Ayyappan Song: சொன்னால் இனிக்குது in Tamil:
சொன்னால் இனிக்குது
சுகமாய் இருக்குது
பொன்னாய் மணியாய்
உன் முகம் ஜொலிக்குது
ஹரிஹர புத்திர அவதாரமே
அதிகாலை கேட்கின்ற பூபாளமே
அணுவுக்குள் அணுவான ஆதாரமே
நான் அன்றாடம் படிக்கின்ற தேவாரமே.
வேதத்தின் விதையாக விழுந்தவனே
வீரத்தின் கணையாக பிறந்தவனே
பேதத்தை போராடி அழித்தவனே
ஞான வேதாந்த பொருளாக திகழ்பவனே.
வில்லுடன் அம்புடன் வேங்கைப் புலியுடன்
போர்க்களம் புகுந்தவனே
சொல்லி முடித்திடும் முன் வரும் பகையை
கிள்ளி எறிபவனே
அள்ளி எடுத்து அருள் தருபவனே
அன்பே வடிவாய் இருப்பவனே.
Add Comment