புல்லாங்குழலினை கையிலேந்தி, பெண்களை வசீகரிக்கும் நடையினை கொண்ட ஸ்ரீ கிருஷ்ணரை போற்றும் வகையில் இயற்றப்பட்டுள்ளது ஸ்ரீ நந்த நந்தன அஷ்டகம். கிருஷ்ணருக்கு உகந்த நாட்களில் இந்த அஷ்டகத்தை உச்சரித்து, பூஜை செய்தால், நம் கஷ்டங்கள் நீங்கி, மகிழ்ச்சியாக வாழ முடியும்.
Sri Nanda Nandana Ashtakam in Tamil:
ஸ்ரீ நந்த நந்தன அஷ்டகம்:
ஸுசாரு வக்த்ர மண்டலம் சுகர்ண ரத்ன குண்டலம் ।
ஸுசர்சிதாங்க சந்தனம் நமாமி நந்த நந்தனம் ॥ 1 ॥
ஸுதீர்க நேத்ர பங்கஜம் சிகீ சிகண்ட மூர்தஜம் ।
அனந்தகோடி மோஹனம் நமாமி நந்த நந்தனம் ॥ 2 ॥
ஸுனாஸிகாக்ர மௌக்திகம், ச்வச்ச தந்த பங்கித்கம் ।
நவாம்புதாங்க சிக்கணம், நமாமி நந்த நந்தனம் ॥ 3 ॥
கரேண வேணு ரஞ்சிதம் கதிகரீன்த்ரகஞ்ஜிதம் ।
து கூல பீத ஸுசோபனம் நமாமி நந்த நந்தனம்॥ 4 ॥
த்ரிபங்க தேஹஸுந்தரம் நகத்யுதி சுதாகரம் ।
அமூல்ய ரத்ன பூஷணம் நமாமி நந்த நந்தனம் ॥ 5 ॥
ஸுகந்த அங்க சௌரபம் உரோ விராஜி கௌஸ்துபம் ।
ஸ்புரிஜித் வத்ஸ லாஞ்சனம் நமாமி நந்த நந்தனம் ॥ 6 ॥
வ்ருந்தாவன ஸுநாகரம் விலாஸுநாக வாஸஸம்।
ஸுரேந்த்ரகர்வ மோசனம் நமாமி நந்த நந்தனம் ॥ 7 ॥
வ்ரஜாங்கனா சுனாயகம் ஸதா ஸுக ப்ரதாயகம் ।
ஜகன்மன ப்ரலோபனம் நமாமி நந்த நந்தனம்॥ 8 ॥
ஸ்ரீ நந்தநந்தனாஷ்டகம் படேத் யஸ்ரத் தயான்வித ।
தரேத் பவாப்திம் துஸ்தரம் லபேத்தத ன்க்ரீ யுக்தகம் ॥
கிருஷ்ண பகவானுக்கு உகந்த நாளான , கிருஷ்ண ஜெயந்தி அன்று இம்மந்திரத்தை முழு பக்தியுடன் உச்சரித்து பூஜை செய்து வழிபட்டால், எளிதில் அதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும்.
Also Read:
Shri Nanda Nandana Ashtakam Lyrics in Hindi | English | Bengali | Gujarati | Punjabi | Kannada | Malayalam | Oriya | Telugu | Tamil