Avi Kudiyirukkum Avinankudi in Tamil:
॥ ஆவி குடியிருக்கும் ஆவினன்குடி ॥
ஆவி குடியிருக்கும் ஆவினன்குடி
திரு ஆவினன்குடி (2)
ஆவி குடியிருக்கும் ஆவினன்குடி (2)
அங்கு கொலுவிருக்கும் அழகு திருவடி
(என் ஆவி குடியிருக்கும் ஆவினன்குடி
அங்கு கொலுவிருக்கும் அழகு திருவடி
என் ஆவி குடியிருக்கும் ஆவினன்குடி
திரு ஆவினன்குடி)
பாவங்களைப் போக்கும் பால் காவடி (3)
தேன் பஞ்சாமிருதம் இனிக்கும் குகன் சேவடி (2)
(என் ஆவி … )
சேவல் எழுந்தாடும் வெற்றிக்கொடி (2)
சேந்தன் திருப்பாதம் பற்றிப்பிடி (2)
வேல் வந்து வரவேற்கும் வா இப்படி (2)
கேளாய் நீ நெஞ்சே என் சொல் படி (2)
(என் ஆவி … )
நீல மயில் ஆடும் கோயில் படி
நித்த நித்தம் காணும் நிலை எப்படி (2)
காலம்மெல்லாம் நினைந்து கண்ணீர் வடி (2)
வாழ்வுதரும் முருகன் வண்ணப் பொற் கழலடி (2)
(என் ஆவி … ).
Add Comment