Ayyappan Song: கார்த்திகை அதிகாலை நீராடி in Tamil:
கார்த்திகை அதிகாலை நீராடி கடவுள் உன்திரு நாமம் பேர்பாடி
கண்களை மூடி உன் போவிலே இன்னிசை பாடுமென் நாவினிலே
ஹரிகர மைந்தா உன் சுப்ரபாதம் பாடும்
வரமொன்று தருவாயோ ஐயப்பனே (கார்த்திகை அதிகாலை)
ஹரிகர மைந்தா உன் சுப்ரபாதம் பாடும்
வரமொன்று தருவாயோ ஐயப்பனே (கார்த்திகை அதிகாலை)
காலைக் கதிரோனம் கரங்களை நீட்டிய
வேளையிலுன் தெய்வ சன்னதியில்
ஒருராக மாலையை திருவடி மீதினில்
படைத்திடும் வரம் வேண்டும் ஐயப்பனே (கார்த்திகை அதிகாலை)
இருமுடி தனை ஏந்தி நடந்திடும் பாதையில்
சிறுகல் போல் நானும் பிறப்பேனோ
வரும் அடியார் உனை வணங்கிடும் வேளையில்
எரிந்திடும் கற்பூரம் ஆவேனோ (கார்த்திகை அதிகாலை)
Add Comment