஒரு பதிகம்: ஞானசம்பந்தப் பெருமான் திருச்செங்காட்டங்குடியில் சிறுத்தொண்டரைச் சந்தித்துவிட்டு வரும் வழியில் திருமருகல் என்ற தலத்தில் நிகழ்த்திய அற்புதமிது. அதிகாலைப் போதில் திருமருகல் மாணிக்கவண்ணர் கழல் தொழ தொண்டர் கூட்டத்துடன் ஆலயம் நோக்கி வந்து கொண்டிருக்கிறார் ஆளுடைப் பிள்ளையார். ஆலயத்தை அடுத்திருந்த தங்குமடமொன்றில் இளம்பெண்ணொருத்தி ஓலமிட்டழுவதையும், அவளருகே வாலிபன் ஒருவன் உயிரற்று விழுந்து கிடப்பதையும் கண்டிரங்கி நிற்கிறார். அஞ்சேல் என்று அபயக்கரமுயர்த்த அழுகையினூடே அப்பெண் தம் கதையைச் சொல்கிறார்: “ஐயன்மீர், நாங்கள் வைப்பூர் என்னும் […]

Prayer For Cure to Eyesight Deficiency, Blindness, Eye Related Diseases

நமசிவாய வாழ்க, நாதன்தாள் வாழ்க! விழியொளி பெற வேண்டிப் பாடும் பதிகம் வன்றொண்டர் சுந்தரர் சாரூப முக்தியெனும் சஹமார்க்கத்தைச் சுட்ட வந்த திருஅவதாரம். மீண்டுவாரா சன்மார்க்கமெனும் பரமுக்திக்கு முந்தைய சஹமார்க்கத்தில் யோகமும் உண்டு; போகமும் உண்டு. போகத்தின் உச்சத்தையும் உணர்த்தும் பொருட்டு அவருடன் கயிலையிலிருந்து இறங்கி வந்தவரே அவர்தம் துணைவியரான பரவையாரும், சங்கிலியாரும். தம்பிரான் தோழரென்று வழங்கப் பட்டாலும் இந்த இரண்டு பெண்டிரிடை அலைக்கழித்து இறுதியில், ‘வாழ்வாவது மாயம், இது மண்ணாவது திண்ணம், பாழ்போவது பிறவிக்கடல்’ (78-1) […]

Scroll to top